Published:Updated:

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!
பிரீமியம் ஸ்டோரி
ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

Published:Updated:
ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!
பிரீமியம் ஸ்டோரி
ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!
ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ருத்துவம், ஃபிட்னெஸ் எல்லோருக்கும் ஒரேமாதிரியாகப் பொருந்துவது இல்லை. அவரவர் உடல்நிலைக்கு எல்லாமே மாறுபடும். குழுவாக இணைந்து எந்த ஒரு வேலையும் செய்யும்போது உற்சாகத்துடன் செய்ய முடியும். என்றாலும், அது ஃபிட்னெசுக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே. இன்றைக்கு குழுவாக இணைந்து செய்யும் யோகா முதல் ஸும்பா ஃபிட்னெஸ் நடனம் வரை குரூப் எக்சர்ஸைஸ் செல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதேபோல், ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்யச் செல்பவர்கள் பலரும், ஒரு வாரம், அதிகபட்சம் ஒரு மாதம் வரை கூட தாக்குப்பிடிப்பது இல்லை. ஜிம், வொர்க்அவுட் மிஸ்டேக்ஸ் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் இந்த பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

ஜிம்மில் செய்யும் 5 தவறுகள்

1. வார்ம் அப்

பயிற்சியாளர்கள் சொன்னாலும் சரி, பத்திரிக்கைகளில் படித்தாலும் சரி பலர் உடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப் செய்வதை தவிர்க்கின்றனர். நமது உடல் உடற்பயிற்சிக்கு தயாராக, நாம் மனதளவில் தயாரானால் மட்டும் போதாது, நமது உடலும் தயாராக வேண்டும். அதற்கு வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகக் கூடிய வார்ம் அப் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக உடற்பயிற்சிகள் செய்வதால், தசைகள் பாதிக்கப்படும். தசைகளில் ஏற்படும் வலியால் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையானது, ஜிம்மில் சேர்ந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே குறைந்துவிடுகிறது.

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. முதல் நாள் ரிசல்ட்

ஜிம்ல் சேர்ந்தவுடன், முதல் நாளே உடல் ஃபிட்டாகி விட வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். பலர் முதல் நாளே ஜிம்மில் உள்ள எல்லா கருவிகளையும் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணுவார்கள், பயிற்சியாளர்களை கலந்தாலோசிக்காமல் முதல் நாளே இப்படிச் செய்வது தவறு.

3. ஆன்லைன் வீடியோக்கள்

ஆன்லைன், யூடியூப், ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில், பயிற்சி வீடியோக்களை பார்த்து பலர் வீட்டிலேயே பயிற்சிகளை செய்ய முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம், பயிற்சி செய்யத் தூண்டுபவவையே தவிர, முன்மாதிரி அல்ல. ஒவ்வொருவர் உடல்நிலை, அவரது ஃபிட்னெஸ் ஆகியவற்றை பொறுத்து பயிற்சிகள் வேறுபடும். எனவே உடற்பயிற்சியாளரை நேரில் பார்த்து, பரிசோதித்து, அவர் வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற வேண்டும். நன்கு பயிற்சி பெற்றபிறகு வீட்டில் சுயமாக செய்யலாம்.

4.  ட்ரெட்மில் தவறுகள்

முதன் முதலில் ஜிம்முக்கு பயிற்சி செய்ய வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரம், குறைவான வேகத்தில் ட்ரெட்மில்லில் நடக்கச் சொல்வார்கள் டிரைனர்கள். ஒரு சிலர் முதல் நாளே ஜிம்மில், நல்ல ஸ்பீடு வைத்து ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அடுத்த 10 நிமிடத்திலேயே களைப்படைந்து எந்தவித பயிற்சியும் செய்ய முடியாமல் வீட்டுக்கு திரும்புகிறார்கள். ஒருவருக்கு அவரது  ஃபிட்னெஸை பொறுத்துதான் எவ்வளவு நேரம், எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் ஜிம்மில் நடக்கலாம் அல்லது ஓடலாம் என முடிவு செய்ய முடியும். திடீரென சாகசங்களை செய்ய எப்போதுமே, ஆசைப்படக் கூடாது. படிப்படியாகத்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

5. ரெகுலராக வர வேண்டும்

பத்தில் ஆறு அல்லது ஏழு பேர் ஜிம்முக்கு சேர்ந்த சில நாட்களில், ஏதேதோ சாக்கு போக்குளைச் சொல்லி ஜிம்முக்கு வருவதை நிறுத்திவிடுகிறார்கள். வாழ்க்கையில் முதன் முதலாக ஜிம்முக்கு செல்லும்போது, அங்கே சில பயிற்சிகளைச் செய்வதால், தசைகளில் சிறு சிறு காயங்கள், தசைப் பிடிப்பு, தொடை வலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படுவது சகஜம். அவர்கள் சிறு ஓய்வுக்கு பிறகு ரெகுலராக ஜிம்முக்கு வர வேண்டியது அவசியம்.  குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் தொடர்ந்து லீவு போடாமல் ஜிம்முக்கு வந்தால் மட்டுமே ஃபிட்னெஸ் மேம்படும்.

வருத்திக்கொண்டு பயிற்சி செய்வது

உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. சிலர், மிக வேகமாக ஃபிட்டான தோற்றத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்யத் தொடங்குவர். இதனால், வெகுவிரைவில் உடல் சோர்ந்துவிடும். உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும். எந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். பயிற்சியாளர் சொல்லும் பயிற்சிகளை ஆர்வத்துடன் செய்தாலே போதும்.

- பு.விவேக் ஆனந்த்

குரூப் வொர்க்அவுட் கவனம்

ஜூம்போ டான்ஸ் போன்றவை இப்போது ஜிம்களிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒரு மணி நேரம் ஜூம்போ டான்ஸ் செய்வதால் ஐநூறு முதல் இரண்டாயிரம் கலோரிகள் வரை கூட எரிக்க முடியும். ஆனால் பல இடங்களில் 30 - 40 பேர் கூட்டம் கூட்டமாக டான்ஸ் செய்யும்போது ஒரு சிலருக்கு முழு பலன்கள் கிடைப்பதில்லை.

ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ்  தெரியாதவர்கள் எப்போதும் டிரைனருக்கு முன் வரிசையில், அவர் சொல்லித் தருகிறபடி படிப்படியாக ஒவ்வொரு நிலையாக ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏதோ ஒரு வரிசையில், டிரைனரின் பார்வையில் படாதவாறு நின்று பயிற்சி செய்தால், ஒழுங்காக ஸ்டெப்ஸ்களை கற்றுக்கொள்ள முடியாது. அதோடு நேர விரயம், பண விரயம்தான் ஏற்படும். ஏரோபிக்ஸ் பயிற்சிக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள் பின் வரிசைகளில் குழுவோடு சேர்ந்து பயிற்சி செய்வதில் தவறில்லை.

ஏரோபிக்ஸ் பயிற்சிகளைப்  பொறுத்தவரை பாதுகாப்பான, நல்ல தரமான ஷூக்கள் அணிந்து பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல, பயிற்சி பெறும் இடத்தில் நல்ல தரை இருக்கிறதா என பார்க்க வேண்டும்.  ஜூம்போ/ஏரோபிக்ஸ் போன்றவை செய்வதற்கென பிரத்யேக மேட் போடப்பட்டிருக்கும் இடத்தில் மட்டுமே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில் கால், மூட்டு மற்றும் முதுகுத் தண்டு போன்ற பகுதிகள் பாதிக்கப்படும்.

உடல்பருமனாக இருப்பவர்கள், டான்ஸ் மற்றும் ஜம்பிங் பயிற்சிகள் போன்றவற்றை பயிற்சியாளர் அறிவுரை இல்லாமல் செய்யக் கூடாது. ஏனெனில் மூட்டு வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்றவையோ அல்லது அவ்விடங்களில் காயங்களோ ஏற்பட வாய்ப்புண்டு. முதுகுத் தண்டு பிரச்னை இருப்பவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இப்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

குறித்துவைக்க வேண்டும்!

வொர்க்அவுட் செய்யத் தொடங்கும் புதிதில் சிலர் தங்கள் உடற்பயிற்சி தொடர்பாக எதையுமே குறித்து வைத்துக்கொள்வது இல்லை. இதனால், பயிற்சியில் ஏற்படும் முன்னேற்றம், சிக்கல்கள், குறைபாடுகள், சறுக்கல்கள் பற்றிய முழுமையான தகவல் நமக்கு கிடைக்காமல் போய்விடும். என்ன பயிற்சி செய்கிறோம், எவ்வளவு நேரம் அல்லது எத்தனை முறை செய்தோம், எவ்வளவு எடையைத் தூக்கினோம், எவ்வளவு தூரம் நடந்தோம், எவ்வளவு கலோரி உட்கொண்டோம், அதில் எவ்வளவு எரித்தோம், என்ன என்ன பிரச்னைகளை சந்தித்தோம், உடல் எடை எவ்வளவு என்பது உள்ளிட்டவற்றை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் முன்னேற்றத்துக்கும், அடுத்தமுறை தவறு செய்யாமல் இருப்பதற்கும் உதவும். போனவாரம் 65 கிலோ, இந்த வாரம் 64 கிலோ என்று பார்க்கும்போது, நமக்கே சந்தோஷமும் ஆர்வமும் பிறக்கும். இன்னும் உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்ய அதுவே தூண்டுதலாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism