Published:Updated:

வெற்றிக்கு 5 வழிகள்

வெற்றிக்கு 5 வழிகள்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிக்கு 5 வழிகள்

ஜோஷ்னா சீக்ரெட்

வெற்றிக்கு 5 வழிகள்

ஜோஷ்னா சீக்ரெட்

Published:Updated:
வெற்றிக்கு 5 வழிகள்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிக்கு 5 வழிகள்
வெற்றிக்கு 5 வழிகள்

ஜோஷ்னா சின்னப்பா, ஸ்குவாஷ் தேவதை. 2003-ம் ஆண்டில், 19 வயதுக்கு உட்பட்டவர்களின் பிரிவில், பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. அர்ஜுனா விருது, காமன்வெல்த் தங்கப்பதக்கம் என தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் தாரகை.

“அம்மா, அப்பா, தம்பி, தாத்தா, பாட்டி, நான். இதுதான் எங்க குடும்பம். நான் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தேன். நான் சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல கவனம் செலுத்தினேன். என் அப்பா ஸ்குவாஷ் வீரர். எல்லா விளையாட்டுக்களிலும் ஆர்வம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் மொத்தக் கவனத்தையும் ஸ்குவாஷில் செலுத்தினேன். நான் நிச்சயம் அதில் சாதிப்பேன், என்னால் முடியும் என்கிற உள்ளுணர்வு இருக்கும்.

உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நிறைய பயிற்சிகள் எடுப்பேன். விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் முக்கியமானவை - ஆரோக்கியமான உணவு, கவனம், பயிற்சி, தன்னம்பிக்கை, மனஅமைதி என ஐந்து விஷயங்கள். இவைதான் எப்போதும் என் முன்னுரிமை. எனக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். என் மன அமைதிக்கு என் நாய்க்குட்டி ஜாராவின் பங்கு அதிகம்.

ஸ்குவாஷ் தவிர, பாட்மின்டன், டென்னிஸ் நேரம் கிடைக்கும்போது விளையாடுவேன். ஓய்வு என்பது உறக்கம் மட்டும் இல்லை. நாம் தொடர்ச்சியாகச் செய்யும் வேலையில் இருந்து மாறுபட்டு, வேறு வேலையில் கவனம் செலுத்துவதும் ஓய்வுதான். எனக்கு ஓய்வு என்பது புத்தகம் படிப்பதும், பிடித்த இடத்துக்குச் செல்வதும்தான். மனதை அமைதிப்படுத்த தினமும் தியானம் செய்வேன்.

சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரை இஷ்டம் போல சாப்பிடுவது கிடையாது. மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதிலாக ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவேன். பயிற்சிக்கு முன்பும் பயிற்சிக்குப் பின்பும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக ஆரோக்கியமாக உண்பேன்.

என் உணவில் எப்போதும் பச்சைக் காய்றிகள், பழங்கள், நட்ஸ் இருக்கும். இதனால், பேலன்ஸ்டு டயட் இருக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜி  கிடைத்துவிடும். எப்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வேன். போதுமான அளவு தண்ணீர், ஃப்ரெஷ் ஜூஸ் அருந்துவேன்.

ஸ்கின் ஃப்ரெஷ்ஷாக இருக்க தினமும் காலை, மாலை ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவேன். இரவு தூங்கும் முன் மாய்ஸ்சரைசர் உபயோகிப்பேன். வாரம் ஒருமுறை ஃபேஸ்பேக் போடுவேன். தொடர்ந்து, வெயில், தூசு மற்றும் பயிற்சியின்போது தலையில் வியர்வை இருந்துகொண்டே இருக்கும். இதனால், வாரம் இரண்டு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வேன்.

ஒரு நாளில் மூன்று வேளை ஸ்குவாஷ் பயிற்சிசெய்வேன். ஓடியாடி விளையாடுவதே பெரிய எக்சர்சைஸ்தான். தவிர, தினமும் ஃபிட்னெஸ் பயிற்சிகளும் செய்வேன். எப்போதும் ஒரேமாதிரியான பயிற்சி செய்வது இல்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயிற்சிகள்.  அதில் எடைப் பயிற்சி, கடற்கரையில் ஸ்குவாஷ் பயிற்சி போன்றவை இருக்கும். இப்படி உடற்பயிற்சி, உணவு என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்தால், ஃபிட்டா, ஹெல்த்தியா இருக்கலாம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பி.கமலா

படம்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism