கால்களை உயர்த்திச்செய்யும் ஆசனம் என்பதால், இதற்கு உத்தன்பந்தாசனம் என்று பெயர். தரையில், மல்லாந்துப் படுத்து, உள்ளங்கையைத் தரையில் பதிக்க வேண்டும். பிறகு, மூச்சை இழுத்து அப்படியே நிறுத்தி, கால்களை மேலே உயர்த்த வேண்டும். பின், இயல்பாக 10 முறை மூச்சை இழுத்துவிட வேண்டும். பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே கால்களைக் கீழே இறக்க வேண்டும். இறுதியாக, கால்களைச் சற்று அகட்டிவைத்து ஓய்வு எடுக்கலாம். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும். பயிற்சி முடித்து எழும்போது, இடது பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.

கவனிக்க: அடி முதுகுவலி, சயாட்டிக்கா, குடலிறக்கப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்

இடுப்புத் தசைகள் அழுத்தப்பட்டு, கால்கள் தூக்கப்படுவதால், பின் இடுப்பு, இடுப்புச் சதை உறுதியாகும். வயிற்றைச் சுற்றி உள்ள கொழுப்பு கரையும்.

வயிற்றுத் தசைகள் உறுதியாகும். நெஞ்சு, வயிற்றுப் பகுதி ஃபிட்டாக இருக்கும்.

ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்குக் கால்களின் வளைவுத்தன்மை அதிகரிக்க இந்தப் பயிற்சி உதவும். ஓடும்போது சுளுக்கு, வலி ஏற்படாது. தடகள விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அவசியம் செய்யலாம்.

தொடை சதை கரைந்து ஃபிட் ஆகும்.

கை, கால் இணைப்புகளில் ரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவும்.

செரிமானக் கோளாறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்.

இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், குடல் ஆகிய உள்ளுறுப்புகள் பலமாகும்.

- ப்ரீத்தி

படங்கள்: மா.பி.சித்தார்த் மாடல்: ஜெனி

உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.