கால்களை அகட்டி, கைகளைப் பின்னால் கோத்தபடி, நேராக நிற்க வேண்டும். இது பக்கவாட்டில் செய்யக்கூடிய ஆசனம் என்பதால், வலது கால் முட்டியை மடக்கி, வலது புறம் தள்ளிவைக்க வேண்டும். இடது காலை முடிந்த அளவு இடது புறம் தள்ளிவைத்துத் தரையில் பதித்து உடலைச் சமநிலையில் இருக்கச்செய்ய வேண்டும். இப்போது, மூச்சை இழுத்தபடி இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை விட்டபடி பக்கவாட்டில் உடலை வலது புறம் வளைத்து, வலது கையால் வலது காலைத் தொட வேண்டும். இடது கை மூட்டு காதோடு ஒட்டியபடி கைகள் சாய்வாக இருக்கட்டும். சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை இழுத்தபடி கைகளை நேராக்கி, பழைய நிலைக்கு வந்து, மூச்சை விட்டபடியே நேராக நிற்கும் நிலைக்கு வர வேண்டும். இதேபோல, இடது பக்கமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்யலாம்.

கவனிக்க: கால் வலி, நரம்புப் பிரச்னை, கை நடுக்கம் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

பலன்கள்

நினைவுத்திறன் அதிகரிக்கும். பள்ளி மாணவர்கள் செய்திட, நல்ல பலன் கிடைக்கும்.

கால் தசைகள், எலும்புகள் உறுதியாகும். உடலின் சமநிலை (Balance) சரியாக உதவும்.

முதுகு வலி, கழுத்துவலி உள்ளவர்கள் செய்திட, வலி குறையும்.

தொடைப் பகுதி, இடுப்பு, மூட்டுக்கள், கணுக்கால் வலுவடையும்.

முதுகெலும்பு, இடுப்பு, தோள்பட்டை, தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதிக்கு ஸ்ட்ரெச்சிங் கிடைக்கும்.

வயிற்றினுள் உள்ள உள்ளுறுப்புகளுக்கு மசாஜ் கிடைக்கும்.

- ப்ரீத்தி

படங்கள்: ச.ஹர்ஷினி

மாடல்: பத்மப்ரியா

உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.