Published:Updated:

உடலினை உறுதிசெய் - 25

உடலினை உறுதிசெய் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
உடலினை உறுதிசெய் - 25

வியாக்ராசனா (Vyaghrasana)

உடலினை உறுதிசெய் - 25

வியாக்ர என்றால், புலி என்று அர்த்தம். புலி தூங்கி எழுந்ததும் தன் உடலை வளைத்துச் சடவு முறிப்பது போல், உடலை வளைத்துச் செய்யும் ஆசனம் என்பதால், இதற்கு வியாக்ராசனா எனப் பெயர். விரிப்பின் மீது, முட்டிபோட்டு, கைகளைத் தரையில் ஊன்றி, (புலி நான்கு கால்களில் நிற்பது போல) உடலை நேராக வைக்க வேண்டும். பாதங்கள் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். இப்போது கைகளை ஒரு முட்டியில் பேலன்ஸ் செய்தபடி, இடது காலை மேலே உயர்த்தி, நன்கு நீட்டி, பின்னர் மேல்பக்கமாக மடிக்க வேண்டும். அதேநேரம், தலையை நன்கு உயர்த்த வேண்டும். பார்க்க புலி, வாலை உயர்த்தியபடி நிற்பது போல் இருக்கும். இந்தநிலையில் 10 விநாடிகள் இருந்துவிட்டு, தலையை நன்கு குனிந்்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு உட்புறம் கொண்டுசெல்ல வேண்டும். அதேநேரத்தில், இடது காலை முன்பக்கம் கொண்டுவந்து தலையைத் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இதேபோல் வலது காலுக்குச் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி, மூன்று முறை செய்யலாம்.

உடலினை உறுதிசெய் - 25

கவனிக்க: சயாடிக்கா, குடலிறக்கம், முதுகுத்தண்டு டிஸ்க், மூட்டுவலி பிரச்னை உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டாம்.

பலன்கள்: முதுகுத்தண்டுவடத்தில் இருக்கும் நரம்புகள் ரிலாக்ஸாக இருக்கும். இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து, கால்கள் வலுவாகும். செரிமான மண்டலத் தசைகளுக்கு வேலை கொடுப்பதால், செரிமானம் சீராகும். உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் பாய உதவும். மருத்துவரின் பரிந்துரைப்படி, பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வயிறு, இடுப்புப் பகுதி மீண்டும் இயல்பான வடிவம் பெறும்.

- ப்ரீத்தி

படங்கள்: மா.பி.சித்தார்த் மாடல்: ஸ்ருதி

உடலினை உறுதிசெய் - 25

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகளை கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.