பிரீமியம் ஸ்டோரி

டையை மெலிதாக வைத்திருப்பது அழகுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்காகவும் தான். வயிற்றுப் பகுதியைச் சுற்றி அதிகமான சதை இருந்தால் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அதைக் கவனிக்காமல் விட்டு விட்டால் இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய் வரை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்காக சரியாக சாப்பிடாமல் குறுகிய காலத்தில் அதிக இடை குறைப்பது ஆரோக்கியம் அல்ல. எத்தகைய உணவு நம் இடையைக் குறைக்க உதவும் என்று கூறுகிறார், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி.

மெல்லிய இடையாள்!

இடையில் சதை உருவாகுவதற்கான காரணங்கள்

•  உடல் உழைப்பு குறைவாக இருப்பது.

மெல்லிய இடையாள்!

• அதிகமான இனிப்பு வகைகளை உண்பது.

• மைதா, க்ரீம் சேர்க்கப்பட்ட உணவுகள்.

• செரிமானம் குறைவாக இருப்பது, மலச்சிக்கல்.

சிலர் உடற்பயிற்சி, உணவு கட்டுப் பாட்டுடன் இருந்தாலும் இடை மற்றும் எடை குறையாமல் இருப்பார் கள். அதற்குக் காரணம், லாக்டோஸ்  இன்டாலரன்ஸ் அல்லது க்ளுட்டன் இன்டாலரன்ஸ் (Gluten & Lactose Intolerance) இருக்கலாம். அதாவது பால் பொருட்கள் அல்லது கோதுமைப் பொருட்கள் அவர்களின் உடல் தன்மைக்கு சேராமல் இருக்கலாம். அதனால் எடை குறைப்பது அவர் களுக்கு கடினமாக இருக்கும்.

ஆரோக்கியமான இடைக்கு என்ன செய்யலாம்?

நம் வாழ்க்கை முறையை (Lifestyle) சரியாக மாற்ற வேண்டும்.

இரவு தாமதமாக படுக்கச் செல்வது, காலை நேரம் கழித்து எழுந்திருப்பதால் சுகர் க்ரேவிங் (sugar craving) உங்களுக்கு ஏற்படும். அதாவது நேரம் காலம் இல்லாமல் எதையாவது சாப்பிட்டுக்கொண்டு இருப்பது. அடிக்கடி பசி எடுப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். 1 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்துவிட்டு மீதி நேரம் ஆக்டிவாக இல்லாமல் இருக்கக்கூடாது. நீங்கள் யோகா, நடனம், நீச்சல், ஏரோபிக்ஸ் என்று எது செய்தாலும்  நடைபயிற்சியும் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள். ஒருநாளைக்கு குறைந்தது 3 முதல் 5 கி.மீ தூரம் வரை நடக்க வேண்டும்.

மெல்லிய இடையாள்!

நீங்கள் மதியம் உண்ணும் உணவில் நான்கில் ஒரு பகுதி கார்போஹைட்ரேட், இரு பகுதி காய்கறி, மற்றொரு பகுதி புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.

பழச்சாறு அருந்துவதற்குப் பதிலாக முழு பழமாக எடுத்துக்கொள்வது நல்லது. பழத்தின் சத்து முழுமையாகவும் கிடைக்கும், சீக்கிரம் பசி எடுக்காது .

உண்டவுடன் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலும் இரவு உணவை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே எடுக்க வேண்டும்.

காலை உணவை நீங்கள் எழுந்திரிக்கும் 2 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும்.

சாப்பிடும்போது புத்தகம் படிப்பது, டி.வி. பார்ப்பது, பாட்டு கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரையை டயட் எனும்பேரில் சிலர் முழுமையாக தவிர்க்கிறார்கள். அது தவறு. ஸ்போர்ட்ஸில் இருப்பவர்கள், அதிக உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 டீஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு  2 அல்லது 3  டீஸ்பூன் சர்க்கரையே போதுமானது.

கேரட் மற்றும் பீட்ரூட்டில் இயற்கையிலேயே சர்க்கரை உள்ளது.

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

1. முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் உலர்பழங்கள்.
2. பிரவுன் பிரெட்
3. சப்பாத்தி
4. பல வண்ண காய்கறிகள், நார்ச்சத்து நிரம்பிய காய்கறிகள்.

மெல்லிய இடையாள்!

5. பருப்பு வகைகள்
6. ஆடை நீக்கிய பால்
7. பழங்கள்... குறிப்பாக `விட்டமின் சி’ நிறைந்த பழங்கள்.
8. முருங்கைக்கீரை, முளைக்கீரை, அகத்திக்கீரை, புளிச்சக்கீரை போன்ற கீரை வகைகள்.
9. தால், பனீர், காளான், டோஃபு, மீன், சிக்கன் மற்றும் முட்டை போன்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. பேக்கரி உணவுகளில் வனஸ்பதி சேர்க்கப்படுவதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது .
2. குருமா, பனீர் பட்டர் மசாலா, சிக்கன் பட்டர் மசாலா போன்ற கிரேவி அயிட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

மெல்லிய இடையாள்!

3. பீட்சா, பர்கர், பூரி, பரோட்டா, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், குளிர் பானங்கள்.
4. கூடியவரை துரித உணவுகள் மற்றும் ஹோட்டல் உணவுகளைத் தவிருங்கள்.

இடைமெலிவதற்கான டயட் பிளான்

நடைப்பயிற்சி செல்லும் முன்:

ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறும் கால் டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியும் சேர்த்துப் பருகலாம் .

இரவு முழுவதும் ஊற வைத்த  பாதாம் பருப்புகள் - 5

பேரீச்சம்பழம் / அத்திப்பழம் /ஆப்ரிகாட் அல்லது ஏதாவது ஒரு  உலர்ந்த பழம் - 2

மெல்லிய இடையாள்!

காலை உணவு

 8.00 மணிக்கு:


முட்டை - 1 + எலுமிச்சைப் பழ சாறு / மாதுளை பழம் - ஒரு கப் (அல்லது)

அடை /பெசரட்டு - 1 + இஞ்சி / தேங்காய் சட்னி  (அல்லது) ராகி கூழ் - 200 மில்லி + ஒரு பழம்   (ராகி கூழில் நீர் சேர்க்க வேண்டும்)

(அல்லது)

ஆப்பிள் மில்க் ஷேக்

(தயாரிக்கும் முறை= 1/2 ஆப்பிள் + பால் 150 மில்லி + ஆளி விதை பொடி 1 டீஸ்பூன்)

இடைவெளியில்: 11 மணிக்கு

ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் ஆளி விதை பொடி கலந்த நீர் மோர் - 1 கிளாஸ்.

முளை கட்டிய பயறு - 2 டீஸ்பூன்

மதிய உணவு

1.00 மணிக்கு:

பொரியல் - 1 கப் + கீரை - 1/2 கப் + தால் / சாம்பார் - 1 கப்  + சாதம் - 1 கப்
(அல்லது)

வேகவைத்த மீன் அல்லது சிக்கன்  - 150 கிராம் + பொரியல் 1 கப் + ராய்த்தா 1 கப்
(அல்லது)

மெல்லிய இடையாள்!

காளான் / பனீர் - 100 கிராம் + பொரியல் / சாலட் - 1 கப் + சாதம் 1/2 கப் / ரொட்டி - 1
ரசம், நீர்  மோர் எடுத்துக் கொள்ளலாம்.

வெள்ளை சாதம், வெரைட்டி ரைஸ், வறுவல் மற்றும் கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது உடனடி ரிசல்ட் தரும்.

மாலை உணவு

3.00 முதல் 4.00 மணிக்குள்:

கிரீன் டீ / காபி / டீ - 1 கிளாஸ்
(நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்)

மெல்லிய இடையாள்!

5.00 முதல் 6.00 மணிக்குள் :
வறுத்த கடலை / கொய்யா (அ) ஆரஞ்சு (அ) ஆப்பிள் - 1 / டோக்ளா - 2 பீஸ்

இரவு உணவு
7 முதல் 8 மணிக்குள்:
வீட்டில் தயாரித்த சூப் - 1 கப்  (இதில் வேகவைத்த சுண்டல் (அ) காராமணி (அ) பச்சைப் பயறை 3 டீஸ்பூன் சேர்க்கவும்).
(அல்லது)

மெல்லிய இடையாள்!

தக்காளி சூப் + சிக்கன் (அ) மீன் 2 துண்டுகள்
(அல்லது)

முட்டைகோஸ் / புரூக்கோலி / குட மிளகாய் சூப் + ஆம்லெட் (குட மிளகாய், வெங்காயம் மற்றும் மஷ்ரூமை சேர்த்துக்கொள்ளவும்).
இதை தொடர்ந்து 3 மாதங்கள் கடைப்பிடித்தால் நிச்சயம் பலன் அளிக்கும். ஆனால், இத்துடன் உடற்பயிற்சியும் அவசியம்.

- கி.சிந்தூரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு