Published:Updated:

''மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், 6 மணிக்கு டின்னர்..!’' கறார் டயட் அமித் பார்கவ் #FitnessTips

''மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், 6 மணிக்கு டின்னர்..!’' கறார் டயட் அமித் பார்கவ் #FitnessTips
''மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், 6 மணிக்கு டின்னர்..!’' கறார் டயட் அமித் பார்கவ் #FitnessTips

சின்னத்திரை நாயகன் அமித் தனது ஃபிட்னெஸ் குறித்து விவரிக்கிறார்

விஜய் டி.வி-யின் `கல்யாணம் முதல் காதல் வரை' மூலம் பல குடும்பங்களுக்கு அர்ஜூனாகப் பரிச்சயமானவர் அமித் பார்கவ்! சீரியல் மட்டுமன்றி, `என்னமோ ஏதோ', `மிருதன்', `குற்றம் 23' போன்ற படங்களில் நடித்திருப்பவர். இப்போது மீண்டும் சின்னத்திரைப் பக்கம் தலைகாட்டியிருக்கிறார். `நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் போலீஸ் அதிகாரி விக்ரமாக வலம்வருகிறார்! கூடவே பிரபுதேவா நடிக்கும்  `சார்லி சாப்ளின் - 2' திரைப்படத்தில்  நடித்துவரும் அமித்திடம் அவரது பெர்சனல் ஃபிட்னெஸ் குறித்துக் கேட்டோம்...


``எக்ஸர்சைஸ், டயட்... ரெண்டுல ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்குறது எது?" 

``நான் பேசிக்கா டயட்ல கான்சியஸா இருப்பேன். `என்ன சாப்பாடு'ங்கறதவிட `எப்போ சாப்பாடு'ங்கறதுலதான் என்னோட கவனமெல்லாம் இருக்கும். அந்தளவுக்கு என் வாழ்க்கையில `டைமிங்' ரொம்ப முக்கியம்! சாப்பாடுனு வந்துட்டா சாம்பார் சாதம், தயிர் சாதம் மாதிரியான `தென்னிந்திய' உணவுகள்தான் என்னோட ஃபேவரைட். பிடிச்ச சாப்பாட்டை, சரியான நேரத்துல சாப்பிடுவேன். காலை டிபனை எட்டு மணிக்கு முன்னாடி சாப்பிட்டிருவேன்; லஞ்ச் ஷார்ப்பா ஒரு மணிக்கு; டின்னர், ஈவினிங் ஆறு மணிக்கு!
இது, என்னோட தனிப்பட்ட பழக்கம்தானே தவிர, யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். பொதுவா, `தூங்கப்போறதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டு முடிச்சிருக்கணும். அப்போதான் செரிமானப் பிரச்னை ஏற்படாது'னு சொல்வாங்க. நான் அதுல கொஞ்சம் ஃபாஸ்ட். `ஆறு மணிக்கே சாப்பிட்டு முடிச்சுட்டா, அதுக்கப்புறம் பசிக்காதா உங்களுக்கு?'னு நிறையபேர் எங்கிட்ட கேப்பாங்க... உண்மையைச் சொல்லணும்னா, எனக்குப் பசிக்காது. நைட் 11 மணிக்குத் தூங்கினாலும், இடையில பசிக்காது. நம்மை நாம எப்படி பழக்கிக்கிறோம்ங்கிறதுலதான் எல்லாமே இருக்கு. என் உடம்பு இதுக்குப் பழகிடுச்சு. அதனால நோ ப்ராப்ளம்! காலை சாப்பாட்டுக்கு முன்னாடியும், நைட் சாப்பாட்டுக்கு அப்புறமும், `ஆப்பிள் சிடர் வினிகர்' (Apple Cider Vinegar) ரெண்டு டீஸ்பூன் சாப்பிடுவேன். உணவு மூலமா உடம்புக்குக் கிடைக்குற கெட்ட கொழுப்பை அது உடம்புல சேரவிடாது.’’

``பேலியோ (Paleo) மாதிரி ஏதாச்சும் டயட் ஃபாலோ பண்றீங்களா?’’ 

``மேல சொன்ன ஷெட்யூலை கரெக்டா ஃபாலோ பண்ணுவேன், அவ்வளவுதான். சாப்பாட்டைப் பொறுத்தவரை `டைமிங்' சரியில்லாமப் போறதுதான் உடல் எடையை அதிகரிக்கும். அதேநேரத்துல சிலர் உடல் எடையைக் குறைக்க பேலியா, கீடோஜெனிக் டயட்னு (Ketogenic diet) நிறைய டயட் வகைகளை ஃபாலோ பண்றாங்க. நானும் அதுமாதிரி ஒண்ணு ரெண்டை ட்ரை பண்ணியிருக்கேன். ஆனா ஃபாலோ பண்ண முடிஞ்சதில்லை. காரணம் `இதையெல்லாம் சாப்பிடலாம், இதையெல்லாம் சாப்பிடக் கூடாது, இந்த நேரத்துல இதைச் சாப்பிடணும்'னு யோசிச்சு, நிறைய ரெஸ்ட்ரிக்ஷனோட என்னால வாழ முடியாது. அதுக்கான தேவையோ, நிர்பந்தமோ இதுவரைக்கும் எனக்கு வராதது முக்கியக் காரணம். என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த உந்துதலும் காரணமும் இல்லாம, கடமைக்காக எதையும் செய்யக் கூடாது. அப்படி செய்யறதால, எந்தப் பலனும் இருக்காது. மோடிவேஷன் இஸ் மஸ்ட் ஃபார் எவ்ரிதிங் (Motivation is Must For Everything!).
 

``நீங்க பண்ற எக்ஸர்சைஸ் பத்திச் சொல்லுங்களேன்..."

``தினமும் காலையில ஜாக்கிங் இல்லைனா சைக்கிளிங் போயிடுவேன். ஜிம்முக்குப் போய் பழக்கமில்லை. `நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல்ல போலீஸா நடிக்கிறதால, ஆர்ம்ஸ் ஃபிட்னெஸுக்கு சில எக்ஸர்சைஸ் தனியா பண்ணினேன். புஷ்அப்ஸ், சிட்-அப்ஸ் மாதிரியான வொர்க்அவுட்ஸெல்லாம் வீட்லயே பண்ணிக்குவேன். ஜிம் போறதெல்லாம், பாடி-பில்டிங் அல்லது புரொஃபஷனல் ஃபிட்னெஸ் எதிர்பார்க்குற ஆள்களுக்குத்தான். அந்த வகையில, ஜிம்முக்குப் போய் வொர்க்-அவுட் பண்ணணும்ங்கிற அவசியமும் தேவையும் இதுவரைக்கும் வரலை. இனிமே தேவைப்பட்டா, செய்வேன். இப்போதைக்கு இது மட்டும்தான். சிலர், `எக்ஸர்சைஸ் செய்யறதால ரிலாக்ஸா ஃபீல் பண்றேன்’னு சொல்வாங்க. என்னைக் கேட்டா எக்ஸர்சைஸ் ஸ்ட்ரெச் செஞ்சா அதோட தாக்கம், வலி உணர்வெல்லாம் கொஞ்சமாவது இருக்கணும். ரிலாக்ஸா ஃபீல் பண்ணின, அது தப்பான எக்ஸர்சைஸ். 

தினமும் புத்துணர்ச்சியோட செயல்பட, எக்ஸர்சைஸ் ரொம்ப உதவியா இருக்கு. நேரமில்லாததால எக்ஸர்சைஸ் பண்ணலைனு சொல்றவங்களும் இருக்காங்க. இவங்க, வாரத்துக்கு ரெண்டு மூணு நாள் எக்ஸர்சைஸ் செஞ்சாக்கூடப் போதும். கொஞ்சம் கொஞ்சமா அந்த நேரத்தை அதிகப்படுத்திக்கலாம். இப்போ மனஅமைதிக்கான எக்ஸர்சைஸ் (Stress buster exercise), யோகா மாதிரியான பயிற்சிகள் செய்யறவங்களோட எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. துக்கம், அழுகை மாதிரி மகிழ்ச்சியும் ஒருவகையான உணர்ச்சியின் வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றம் அவ்வளவுதான். மனசுக்குப் பிடிச்ச விஷயத்தைச் செஞ்சாலே போதும், மகிழ்ச்சி தானா கிடைக்கும். எக்ஸர்சைஸ் தினமும் செய்றதுனால, அன்றைய நாளை ஃப்ரெஷ்ஷா ஆரம்பிக்கலாமே தவிர, அதை சந்தோஷமாகக் கொண்டு போறதும், போகாததும் நம்ம கையிலதான் இருக்கு." 

அடுத்த கட்டுரைக்கு