Published:Updated:

உடலினை உறுதிசெய் - 15

உடலினை உறுதிசெய் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
உடலினை உறுதிசெய் - 15

அர்த்த ஷலபாசனா

உடலினை உறுதிசெய் - 15

லபாசனம் என்பது வெட்டுக்கிளியின் தோற்றத்தைப்போன்ற ஆசனம். இதைச் செய்வது மிகவும் கடினமானது என்பதால், ஆரம்பநிலையில் முயற்சிக்க அறிமுகம் ஆனது `அர்த்த ஷலபாசனம்’ என்பார்கள்.

தரையில் குப்புறப்படுத்து, கைகளை முன்புறம் நீட்டி, உள்ளங்கையைத் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, மூச்சை இழுத்தபடி வலது கை மற்றும் இடது காலை மேலே உயர்த்தி, மூச்சை வெளியேவிட்டபடி இறக்க வேண்டும். அதேபோல், மூச்சை இழுத்தபடி இடது கை மற்றும் வலது காலை உயர்த்தி, மூச்சை வெளிவிட்டபடி இறக்க வேண்டும். பிறகு, மூச்சை இழுத்தபடி கைகள், கால்களை ஒரே நேரத்தில் உயர்த்தி, மூச்சை வெளிவிட்டபடி இறக்க வேண்டும். இதுபோல மூன்று முறை செய்யலாம்.

உடலினை உறுதிசெய் - 15

கவனிக்க

குடலிறக்கம், இதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்கள், கர்ப்பிணிகள் செய்ய வேண்டாம்.

பலன்கள்

முதுகுவலி சரியாகும்.

தொடை, கெண்டைக் கால் சதைப் பகுதி ஆகியவற்றை வலுவாக்கும்.

உடல்பருமனாக உள்ளவர்கள் இதைச் செய்துவர, எடை குறையும்.

கை, கால் தசைகள் வலிமையாகவும், தளர்வுத்தன்மையுடனும் இருக்கும்.

தொடை, இடுப்பு, வயிற்றில் உள்ள தேவை இல்லாத கொழுப்பைக் கரைக்கும்.

இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாடு சீராகும்.

அடிவயிறு, வயிறு தொடர்பான பிரச்னைகள் தீர உதவும்.

உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.

- ஆரோக்கியக் கலை அறிவோம்

- ப்ரீத்தி, படங்கள்: ச.ஹர்ஷினி

மாடல்: பத்மப்ரியா

உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

உடலினை உறுதிசெய் - 15

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.