Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

Published:Updated:
ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்
ஸ்டார் ஃபிட்னெஸ்

பாலிவுட்டில் இப்போது ‘யங், ஹாட்’ நடிகை யாரென்றால், கூகுளே கைப்பிடித்து அலியா பட் வீட்டுக்கு அழைத்துச் செல்லும். `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’, `ஹைவே’, `2 ஸ்டேட்ஸ்’ என வரிசையாக ஹிட்ஸ். நட்சத்திரக் குடும்பத்தில் இருந்து வந்தாலும், இந்தப் புகழுக்காக அலியா பட்ட சிரமங்கள் அதிகம். 23 வயதாகும் அலியாவின் எடை இப்போது 52 கிலோ. நடிப்பதற்கு வருவதற்கு முன்னர் அவரது எடை 68 கிலோ. முதல் பட ஆடிஷனில் அலியாவைக் கவனித்த இயக்குநர் கரன் ஜோஹர் `உன் வெயிட்டைக் குறைத்தால் நீ நடிக்கலாம்’ என்றிருக்கிறார். நடிகை ஆவதே அலியாவின் கனவு. பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு. ஆனால், தனது எடையே பிரச்னை என்றதும் நொறுங்கிவிட்டார். முதலில் எடையைக் குறைத்துவிட்டு பிறகு ஆடிஷனுக்குப் போயிருக்க வேண்டும் என தன்னைத்தானே நொந்துகொண்டார். ஆறே மாதங்களில் 16 கிலோ குறைத்து, அந்த வாய்ப்பைப் பெற்றார். இதோ, இப்போது இந்திய இளைஞர்களின் டிரீம் கேர்ள், பிஸி... பிஸி... பிஸி. இந்த ‘வெயிட் லாஸ் ஜர்னி’ பற்றி என்ன சொல்கிறார் அலியா?

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதைவிட, என் சுயமரியாதை அப்போது முக்கியமாகத் தெரிந்தது. ‘உருளைக்கிழங்கு மாதிரி இருந்துட்டு நடிக்க வந்துட்டா’ என அவர்கள் நினைத்திருப்பார்கள். அவர்கள் முன் நான் மாறிப்போய் நிற்க வேண்டும் என நினைத்தேன். அந்த எண்ணம்தான் என் எடையைக் குறைக்க உதவியது. ஃபிட்னெஸ் நமது கான்ஃபிடன்ஸைக் கூட்டும். அது நடந்தால், வெற்றிகள் தானாக நம்மிடம் வரும்” என்கிறார்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

இயல்பிலேயே அலியாவுக்கு ஸ்லிம் உடல்வாகு. எடை அதிகரிக்கக் காரணம் அவரது லைஃப்ஸ்டைலும் உணவுப்பழக்கமும்தான். ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பீட்ஸா, பானிபூரி என வாழ்ந்த அலியா, முதலில் கைவைத்தது அவரது டயட்டில்தான். இப்போது, தினமும் எட்டு முறை சாப்பிடுகிறார். ஆனால், எல்லாம் அவரது உள்ளங்கை அளவே. “நமக்கு பிடிச்ச ஒண்ணு வேணும்னா, நமக்கு பிடிச்ச இன்னொண்ணை விட்டுக்கொடுக்கலாம்” என்பது அலியா பன்ச்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

டிரெட் மில்தான் அலியாவின் காதலன். ஜிம்முக்குள் சென்றாலே ஓடத் தொடங்கிவிடுவார். 45 நிமிடங்களில் முடிந்த அளவு கலோரிகளை கரைத்துவிட்டுதான் நிறுத்துவார். “ஒவ்வொருவருக்கும் பிடித்த டாஸ்க் ஏதாவது இருக்கும். அதை செய்தால் ஈஸியா கலோரிகள் கரையும். எனக்கு கார்டியோ பயிற்சிகள் பிடிக்கும்” என்பது அலியா சீக்ரெட்.

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism