Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

Published:Updated:
ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

க்‌ஷய் குமாருக்கு வயது 47. `ஏ.கே 47’ எனச் செல்லமாக அழைக்கலாம்.   ‘கான்’களின் கலவர தேசத்தில், தொடர்ந்து கமர்ஷியல் குமாராகத் தனக்கு எனத் தனி இடத்தைப் பிடித்துவைத்திருக்கிறார் இந்த `ரெளடி ரத்தோர்’. அக்‌ஷய், தனது முரட்டு உடலைப் பற்றிச் சொல்வது எல்லாம் ஒன்றுதான், “இந்த பிட்னெஸ்தான் நான்!”

அக்‌ஷயின் ஒரு நாள், அதிகாலை 4:30 மணிக்கே தொடங்கிவிடும். ஒரு மணி நேரம் ஸ்விம்மிங், அதன் பின் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகள், அதன் பின் உடற்பயிற்சிகள். கடைசி ஒரு மணி நேரம் யோகாவும் தியானமும். இது இல்லாத நாட்கள் அக்‌ஷயின் டைரியில் கிடையாது. இப்படித்தான் கடந்த 32 ஆண்டுகளாக பயிற்சி செய்துவருகிறார் இந்த `சப்சே படா கில்லாடி’. அப்படி என்றால் எல்லோரைவிடவும் கில்லாடி என அர்த்தம்.

அக்‌ஷய், இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் 8 பேக்கோ, 6 பேக்கோ வைத்தது இல்லை. அக்‌ஷயின் பாடி பில்டிங் முழுக்க முழுக்க இயற்கையானது. “ஆரோக்கியமான வாழ்க்கைக்குத்தான் நான் உடற்பயிற்சி செய்கிறேன். ஷோ செய்வதற்கு அல்ல” என்கிறார் அக்‌ஷய்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஆரோக்கியத்துக்கு குறுக்குவழியே கிடையாது

`தசைகள் வளரக் காத்திருக்க வேண்டும். உரம் போட்டு வளர்க்க முடியாது. நம் உடல் ஒன்றும் பலூன் கிடையாது... ஊதியதும் பெரிதாக’ என்கிறார் அக்‌ஷய். `பொறுமையுடன் வளர்க்கப்படும் உடலுக்கு ஆயுள் அதிகம், ஆரோக்கியமும் அதிகம்’ என்பதுதான் அக்‌ஷய் அழுத்திச் சொல்லும் ஃபிட்னெஸ் மந்திரம்.

எடை தூக்க வேண்டுமா?

“வெயிட் லிஃப்ட்டிங்தான் இளைஞர்களின் மத்தியில் பிரபலமான பயிற்சி. அதைவிட, நம் உடல் எடையை நாமே தூக்குவதுதான் பெஸ்ட்” என்கிறார் அக்‌ஷய். அதாவது, மரத்தில் தொங்குவது, தண்டால் எடுப்பது போன்றவற்றைச் சொல்கிறார். “இதனால், உடலின் அனைத்துப் பாகங்களில் இருக்கும் தசைகளும் நரம்புகளும் முறுக்கேறும்” என்பது, அக்‌ஷயின் அப்சர்வேஷன்.

புரோட்டின் சீக்ரெட்

அக்‌ஷயின் எடை 80 கிலோ. இவருக்குத் தினமும் 80 கிராம் புரோட்டின் வேண்டும். ஒரு முட்டையில் இருப்பது, சராசரியாக 3 கிராம் புரோட்டின். அப்படி என்றால் ஒரு நாளைக்கு 15 முட்டைகள் சாப்பிட வேண்டும்.

மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவதால், அக்‌ஷயால் இதைச் சமாளிக்க முடிகிறது.  எப்போதாவது அரிதாகச்  சில சமயங்களில் புரோட்டின் ஷேக்ஸ் எடுப்பார். மற்றபடி, இயற்கை புரோட்டினே அக்‌ஷயின் சாய்ஸ்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

புகை - ஃபிட்னெஸுக்குப் பகை

“உங்களுக்கு சிகரெட் முக்கியம் என்றால், பாடி பில்டிங்கை மறந்துவிடுங்கள்” எனச் சுருக்கமாக முடித்துக்கொள்கிறார் அக்‌ஷய். “வொர்க்அவுட்டுக்கு முக்கியம் ஸ்டாமினா. அதற்கு அடிப்படையே நுரையீரல்தான். அதையே பாழ்படுத்திவிட்டு, எப்படி வொர்க்அவுட் செய்ய முடியும்?” எனக் கேட்கிறார்.

“எளிமையான ஃபிட்னெஸ் ரகசியம் ஒன்றை சொல்லுங்கள்?” என்றால், அக்‌ஷய் சொல்வது இதுதான். “உங்க வீட்டில் சமைப்பதை மட்டும் சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருக்கலாம்.” என்கிறார், இந்த பாலிவுட் கிங்.

- கார்க்கிபவா