Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ் - அஜித்

ஸ்டார் ஃபிட்னெஸ் -  அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ் - அஜித்

ஸ்டார் ஃபிட்னெஸ் - அஜித்

ஸ்டார் ஃபிட்னெஸ் -  அஜித்

ஜித்... பல லட்ச ரசிகர்களின் ஆதர்சம். ஒரு நடிகர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதராக மதிக்கப்படுபவர். பலருக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய தலைவன். ஒரு படத்துக்காக அவர் எடுக்கும் சிரத்தைகள் கவனிக்கப்பட்ட வேண்டிய விஷயம். இத்தனை பெரிய ரசிகப்படை, கணக்கேயில்லா வருமானம் என எல்லாம் இருந்தும் சினிமாவுக்காக அவர் கொடுக்கும் அர்ப்பணிப்புதான் நிறைய பேருக்கான பாடம். அந்த வகையில் இப்போது நடிக்கும் படத்துக்காக இன்னொரு பெரிய விஷயத்தை செய்திருக்கிறார் அஜித்.

அஜித்தின் குறையாக சொல்லப்படுவது அவரது உடல் எடையைத்தான். அதற்கு அவருக்கு நடந்த அறுவைசிகிச்சைகளே காரணம். ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள், தொடர் மாத்திரைகள் என உடலை வருத்தக்கூடிய விஷயங்கள் நிறைய இருந்தாலும், தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து, அப்போது நடிக்கும் படத்துக்கு தேவையான எடையை குறைப்பது அவர் வழக்கம். இப்போது இயக்குநர் சிவாவின் படத்துக்காக 10 கிலோ எடை குறைத்து ‘ஸ்லிம் லுக்’குக்கு மாறியிருக்கிறார் அஜித். எப்படி?

• அஜித்துக்கு கேரள ஆயுர்வேத சிகிச்சை மேல் எப்போதுமே ஆர்வம் உண்டு. அடிக்கடி கேரளாவுக்கு சென்று ஓய்வும் சிகிச்சையும் எடுத்துக்கொண்டு திரும்புவார். அது உடலுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதால், தொடர்ந்து இதை செய்துவருகிறார். இந்த முறையும் கேரள ஆயூர்வேத நிபுணர்கள் சொன்னபடி உணவைக் கட்டுக்குள் வைத்து, இளைத்திருக்கிறாராம் அஜித்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• ஜிம்மை கண்டு பயப்படுபவர் அல்ல அஜித். அவர் முதுக்குத்தண்டில் நடந்த அறுவை சிகிச்சைகள் காரணமாக அதிக எடை தூக்க முடியாது. ஆனால், சின்ன சின்ன பயிற்சிகள் என தினமும் ஆறு மணி நேரங்கள் ஜிம்மில் இருந்திருக்கிறார் அஜித். தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ, அதையும் தாண்டி இதற்காக உழைத்திருக்கிறார் இந்த காதல் மன்னன்.

ஸ்டார் ஃபிட்னெஸ் -  அஜித்

• பைக் ரேஸிங், கார் ரேஸிங், குட்டிக் குட்டி விமானங்கள் ஓட்டுவது, புகைப்படம் எடுப்பது என ஏகப்பட்ட விஷயங்கள் அஜித்தின் “ஃபேவரைட்” பட்டியலில் உண்டு. அதில் நீச்சலுக்கும் முக்கியமான இடம் இருக்கிறது. எடை குறைக்கலாம் என முடிவு செய்ததும் அஜித் சென்று குதித்தது நீச்சல் குளம் தான் என்கிறது படக்குழு.

• அஜித்தின் டிரெயினர் பெயரும் சிவா தான். அவர் அஜித்தின் வொர்க்அவுட் பற்றி சொல்லும்போது “அவரை போல டெடிகேஷன் யாருக்கும் கிடையாது. இன்று இத்தனை பயிற்சிகள் என சொன்னால், அதை முடிக்காமல் ஜிம்மை விட்டு வெளியே போகாது தலையில் கால்” என்கிறார்.

• ஆஸ்திரேலியா, பல்கேரியா என பல நாடுகளில் படம்பிடித்து வருகிறது படக்குழு. அஜித்தின் 57வது படமான இதன் டைட்டிலே இன்னும் வெளியாகவில்லை. ஆனால், எதிர்பார்ப்பு எகிறி போய் கிடக்கிறது. காரணம், தலையின் ஸ்லிம் லுக் படங்கள் தான் என்கிறது கோடம்ப்பாக்கம்.

-கார்க்கிபவா