Published:Updated:

உடற்பயிற்சி - நம்பிக்கைகள் உண்மைகள்

உடற்பயிற்சி  - நம்பிக்கைகள் உண்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
உடற்பயிற்சி - நம்பிக்கைகள் உண்மைகள்

உடற்பயிற்சி - நம்பிக்கைகள் உண்மைகள்

உடற்பயிற்சி - நம்பிக்கைகள் உண்மைகள்

உடற்பயிற்சி - நம்பிக்கைகள் உண்மைகள்

Published:Updated:
உடற்பயிற்சி  - நம்பிக்கைகள் உண்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
உடற்பயிற்சி - நம்பிக்கைகள் உண்மைகள்
உடற்பயிற்சி  - நம்பிக்கைகள் உண்மைகள்

டற்பயிற்சியை பொறுத்த வரை நமக்கு நிறைய சந்தேகங்கள்  எழும். அதில் எது உண்மை, எது தவறு என புரியாமல் குழப்பம் வரலாம். நமக்கு தோன்றும் சாதாரண சந்தேகங்களில் எது சரி, எது தவறு என தெரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை: காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்தால், உடலின் எடை தானாகவே குறைந்துவிடும்.

உண்மை: இது ஒரு தவறான கருத்து. காலை உணவை நாம் கட்டாயம் தவிர்க்கக் கூடாது. ஏனென்றால், காலை உணவுதான் இரவு முழுவதும் நாம் சாப்பிடாமல் இருப்பதை உடைத்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. உண்மையில் காலை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியம் தரும் முறையான உணவுப்பழக்கத்திலிருந்து (நியூட்ரியன்ட்ஸ்) நம்மை விலக்கிச் செல்வது ஆகும். இதனால் நிச்சயம் நமது எடை குறையாது. நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது, அடுத்த வேளை உணவை அதிகம் எடுக்கத் தூண்டும். இதுவும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

நம்பிக்கை: ஆரோக்கியமான, வலுவான உடலைப் பெற கடுமையான உடற்பயிற்சிகள் தேவை.

உண்மை: நல்ல பலம் வாய்ந்த உடலைப் பெற வேண்டுமென்றால், புல் வொர்க்கர் போன்று தசைக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கருவிகளில் பயிற்சி மேற்கொண்டால்தான் முடியும் என்பதுகூட தவறான அபிப்ராயம்தான். அதற்குப் பதிலாக நல்ல முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் ஆரோக்கியமான உடலை அளிக்கும்.

உடற்பயிற்சி  - நம்பிக்கைகள் உண்மைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பிக்கை: உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியைப் பலமுறை செய்துவந்தால், இடுப்புப் பகுதியில் விழும், டயர் போன்ற மடிப்பு நீங்கிவிடும்.

உண்மை:
இடுப்புப் பகுதி பெரிதானவர்கள், தொப்பை உள்ளவர்கள் தவறாமல் செய்வது உட்கார்ந்து எழும், ‘சிட் அப்’ பயிற்சிகளைத்தான். இதைச் செய்தால் வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பு கரைந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இது, உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. ஏனென்றால், நம் உடலில் கொழுப்பு உற்பத்தியாகி ஒரே பகுதியில் மட்டும் சேருவது இல்லை. ‘சிட் அப்’ பயிற்சி இடுப்புப் பகுதி தசை வலுப்பெற உதவும். இதனுடன், வாக்கிங், ஜாகிங் மற்றும் வயிறு, இடுப்புக்கான பயிற்சிகளை சேர்த்துச் செய்ய வேண்டும்.

நம்பிக்கை:
கடினமான உடற்பயிற்சியே பெரிய அளவிலான வெற்றியைத் தரும்.

உண்மை:
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு வேண்டுமானால், கடுமையான உடற்பயிற்சித் தேவைப்படலாம். மற்றவர்களுக்குக் கடுமையான உடற்பயிற்சி தேவை இல்லை. ‘நோ பெயின் நோ கெயின்’ (No Pain; No Gain) என்று சொல்வது உடற்பயிற்சி விஷயத்தில் ஓரளவுக்குத்தான் பொருந்தும். உடற்பயிற்சி செய்யத்தான் வேண்டும்... அதற்காக, வலி உண்டாகும் அளவு செய்யத் தேவையில்லை. அது, வேறுவிதமான ஆபத்துக்களை உண்டாக்கிவிடும்.

நம்பிக்கை:
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யக் கூடாது.

உண்மை: சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வதில் தவறு இல்லை. பொதுவாக, விளையாட்டு வீரர்கள் நன்றாகச் சாப்பிட்ட பிறகே பயிற்சி மேற்கொள்கிறார்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படுவதைவிட அதிக கலோரி அவர்களுக்குத் தேவை என்பதால் அவ்வாறு செய்கிறார்கள். சாப்பிட்ட மதமதப்பு உடலில் நீங்கிய பின் உடற்பயிற்சி செய்வது தவறு இல்லை. ஆனால் சாப்பிட்டவுடனே செய்ய வேண்டாம்.

நம்பிக்கை: விடியற்காலைப் பொழுதில்தான் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

உண்மை: ராணுவம் மற்றும் படைக்கலன் துறைகளில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். சரிப்பட்டும் வரலாம். மற்றபடி உடற்பயிற்சி செய்வதற்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். மாலை நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெயில் மிகுதியான, வெப்பமான இடங்களில் உடற்பயிற்சி செய்தால், தேவைக்கு அதிகமான அளவு வியர்வை வெளியேறி உடல் விரைவாகச் சோர்வடையும்.

- எஸ்.கதிரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism