Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

‘பாகி’ என்ற படத்தின் டிரெய்லர்தான் இப்போது பாலிவுட் சென்சேஷன். பாகி என்றால் `கலகக்காரன்’. ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃப்தான் புதிய கலகக்காரன். அசத்தலான மார்ஷியல் ஆர்ட் வீரனாக மிரட்டி இருக்கிறார் ஜூனியர் ஷெராஃப். 

டைகரின் முதல் ஆசை, கால்பந்து வீரர் ஆவது. இந்தியாவில் கால்பந்துக்குப் பெரிய வரவேற்பு இருக்காது என்பதால், நடிக்க வந்தார்.  “இன்று வரை எனது உடலைக் கட்டுக்குலையாமல் வைத்திருப்பது கால்பந்துதான்” என்கிறார் டைகர். மனதுக்குப் பிடித்த விளையாட்டைப் போன்ற பயிற்சி வேறு இல்லை.

மார்ஷியல் கலைகளில் தேர்ந்தவர். புரூஸ்லீயின் ஏகலைவன். வாரம் ஏழு நாட்களும் மார்ஷியல் பயிற்சிகள் செய்கிறார். சிகரெட்டையோ, மதுவையோ தொட மாட்டார். அதற்கான மனஉறுதியை மார்ஷியல் கலைகள் தனக்குத் தருவதாகச் சொல்கிறார்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

டைகரை வாரம் ஏழு நாட்களும் ஜிம்மில் பார்க்கலாம். `உடற்பயிற்சியை ரசித்துச் செய்பவர்களுக்கு எந்த பிரேக்கும் தேவைப்படாது’ என்பது டைகர் ஸ்டேட்மென்ட்.

நாம் செய்யும் பயிற்சிகளின் ரிசல்ட் நல்லபடியாக வர ஒரு சீக்ரெட் சொல்கிறார் டைகர். அது, நல்ல தூக்கம். ஜிம்மில் சிரமப்பட்டுச் செய்த பயிற்சிகளை, தூக்கம் முறையாக உடலில் சேர்க்குமாம். எனவே, ‘ஜிம்வாசிகள் நன்றாகத் தூங்க வேண்டும்’ என்கிறார் பாலிவுட் புலி.

டைகரின் டயட்டில் புரோட்டின் அதிகமாக இருக்கும். காலையில், முட்டையின் வெள்ளைப்பகுதி மற்றும் ஓட்ஸ். மதியம், வேகவைத்த காய்கறி, சிக்கனோடு கொஞ்சம் பிரவுன் அரிசி. உடற்பயிற்சிகளுக்கு முன் புரோட்டின் ஷேக். இரவு உணவில் மீன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷ்ரத்தா கபூர், பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகள். `ஆஷிகி-2’ படத்தின் வெற்றி, ஷ்ரத்தாவின் பெயரை வடஇந்தியாவில் மேப்பில் இல்லாத ஊர்களுக்குக்கூட கொண்டுசென்றது. ஜாலியாக நடிக்க வந்தவர், பிறகு நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொண்டார். அதன் பின்னர்தான், தனது ஃபிட்னெஸ் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் ஷ்ரத்தா.

டீன் ஏஜ் முழுவதும் ஜிம்முக்கே போகாதவர் ஷ்ரத்தா. ஆனால், பேஸ்கட்பால் மற்றும் வாலிபால் விளையாடியதால், ஃபிட்டாகவே இருந்தார். ஓட்டப்பந்தயமும் இவரின் ஃபேவரிட் என்பதால், எந்த எக்ஸ்ட்ரா வெயிட்டும் இவர் உடலில் சேரவில்லை.

ஸ்டார் ஃபிட்னெஸ்

தற்போது, அதிகம் விளையாட முடியவில்லை என்பதால், தினமும் மூன்று மணி நேரம்கூட நடனம் ஆடுகிறார். `மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் சரியாக்கும் அதிசயம், நடனம்’ என்கிறார் ஷ்ரத்தா. தனது நடிப்புத் தொழிலுக்கும் அது உதவுகிறது என்பதால், பேபி இப்போது டபுள் ஹேப்பி.

எப்போதாவதுதான் அசைவம் சாப்பிடுவார் ஷ்ரத்தா. மற்றபடி, சுத்த சைவம்தான். பசித்தால்தான் சாப்பிடுவார். முடிந்தவரை காய்கறிகளைச் சாப்பிடுவார்.

உடற்பயிற்சிகள் பற்றிய டிப்ஸ் கேட்டால், சிரித்துவிடுவார் ஷ்ரத்தா. `எப்போதும் சந்தோஷமாக இருங்கள். எந்த வேளை உணவையும் தவிர்த்துவிடாதீர்கள்’ இந்த இரண்டும்தான் ஷ்ரத்தா எப்போதும் தரும் டிப்ஸ்.

உடற்பயிற்சிகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்வதில் தொடங்கி, தினம் 11 மணிக்கே உறங்கச் செல்வது, எட்டு மணிக்கு முன் இரவு உணவை உண்பது என, எல்லாவற்றையும் முறையாகச் செய்கிறார் ஷ்ரத்தா. அதுதான் தனது வெற்றியின் சீக்ரெட் என்கிறார்.