
கடியாத்மக் மேரு வக்ராசனம்

இதை, முதுகு தசையை தளர்வாக்கும் ஆசனம் என்றும் சொல்வர்.
யோகா விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து, முடிந்தவரை கால்களை அகட்ட வேண்டும். மூச்சை இழுத்துக்கொண்டே, கைகளை தோள்பட்டை அளவுக்குப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும். இப்போது, மூச்சை வெளியேவிட்டபடி மேல் உடல், கழுத்தை திருப்பி வலது கையால், இடது காலைத் தொட வேண்டும். 10 விநாடிகள் அப்படியே இருந்து, மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குவந்து, மூச்சை இழுத்தபடி இடது கையால் வலது காலைத் தொட வேண்டும். இது ஒரு செட். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.

கவனிக்க: வெரிகோஸ் வெயின், டிஸ்க் புரொலாப்ஸ், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: முதுகுத்தண்டு இறுக்கமாக இருப்பது, அடி முதுகுவலி, லம்பர் பாயின்ட் வலி, சயாட்டிகா பிரச்னை இருப்பவர்களுக்கு நல்லது.

உட்புற உடலைச் சுத்தம்செய்யும். காற்று, உணவு, தண்ணீரால் சேரும் நச்சுக்களை வெளியேற்றும்.
வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். தொப்பை குறையும்.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, உடலில் மாற்றங்கள் தெரியும்.
புஜம், இருதலைத்தசை (bicep), முத்தலைத்தசை (tricep) ஆகியவை வலுவாகும்.
- ப்ரீத்தி, படங்கள்: தே.அசோக்குமார்
மாடல்: சவிதா,
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.