Published:Updated:

வாலிபால், ஹெல்த்தி டயட், சோஷியல் லைஃப் - ரியோவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாலிபால், ஹெல்த்தி டயட், சோஷியல் லைஃப் -  ரியோவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!
வாலிபால், ஹெல்த்தி டயட், சோஷியல் லைஃப் - ரியோவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

வாலிபால், ஹெல்த்தி டயட், சோஷியல் லைஃப் - ரியோவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

பிரீமியம் ஸ்டோரி
வாலிபால், ஹெல்த்தி டயட், சோஷியல் லைஃப் -  ரியோவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

ன் மியூசிக் சேனலில் காம்பியரராய் கலக்கிக் கொண்டிருந்த ரியோ இன்று ‘சரவணன் மீனாட்சி’ ஹீரோ. கிராமத்து கில்லாடி இளைஞன் லுக்கில், எல்லாருடைய மனதையும் கட்டிப் போட்டிருக்கிறார் இந்த ஹேண்ட்சம் இளைஞர். ‘ஃபிட்டா இருக்கீங்களே...அதோட சீக்ரெட் என்ன?’ என்று கேட்டால், ‘என்னைக் கண்ணுக்கெதிரில் பார்க்கறீங்களே... அப்புறம் எப்படிங்க நான் வொர்க்அவுட் ஃப்ரீக்னு முடிவு செஞ்சீங்க’ என்று நம்மைத் திருப்பி கலாய்க்கிறார். அவருடைய டயட், வொர்க்அவுட், லைஃப் ஸ்டைல் சீக்ரெட்ஸ் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“நிறைய மனிதர்களுடன் பழகுவதுதான் ஹெல்த்தோட முதல் படி என்று நான் நினைக்கிறேன். சோஷியல் மீடியா பக்கம் நான் அதிகம் போக மாட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் அது நம்மை அடிமையாக்கிவிடும். அதனால், என்னைச் சுத்தியிருக்கும் மனிதர்களிடம் மனசுவிட்டுப் பேசுவேன்; பழகுவேன். அதுதான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் ரியோ.

சோஷியல் லைஃப்

“நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பேன். வெளியே செல்வது, நல்ல உணவுகளைத் தேடிப் பிடித்து சாப்பிடுவது என்று என்னுடைய ஃப்ரீ டைம் முழுக்க நண்பர்களுக்காகத்தான்.  ஒரு வாரத்துக்கான ஃப்ரெஷ்னெஸ் அந்த ஒருநாள் மீட்டிங்கிலேயே கிடைத்துவிடும்.

இன்றைக்கு, மொபைல் போனுக்கு உள்ளேயே நிறையப் பேர் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதுகூட அவர்களுக்குத் தெரிவது இல்லை. அதேநேரத்தில், மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று சொல்கிறார்கள். இந்த ஸ்ட்ரெஸ் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கிய காரணமே செல்போன், சோஷியல் நெட்வொர்க்தான். அதில் இருந்து வெளியே வந்தாலே, நிறைய நேரம் கிடைக்கும். ஸ்ட்ரெஸ் தவிர்க்கலாம்.

ஹெல்த்தி டயட்

டயட்ல என்னுடைய மிகப்பெரிய பிரச்னையே போதுமான அளவு பழங்கள் சாப்பிடாததுதான். ஜூஸ் கொடுத்தால், எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பேன். ஆனால், பழங்களைக் கடித்து சாப்பிடுவதுதான் நல்லது என்று டயட்டீஷியன்கள் சொல்கிறார்கள். அதுதான் உடலுக்கும் நல்லது. ஆனால், இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். விரைவில் முழுமையாகப் பின்பற்றுவேன்.

ஸ்ட்ரெஸ் பஸ்டர் இதுதான்

பைக் ஓட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரில் உட்கார்ந்து தூங்கியபடி செல்வதைவிட, நாமே பைக் ஓட்டிக்கொண்டு செல்லும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும்போது பெரும்பாலும் பைக்கில்தான் செல்வேன். அதேபோல், தினசரி வாழ்வில், சின்னதாக ஒரு சோகம், கவலை வந்தால் கூட பறவை மாதிரி பைக் எடுத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்துவிடுவேன். அடுத்த நிமிடமே மனது லேசாகிவிடும். பைக் ஓட்டும்போது எப்பவும் நார்மல் வேகத்தில்தான் செல்வேன். ஹெல்த் அளவுக்கு உயிரும் முக்கியமாச்சே.

நேரம் கிடைக்கும்போது எல்லாம் நன்றாகத் தூங்குவேன். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம்தான் நம்மைப் புத்துணர்வாக, துடிப்புடன் வைக்க உதவுகிறது. பொழுதுபோகவில்லை எனில், வாலிபால், ஸ்னோ பவுலிங், ஷட்டில் காக் விளையாடுவேன். உடல் வியர்க்க விளையாடும்போது, நன்கு தூக்கம் வரும்.  சருமமும் உடலும் ஃப்ரெஷ்ஷா இருக்கப் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். முடிந்தவரை, தண்ணீர் நிறையக் குடிப்பேன். இது எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம் எப்போதும் மனசுவிட்டு சிரிக்க வேண்டும்.சிரிப்பே நம் முகத்துக்கு செம அழகைக் கொடுத்துவிடும்.”

- பா.விஜயலட்சுமி,

படம்: தே.அசோக் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு