
உடலை வில்போல் வளைப்பதால், இதற்கு, `தனுராசனம்’ என்று பெயர். இதில், உடல், கால்களை வில்போல வளைத்து, கைகளை நாண் போல பயன்படுத்த வேண்டும். வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவும் ஆசனம் இது.
எப்படிச் செய்வது?
தரையில், குப்புறப் படுக்க வேண்டும். உள்ளங்கை மற்றும் தாடை தரையில் பதிவது முக்கியம். இப்போது, மூச்சை இழுத்தபடி, கைகளை நேராக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில், கால்களை மடித்து, கணுக்கால் அருகில் பிடித்து உடலை வளைக்க வேண்டும். அதாவது, வயிறு மட்டும் தரையில் படும்படி உடலை வளைக்க வேண்டும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்பலாம். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவனிக்க: இதயநோய், உயர் ரத்த அழுத்தம், குடலிறக்கம், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்
கல்லீரல், அடிவயிற்றுத் தசைகள், இனப்பெருக்க உறுப்புகள் வலுப்பெறும்.
கணையத்தில் ஏற்படும் சுரப்புகள் சீராகச் சுரக்கும் செரிமான இயக்கம், சிறுநீரக இயக்கம் மேம்படும்.
வாயுத் தொல்லைகள், மலச்சிக்கல் சரியாகும்.
நரம்பு, தசைகளில் இறுக்கங்கள் குறைந்து, தளர்வுத்தன்மை கிடைக்கும்.
சுவாசப் பிரச்னைகள் சீரடையும்.
மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும்.
- ஆரோக்கியக் கலை அறிவோம்
- ப்ரீத்தி, படங்கள்: ஜே.வேங்கடராஜ்
மாடல்: ஹரிதா
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பிய படி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.