காற்றில் பனை மரம் ஆடுவது போல, இந்தப் பயிற்சியின் செய்முறை இருக்கும். இது ஒரு ஸ்ட்ரெச்சிங் பயிற்சி.

விரிப்பின் மீது கால்களை இரண்டு அடி அளவுக்கு அகட்டிவைத்து நிற்க வேண்டும். உள்ளங்கை வெளியே தெரியும்படி கைவிரல்களைக் கோக்க வேண்டும். இப்போது, மூச்சை இழுத்தபடியே கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். உள்ளங்கை வானத்தைப் பார்த்தபடி இருக்கட்டும். மூச்சை வெளியேவிட்டபடி வலது புறம் சாய வேண்டும். ஐந்து விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை இழுத்தபடியே நிமிர வேண்டும். இதேபோல இடதுபுறமும் செய்ய வேண்டும். சாயும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாயலாம். ஆனால், கால்கள் மடங்க கூடாது. இது ஒரு செட். இதேபோல் ஐந்து முறை செய்ய வேண்டும்.

குறிப்பு: குடலிறக்கம், தீவிர முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கழுத்துவலி, தலைவலி இருப்பவர்கள் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டாம்.

பலன்கள்

இடுப்பின் பக்கவாட்டு கொழுப்பு, சதையைக் குறைத்து ஃபிட்டாக்கும்.

வயிற்றின் இயக்கத்தைத் தூண்டிவிடும். இதனால், செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.

காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் வெந்நீர் குடித்த பிறகு இந்தப் பயிற்சியை செய்திட, உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறும்.

கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படுவதால், இந்த உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் தீர உதவும்.

- ப்ரீத்தி

படங்கள்: மா.பி.சித்தார்த், மாடல்: ஸ்ருதி

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகளை கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.