சக்கி என்றால் அரைத்தல்; சலனா என்றால் அசைதல். அந்தக் காலத்தில் மாவு அரைக்க ஆட்டுக்கல்லைப் பயன்படுத்துவார்கள். திருகைக்கல்லைச் சுழற்றுவதுபோல உடலைச் சுழற்றுவதால், இந்த ஆசனத்துக்கு ‘சக்கி சலனாசனா’ என்று பெயர்.

விரிப்பின் மேல் கால்களை நீட்டி, அகட்டி அமர வேண்டும். கைகளைக் கோத்து, முன்பக்கம் நன்கு நீட்டி, மூச்சை இழுத்துப் பிடித்தபடி முன்புறம் குனிந்து, மேல் உடலை வலமிருந்து இடமாக வட்டமாகச் சுழற்ற வேண்டும். உடலைச் சுழற்றும்போது பின்புறம் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சாயலாம். பின்புறம் சாயும்போது, மூச்சை இழுத்துப்பிடிக்க வேண்டும். முன்புறம் வரும்போது மூச்சை விட வேண்டும். இப்படி ஐந்து முறை வட்டமடித்த பின், எதிர்த்திசையில் ஐந்து முறை உடலைச் சுழற்ற வேண்டும்.

கவனிக்க:

இதய நோயாளிகள், இதயத்தில் அடைப்பு இருப்பவர்கள், தண்டுவட பிரச்னை, கண் அழுத்தம், வலிப்பு, தலைச்சுற்றல் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்:

செரிமான உறுப்புகள் தூண்டப்பட்டுச் சீராக இயங்கும். குறிப்பாக, இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, மாற்றங்கள் உண்டாகும்.

பிரசவத்துக்குப் பிறகு உடலை ஃபிட்டாக்க இந்த யோகாசனம் உதவும். மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

இடுப்புத் தசைகள் வலிமையாகும். சீரற்ற மாதவிலக்கைச் சரிசெய்யும். இடுப்பின் பக்கவாட்டுக் கொழுப்பையும் வயிற்றுக் கொழுப்பையும் கரைக்கும்.

- ப்ரீத்தி
படங்கள்: தே.அசோக்குமார்
மாடல்: சவிதா
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.