
திர்யகா என்றால் முக்கோணம். புஜங்கா என்றால் நாகப் பாம்பு. பாம்பு புரள் வதைப் போல உடலை முக்கோணம் போல புரட்டிச்செய்யும் ஆசனம் என்பதால், இதற்கு திர்யகா புஜங்காசனா என்று பெயர்.
விரிப்பின் மீது குப்புறப் படுக்க வேண்டும். கைகள் இரண்டையும் மார்புக்கு அருகே ஊன்றி மூச்சை இழுத்தபடி தண்டால் எடுப்பதுபோல முழு உடலையும் உயர்த்தவும். உள்ளங்கைகளாலும் கால் விரல்களாலும் உடலைத் தாங்கியபடி இருக்க வேண்டும். மூச்சை இழுத்துப்பிடித்தபடியே, தலையையும் மேல் உடலையும், இடுப்பையும் இடது புறமாகத் திருப்ப வேண்டும். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வலதுபுறமாகத் திருப்ப வேண்டும். இப்போது மூச்சைவிட்டபடி தரையில் படுக்கலாம். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.
குறிப்பு: அல்சர், குடலிறக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பலன்கள்
சர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ் (Cervical spondilytis) எனும் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி நீங்கும்.
தோள்பட்டை, கழுத்து, முதுகின் மேல் பக்கத் தசைகள் வலுப்பெறும்.
குனிந்து எழும்போது நுரையீரல் விரி வடைவதால், சுவாசப் பிரச்னைகள் சீராகும்.
வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும்.
நரம்புகள், நுண் ரத்தக் குழாய்களுக்குச் சீரான ஆக்சிஜன் சென்று, ரத்த ஓட்டம் சீராகும்.
கல்லீரல், கணையம், பித்தப்பை, வயிறு ஆகியவை சீராக இயங்கும்.
புஜங்கள் வலுவடையும்.
- ப்ரீத்தி, படங்கள்: மா.பி.சித்தார்த்,
மாடல்: ஸ்ருதி
யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகளை கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ (Aum) சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று உச்சரித்து முடிக்க வேண்டும்.