தரையில் கால்களை நீட்டி அமர்ந்து, ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். பின்னர், பத்மாசன நிலையில், அதாவது... வலது காலை மடக்கி, பின் இடது காலை மடக்கி, வலது கால் மேல் வைத்து உட்கார வேண்டும். முதுகுப் பகுதியில், வலது கையின் மணிக்கட்டை இடது கையால் பிடித்தபடி வைக்க வேண்டும். முதுகை நிமிர்த்தியபடி, மூச்சை இழுக்க வேண்டும். பின்னர், மூச்சை வெளியிட்டபடி, உடலை முன்புறம் வளைக்க வேண்டும். முன்நெற்றி தரையில் படும் வரை வளைக்கலாம். பின் மூச்சை இழுத்தபடியே பழைய நிலைக்குத் திரும்பி, மெதுவாக மூச்சை வெளியிட்டுக்கொண்டே நிமிர்ந்த நிலையில் சில விநாடிகள் உட்கார வேண்டும். இதேபோல் இடது காலை மடக்கி, பின் வலது காலை அதன் மேல் வைத்து மூன்று முறை செய்ய வேண்டும்.

கவனிக்க...

கர்ப்பிணிகள், சயாட்டிகா பிரச்னை இருப்பவர்கள், வெரிகோஸ் வெயின், அடி முதுகுவலி, மூட்டு வலி உள்ளவர்கள் மற்றும் காய்ச்சல், மாதவிலக்கு சமயம் இதைத் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்

முதுகெலும்பின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். இடுப்பு, தொடைத் தசைகள், வயிற்றுப் பகுதிக்குச் சிறந்த பயிற்சி.

குதிகால் பகுதி இரண்டு சிறுநீரகங்களுக்கும் ஒருவித அழுத்தத்தைத் தருவதால், சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு அழுத்தம் ஏற்படுவதால், உள்ளுறுப்புகள் பலமாகும்.

மலச்சிக்கல் சரியாகும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தொப்பை குறையும். செரிமான செயல்பாடுகள் சீராகும். அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை தடுக்கப்படும்.

நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். சுவாசப் பிரச்னைகள் சீராகும். சுவாசம் தொடர்பான நாட்பட்ட நோய்களின் வீரியம் குறையத் தொடங்கி, நோய்கள் குணமாகும் வாய்ப்புகளும் அதிகம்.

- ஆரோக்கியக் கலை அறிவோம்
- ப்ரீத்தி, படங்கள்: ச.ஹர்ஷினி
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.