பிரீமியம் ஸ்டோரி
‘பளிச்’ சருமத்துக்கு!

புதுமணப்பெண் அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பதற்கு முன் திருமண நிகழ்வில் `பளிச்’ என இடம் பிடிக்கலாம் வாங்க...

1. மாய்ஸ்ச்சரைசர் வொயிட் ஷிஸோ 2 இன் 1 பிரைட்டனிங் ஐ கிரீம் - தி பாடி ஷாப்

கல்யாணப் பொண்ணோட கண்ணு இயற்கையாவே ‘பளிச்’சுன்னு இருக்கணும். ஆனா, இந்தக் கருவளையம் பிரச்னையா இருக்கு. அதிகநேரம் சிஸ்டம்ல வேலை பாக்குறதுனால சீக்கிரம் கண்கள்  சோர்வடைஞ்சுடுது. அதுக்கு ஸ்பெஷல் கேர் தேவை.

இந்த ஒரு கிரீம் உங்கள் கண்களுக்கு இரண்டு விதமான பலன்களைத் தருகிறது. கண்களை சுத்தியுள்ள பகுதியைப் பிரகாசிக்க செய்யும். தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் கருவளையங் களும் மறையும்.

கிரீமை தடவியதும் இந்த ட்யூ பிலேயே உள்ள மைக்ரோ  மசாஜர் கொண்டு மசாஜ் செய்வதால் கண்களை சுத்தியுள்ள பகுதியில் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும்.

இந்த கிரீம் முழுக்க முழுக்க தாவரங்களுடைய செல்களால தயாரிக்கப் பட்டது. அதனால எந்தவிதமான பாதிப்பும் கண்களுக்கு இல்லை.

2. தி பாடி ஷாப் - பாடி பட்டர்

கல்யாண போட்டோல உங்க முகம் ஒரு நிறத்திலும், கழுத்து, கைகள் ஒரு நிறத்திலும் இருந்தா நல்லாவா இருக்கும்?

உங்கள் முகம் மட்டும் பளபளப்பாக இருந்தால் போதாது. உங்கள் தேகத்தை யும் பளபளப்பாக வைத்துக்கொள்ள சிறந்த பாடி மாய்ஸ்ச்சர் இது.

உங்கள் சருமத்தை 24 மணி நேரமும் மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ளும் . அதனால உங்கள் தோள்கள் இயற்கையாவே  ஷைனிங்கா இருக்கும்.

ஆலிவ், ஸ்ட்ராபெர்ரி, ஷியா என்று மூன்று ஃபிளேவர்களில் கிடைக்கும்.

ஆலிவ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர்களை நார்மல் முதல் வறண்ட சருமம் உடையவர்கள் வரை பயன்படுத்தலாம்.

ஷியா ஃபிளேவரை மிகுந்த  வறண்ட சருமம் உடையவர்கள் வரை பயன்படுத்தலாம்.

3.ஓலே நேச்சுரல் வொயிட் 7 இன் 1 இன்ஸ்டன்ட் க்ளோயிங்  ஃபேர்னஸ் வித் யுவி புரொடக் ஷன்

கல்யாணத்துக்கு முதல்நாள் வரைக்கும் வேலைக்கு செல்லும் மணப்பெண்களே, உங்களுக்கு சாப்பிடவே டைம் இல்ல. இதுல ஸ்கின் கேர் வேறயான்னு யோசிக்கிறீர்கள்? நோ பிராப்ளம். உங்களை மாதிரி  பிஸி பெண்களுக்குதான் இந்த 7 விதமான பலன்களைத் தரக்கூடிய கிரீம் உங்கள் முகத்தைப் பொலிவாகவும், வெண்மையாகவும் வைத்திருக்கும்.கரும்புள்ளிகளைப் போக்கும்.

உங்கள் முகத்தை ஈரப்பதத்துடனும், பளபளப்பாகவும், மிருதுவாகவும் நீண்ட  நேரம் வைத்திருக்கும்.

புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் முகத்தைக் காக்கும்.

4. லாக்மே அப்சொல்யூட் ஸ்கின் க்ளாஸ் ஓவர் நைட் மாஸ்க்.


தொடர்ந்து ஏ.சி-ல இருந்தாலும், தண்ணி சரியா குடிக்காம இருந்தாலும்,  மாய்ச்சரைஸர் அப்ளை பண்ணாம இருந்தாலும்  உங்க சருமம் வறண்டு போக வாய்ப்பு இருக்கு.

வறட்சியான  முகத்துல பொலிவும் இருக்காது.

உங்க முகம் உடனே பொலிவா இருக்கணும்னா தூங்க போறதுக்கு முன்னாடி இந்த க்ரீமை சிறிதளவு எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் போதும்.

இதில் இருக்கும் மினரல்கள் உங்கள் முகத்தை ஹெல்த்தியாகவும் க்ளோவாகவும் வைத்திருக்க உதவும்.

5. லோட்டஸ் ஃ புரொஃபஷனல் சீரம்

இன்னைக்கு ஸ்கின் கேர் லிஸ்ட்ல சீரம் இல்லாம எப்படி? சீரம் உங் களுடைய முகத்தில் ஊடுருவி சென்று பலன்களை சீக்கிரம் தரக்கூடியது.

இதை முகத்தில் பூசிய உடனே உங்கள் முகம் `பளிச்’ சென்று இருப் பதை உணர்வீர்கள். முகத்தில் உள்ள கருமையை நீக்கும்.

நார்மல் முதல் வறண்ட சருமம் உடையவர்கள் வரை பயன்படுத்தலாம்.

காலை மாலை உபயோகிக்க நல்ல பலன் தரும்.

6. பாடி ஷாப் - ஸ்ட்ராபெர்ரி

`பாடி பாலிஷா... அதுக்கு நிறைய செலவாகுமே? செலவைவிடுங்க. அதுக்கு முதலில் டைம் எங்க இருக்கு’ன்னு சொல்லுற உங்க பீலிங் புரியுது...

ஸ்பா போகாம வீட்டிலேயே சில மணி நேரங்கள்ல பாடி பாலிஷ் செய்த பீல் தரும். சோப்புக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம். உங்கள் உடம்பில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பாடி ஸ்க்ரப்.

இது உங்கள் சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

- கி.சிந்தூரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு