Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஆர்யா

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஆர்யா

Published:Updated:
ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்
ஸ்டார் ஃபிட்னெஸ்

மிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலர் அவர்களது ஃபிட்டான உடல்வாகுக்காக பிரபலம் ஆகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதைய கோடம்பாக்க அர்னால்டு, ஆர்யாதான். மாடலிங் வழி சினிமாவுக்கு வந்த அவர் நம்பியது, அவரைக் காப்பாற்றியது இரண்டுமே அந்த கெத்தும் ஃபிட்டான உடலும்தான். ஆர்யாவின் சீக்ரெட்ஸ்தான் என்ன?

*பள்ளிக்காலத்தில் இருந்தே ஆர்யா ‘விளையாட்டுப்பிள்ளை’.யூனிஃபார்மில் கறையில்லாமல் வீடு திரும்பியதே இல்லை. விளையாட்டின் மீதான அந்தக் காதல் இன்னமும்  தொடர்கிறது. ‘ஜாலியான வொர்க்அவுட், விளையாட்டுதான்’ என்பார் ஆர்யா. தினமும் ஒரு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க விளையாட வேண்டியது அவசியம்.

*வாழ்க்கை மட்டுமல்ல, ‘ஃபிட்னெஸ்ஸும் சந்தோஷமான விஷயம்தான் உடன் ஒரு பார்ட்னர் மட்டும் இருந்தால்’ என்பது ஆர்யாவின் மந்திரம். ‘அர்னால்டே வொர்க்அவுட் பார்ட்னர் வச்சிருந்தாருப்பா’ என ஹாலிவுட் ரெஃபரென்ஸ் தருகிறார் ஆர்யா. தனது நடிக நண்பர்கள் தொடங்கி, ட்விட்டரில் பின்பற்றுபவர்கள் வரைக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவது அவரின் ஹாபி.

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

*‘எதையும் முறையாக, தொடர்ந்து செய்தால் அதிகப் பலன் தரும்’ என்பார்கள். ஆர்யா அதில் கில்லி. என்ன நடந்தாலும், அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிளம்பிவிடுவார். நண்பர்கள் ஷாம் மற்றும் சிலருடன் பெசன்ட் நகரில், ஆர்யா ஜாகிங் செய்வதைப் பார்க்கலாம். அது தரும் உற்சாகம்தான் அவரை எப்போதும்  சிரித்தபடி வைத்திருக்கிறது.

*சைக்கிளிங்தான் ஆர்யாவின் அதிரடி அவதாரம். ஸ்வீடன் நாட்டில் நடந்த 300 கி.மீ சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக முடித்தவர் ஆர்யா. அவ்வப்போது ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி சென்று வருவார். ட்விட்டரில் ஜம்மென செல்ஃபிகளும் பறக்கும். உடல், மனம் என இரண்டுக்கும் ‘புத்துணர்ச்சி தருவது சைக்கிளிங்தான்’ என காதில் கிசுகிசுகிறார் ஆர்யா.

*வெள்ளை முட்டை, கொழுப்பு குறைவான இரண்டு கிலோ சிக்கன் இவைதான் ஆர்யாவின் முக்கிய டயட். மற்றவை அவ்வப்போது அவர் நடிக்கும் படங்களுக்கு ஏற்ற உடல்வாகுக்குத்  தகுந்தபடி மாற்றிக்கொள்வார். சிறு வயதில் இருந்தே பாடி பில்டர் என்பதால் அதற்கேற்ற டயட் என்பதுதான் ஆர்யாவின் லைஃப்ஸ்டைல்.

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism