யோகாவை நீண்ட நாள், நீண்ட நேரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்று இல்லை. உடனடி ரிலாக்ஸ் தரும் யோகப் பயிற்சிகளும் உள்ளன. இதில் முக்கியமானது `வீராசனா’.

தரையில் மண்டியிட்டு, பாதங்களை ‘ஆங்கில வி’போல விரித்து, பின்னங்கால்களில் (வஜ்ராசனம் நிலையில்) உட்கார வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். இப்போது, வலது பாதம் தரையில் பதியும்படி காலை மடிக்க வேண்டும். கால் மூட்டின் மீது வலது கை முட்டியை மடித்து வைக்க வேண்டும். உள்ளங்கையை கன்னத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். இடது கையில் சின் முத்திரை வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடி, இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் இதேபோல், இடது காலுக்குச் செய்ய வேண்டும்.

கவனிக்க: மூட்டுவலி, மூட்டு வீக்கம், ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பிரச்னை உள்ளவர்கள், இதைத் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்

மனதை அமைதிப்படுத்தும். எண்ண ஓட்டங்களைச் சீர்ப்படுத்தும்.

கவனத்திறன் அதிகரிக்கும். குழப்பமான மனநிலை நீங்கும்.

உடல், மனதின் உடனடியாக ஓய்வுக்கு, இது சிறந்த ஆசனம்.

சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பை சீராக்கும்.

தலைவலி, டென்ஷன், பதற்றம் நீங்கும்.

சீரற்ற மாதவிலக்கு சரியாகும்.

செரிமானப் பாதை, அடிவயிற்றில் உள்ள உறுப்புகளைப் பலப்படுத்தும்.

- ஆரோக்கியக் கலை அறிவோம்

- ப்ரீத்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

மாடல்: ஹரிதா

உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பிய படி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.