ஹெல்த்
Published:Updated:

எவர் கிரீன் த்ரிஷா

எவர் கிரீன் த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
எவர் கிரீன் த்ரிஷா

என்ன சீக்ரெட்?

எவர் கிரீன் த்ரிஷா

ஹீரோயினில் இருந்து தற்போது வெளியாக உள்ள ‘நாயகி’ படத்தில் பாடகியாகவும் அப்கிரேட் ஆகியிருக்கிறார் த்ரிஷா. 1999-ல் ஜோடி படத்தில், சிம்ரனுக்கு ஃபிரெண்டாக நடித்தபோது எப்படி இருந்தாரோ, அதேபோல ஸ்லிம்மாக, ஃபிட்டாக இருக்கிறார். இதன் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டோம்...

என்னோட ஃபிட்னெஸ் இரண்டு விதமாக இருக்கும். நான் ஷூட்டிங் போகும்போது ஒருவிதமான டயட், ஃபிட்னெஸ் ஃபாலோ செய்வேன். ஷூட்டிங் இல்லாதபோது ரிலாக்ஸான ஃபிட்னெஸ் ஃபாலோ செய்வேன். ஷூட்டிங் இல்லாதபோது நீண்ட நேரம் தூங்கி எழுவேன். உடற்பயிற்சி எல்லாம் மாலையில்தான் செய்வேன்.

தினசரி யோகா செய்வேன். வீட்டுக்கு வந்து யோகா சொல்லித்தர மாஸ்டர் இருக்காங்க. ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை நான் செய்வது இல்லை.  குறிப்பிட்ட கால இடைவெளியில என் ஃபிட்னெஸ் டிரெயினர் பயிற்சிகளை மாற்றிக்கொண்டே இருப்பார். ஷூட்டிங் முடிந்தால், ஒன்றிரண்டு வாரங்கள் ரெஸ்ட் கிடைக்கும். அந்த நேரத்தில்தான், யோகா, வொர்க்அவுட் டிரெயினரைச் சந்தித்து எனக்கான பயிற்சிகளைக் கேட்டுக் கற்றுக்கொள்வேன். அதன் பிறகு அந்தப் பயிற்சிகளை வீட்டில் செய்வேன்.

ஷூட்டிங் ஆரம்பிச்சா, வொர்க்அவுட், யோகா செய்ய நேரம் கிடைப்பது கஷ்டம். அதுக்காக வொர்க்அவுட் செய்றதைத் தவிர்க்கவும் முடியாது. அதனால, ஷூட்டிங் போற இடத்தில் நான் தங்கும் ஹோட்டல் நீச்சல்குளத்தில் பயிற்சி செய்வேன்.  கிடைக்கிற நேரத்தில வொர்க்அவுட், யோகா செய்துகொள்வேன்.

உணவு விஷயத்தில் ரொம்ப கட்டுப்பாடுகள் இல்லை. பொதுவாகவே எனக்கு ஒல்லியான உடல்வாகுதான். வார இறுதி நாட்களில் நல்லா சாப்பிடுவேன். ஷூட்டிங் நேரத்தில் சாண்ட்விச், நூடுல்ஸ்னு எதுவானாலும் அளவா சாப்பிடுவேன். சிவப்பரிசி எடுத்துக்குவேன். நிறைய கீரை சாப்பிடுவேன். பச்சைக் காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும். புரதச்சத்துக்கு நிறையப் பருப்பு வகைகள் எடுத்துக்குவேன். ஒருநாள் ஒருவேளை,  நிறைய, நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக்குவேன். நெய், வெண்ணெய் இல்லாமல் என்னுடைய எந்த ஒரு உணவும் இருக்காது.

நிறையத் தண்ணீர் குடிப்பேன். அது நம் உடலை டீடாக்ஸ் செய்யும். தினமும், இளநீர், ஆரஞ்சு ஜூஸ், ஃப்ரூட்ஸ் சாலட் சாப்பிடுவேன். எங்கே போனாலும் என் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கும். 

ஷூட்டிங், ஃபங்ஷன் தவிர்த்து மற்ற நேரங்களில் எந்த ஒரு மேக்அப்பும் செய்ய மாட்டேன். வீட்ல இருக்கும்போது, சருமத்துக்கு மாய்ஸ்சரைசிங் கிரீம் மட்டும்தான். டைம் கிடைக்கும்போது எல்லாம் பார்லருக்குப் போய், புரோட்டின் டிரீட்மென்ட், ஹெட் மசாஜ், மெனிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வேன். எனக்கு இயற்கையாகவே அடர்த்தியான முடி. அதைப் பராமரிக்கக் கொஞ்சம் கூடுதல் கேர் எடுத்துக்குவேன்.

எங்க வீட்டில் இருக்கும் நாய்க்குட்டிதான் என் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர். அதனுடன் ஓய்வு நேரத்தைச் செலவிடுவேன். தவிர, எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்கதான் என்னுடைய எனர்ஜி. அமெரிக்கன் சீரியல், ஃபேஷன் அப்டேட்ஸ் பார்க்கிறது, ஃப்ரெண்ட்ஸோட அரட்டை அடிக்கிறது எல்லாம் எனக்கு உற்சாகத்தைத் தரும். வீட்டில் ஃப்ரியா இருக்கும்போது, சமையல் செய்வதும் பிடிக்கும்.

- பி.கமலா