Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

Published:Updated:
ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்
ஸ்டார் ஃபிட்னெஸ்

டிக்க வந்த புதிதில் நயன்தாராவிடம் “இப்படிக் குண்டா இருக்கீங்களே” எனக் கேட்டபோது, “எனக்குச் சாப்பிடப் பிடிக்கும். சினிமாவுக்காக எல்லாம் அதை விட முடியாது” என்றார். ஆனால், விரைவில் ஒல்லி பெல்லி ஆகி ஆச்சரியமூட்டினார். 10 வருடங்களுக்கும் மேலாக இண்டஸ்ட்ரியில் இருந்தாலும் இப்போதும், கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட், மோஸ்ட் ப்யூட்டிஃபுல், மோஸ்ட் டெடிக்கேட்டட் நாயகி நயன்தான். இந்த எனர்ஜியின் ரகசியம் என்ன?

‘தொழில் வேறு, பெர்சனல் வேறு. அது போலத்தான் தூக்கமும் பிரச்னைகளும்’ என்கிறார் நயன். என்ன நடந்தாலும் தினமும் எட்டு மணி நேரம் கட்டாயம் ஸ்லீப்பிங் மோடில் இருப்பார் நயன். “என்னை ஃப்ரெஷாகவும், எனர்ஜியாகவும் வைத்திருப்பது எட்டு மணி நேர ஆழ்ந்த தூக்கம்தான்” என்கிறார் நயன்.

தூக்கம் வருவது அத்தனை எளிதா? நிச்சயம் இல்லை. அதற்காக மெனக்கெடுகிறார். வொர்க்அவுட்டுக்கு பெர்சனல் டிரெய்னர் வைத்திருப்பதைப் போல யோகாவுக்காகப் பிரத்யேக டீச்சர் உண்டு. யோகா, தன்னை இளமையாகவும் அமைதியாகவும் இருக்க உதவுவதாகச் சொல்கிறார் நயன்.

நயனின் டெடிக்கேஷன் எல்லோரும் அறிந்ததே. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றால், நயன் கேட்கும் சலுகை ஒன்றே ஒன்றுதான். அவர் தங்கும் இடத்தில் ஜிம் இருக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் வொர்க்அவுட்டைத் தள்ளிப்போட மாட்டார். “நான் எனக்காகச் செய்துகொள்ளும் விஷயங்கள் குறைவு. அதில் வொர்க்அவுட் முக்கியமானது” என்கிறார் இந்த லேடி பில்லா.

நயன் தனது ஸ்லிம் உடலுக்காக ‘புதினா சிகரெட்’ பிடிப்பதாகச் செய்தி வெளியானது. அதை மறுத்த நயன், “எந்த விதத்திலும் புகை நமக்கு நல்லது அல்ல. என் தோற்றத்துக்குக் காரணம் டயட்டும், வொர்க்அவுட்டும் மட்டுமே” என்றார். டயட் விஷயத்திலும் நயன் ஸ்ட்ரிக்ட். பிடித்ததைச் சாப்பிடுவது நயனின் ரிலாக்ஸ் டெக்னிக். ஆனால், இப்போது டயட்டீஷியன் சொல்வதைத் தாண்டி அதிகம் சாப்பிடுவது இல்லை.

நயன், கேரளாவைச் சேர்ந்தவர். அங்கே இருக்கும் புத்துணர்ச்சி நிலையங்களுக்கு அடிக்கடி சென்று மசாஜ் செய்துகொள்வார். இது,  உடலையும் மனதையும் புத்துணர்வு பெறச்செய்வதோடு, சருமத்துக்குப் பொலிவையும் கூட்டுவதாகச் சொல்கிறார்.

ஓடி ஒளிவது நயனுக்கு எப்போதும் பழக்கம் இல்லை. எதையும் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகவே இருப்பார். உங்கள் அழகு எது என ஒரு பேட்டியில் கேட்டபோது நயன் சொன்ன பதில், “என் தைரியம்” என்பதுதான். எதையும் சந்திக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் எப்போதும் உடன் இருக்கும் என்பது நயன் டிப்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism