ஹெல்த்
Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ல்லுவுட்டில் மாஸ் ஹிட் அடித்திருக்கிறது துல்கர் சல்மான் நடித்த ‘கம்மட்டிப்பாடம்’. தனது கரியரில் மிக முக்கியமான படம் இது என்று சொல்லும் துல்கர், இதற்காக இழந்தது 10 கிலோ. மலையாளத்தில் ஒரு படம் எடுப்பதற்குக் குறைவான நாட்களையே எடுத்துக்கொள்வார்கள். `கம்மட்டிப்பாடம்’ பீரியட் படம் என்பதால், இன்னொரு கேரக்டருக்கு எடை குறைத்தாக வேண்டும். சொன்னபடி, சொன்ன தேதியில் இளைத்துவந்து நின்றார் துல்கர். அந்த அர்ப்பணிப்புதான் அவரை இந்தத் தலைமுறை மலையாள ஹீரோக்களில் வின்னர் ஆக்கியிருக்கிறது. சொன்னபடி எல்லாம் கேட்கிறது அவர் உடல். அது எப்படிச் சாத்தியமாகிறது?

துல்கருக்கு பைக் ரேஸ் என்றால் சிறு வயது முதலே உயிர். `பெங்களூர் டேஸ்’ படத்தில் ரேஸராக நடித்தபோது, பல ஸ்டன்ட் காட்சிகளை அவரே ரிஸ்க் எடுத்துச் செய்தார். பைக் ரேஸிங்குக்கு ஃபிட்னெஸ் மிக முக்கியம். அதனால், சிறு வயதில் இருந்தே துல்கருக்குத் தனது எடை பற்றிய கவனம் உண்டு. எனவே, எடையை எப்போதும் அதிகரிக்கவிட மாட்டார்.

துல்கரின் உயரம் 178 செ.மீ. எடை 78 கிலோ. இந்த இரண்டும்தான் ஃபிட்னெஸின் அடிப்படை என்கிறார் துல்கர். “நம் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தாலே ரத்த ஓட்டம் முதல் எல்லாம் சரியாக அமைந்து, உடலும் உள்ளமும் உற்சாகமாக இருக்கும்” என்பது ரகசிய டிப்ஸ்.

“சிரிப்பதைவிட வேற என்ன உடற்பயிற்சி தேவை? வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிரிக்கிறேன். கிடைக்காதபோது அதை உருவாக்கிச் சிரிப்பேன்” எனும் துல்கரின் ஸ்மைலுக்கு ரசிகைகள் ஏராளம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் சீக்ரெட்டையும் இப்படி உடைத்துவிட்டார் துல்கர்.

வீட்டுச் சமையலை வெளுத்துக்கட்டுவது துல்கரின் வழக்கம். ஆனால், எப்போது சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு மட்டும் தப்பாது. அதற்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்யாமல் தூங்க மாட்டார். `ஜிம் விஷயத்தில் துல்கர் ஒரு முதல் பெஞ்ச் மாணவன்’ என்கிறார்கள் நண்பர்கள்.

`பாகுபலி 2’-ல் துல்கரும் நடிப்பார் என்ற செய்தி வெளியானது. அது உண்மையா எனக் கேட்டபோது, “அது தெரியலை. ஆனா, எனக்கு பிரபாஸைப் பார்க்கணும். அவர் ஃபிட்டான உடல் பத்தி பேசணும்... இன்ஸ்பிரேஷன் படத்துக்கு மட்டும் அல்ல. வொர்க்அவுட்டுக்கும் தேவை. அப்படி ஒன்று அமைந்தால் ஜிம்முக்குப் போவது நமக்குத் தனி வேலையாகத் தெரியாது; ஜாலியாகத் தெரியும்” என்கிறார் சேட்டன்.

- கார்க்கிபவா