‘விளையாட்டை விட சிறந்த பயிற்சி எதுவும் இல்லை’ என்பார்கள். பிலியோமெட்ரிக் பயிற்சிகளும் விளையாட்டைப் போலவே மிகவும் சுவாரஸ்யமானவை. பிலியோமெட்ரிக் பயிற்சியைக் குதிக்கும் பயிற்சி என்றும் சொல்லலாம். இந்த வகைப் பயிற்சிகள் பெரும்பாலும் குதித்தலை மையமாகக் கொண்டே இருக்கும். நமது உடலில் ஸ்லோ ட்விட்ச் மசில் ஃபைபர்ஸ் (Slow twitch muscle fibres) மற்றும் ஃபாஸ்ட் ட்விட்ச் மசில் ஃபைபர்ஸ், (Fast twitch muscle fibres) என இரண்டு வகையான தசைநார்கள் உள்ளன. இதில் ஸ்லோ ட்விட்ச் ஃபைபர்ஸ் உடல் குறைந்த அளவிலான இயக்கத்தில் இருக்கும்போது வேலைசெய்யும். ஃபாஸ்ட் ட்விட்ச் ஃபைபர்ஸ் வேகமான இயக்கத்தின்போது வேலை செய்யும். இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்பொழுது இவற்றை இன்னும் சிறப்பாக வேலை செய்யவைக்க முடியும். இளம் வயதில் இருந்தே, இந்தப் பயிற்சியைச் செய்வதன்மூலம், பார்க்கின்சன், ரத்தக்குழாய் அடைப்பு, நரம்பு மற்றும் தசைகள் சார்ந்த நோய்களைத் தவிர்க்க முடியும்.

பலன்கள்:

* விரைவிலேயே வயது முதிர்ச்சி அடைவதைத் தடுக்கும்.

* அதிக எடை உள்ளவர்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

* இந்தப் பயிற்சிகளின்போது நாம் ஆக்சிஜனை அதிக அளவில் எடுத்துக் கொள்வோம் என்பதால், உடலிலுள்ள தசைகளின் வேலை அதிகரிக்கும். இதனால், கொழுப்பு வேகமாகக் கரையும்.

* செல்களுக்குள்ளே இருக்கும் ‘மைட்டோகாண்ட் ரியாவின்’ திறனை அதிகரித்துச் செல்களைப் புதுப்பிக்கும்.

* ஸ்கேட்டிங், கால்பந்து, நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடும் குழந்தைகள் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளும்போது, அவர்களின் செயல் திறன் மேலும் அதிகரிக்கும்.

* இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும் யாரெல்லாம் இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்?

* குழந்தைகள், இளைஞர்கள், பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

* அதிக எடை கொண்டவர்கள், முதியவர்கள், பிசியோதெரப்பி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் முன்னிலையில் பயிற்சிகளை முறையாகக் கற்றுக் கொண்டு, பிறகு செய்ய வேண்டும்.

* இந்தப் பயிற்சிகளை மேற்கொள் வதற்கு முன்னர் எளிமையான வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

* நல்ல தரமான ஷூக்களை அணிவது அவசியம்.

* குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சிகளை மிக எளிதாகச் சொல்லிக்கொடுக்க முடியும். அவர்கள் விளையாட்டு போலவே பயிற்சியை மேற்கொள் வார்கள்.

யாரெல்லாம் செய்யக் கூடாது?

* மூட்டுத் தேய்மானம், அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டாம்.

ஜம்ப்பிங் ரோப்

ஸ்கிப்பிங் ஆடுவோம் அல்லவா...? அதுபோலவே ஸ்கிப்பிங் கயிறு கையில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு கைகளைச் சுழற்றியவாறு குதிக்க வேண்டும். இதுதான் ஜம்ப்பிங் ரோப்.

பலன்கள்:

* குழந்தைகள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் அவர்களின் உயரம் அதிகரிக்கும்.

* புவியீர்ப்பு விசைக்கு எதிரான திசையில் இயங்குவதால், உடலின் பலமும் அதிகரிக்கும்.

பர்பீஸ்

கைகளை முன்னோக்கி ஊன்றியவாறும் முட்டிகள் தரையில் பட்டவாறும் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். அடுத்ததாகக கால்களைப் பின்னோக்கி இழுத்து பாதங்களால் நிலைநிறுத்த வேண்டும். மீண்டும் கைகள் தரையைத் தொட்டவாறே எழுந்து மேல்நோக்கி குதிக்க வேண்டும். இப்படித் தொடர்ச்சியாகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பலன்கள்:

* உடலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் நல்ல பலனைத் தரும்.

* கைகள், தோள்பட்டை தசைகள், இடுப்பு எலும்புகள் உறுதியாகும்.

ஸ்கேட்டர்ஸ் ஹாப்

கால்களைக் கொஞ்சம் மடக்கியவாறு நின்று, இரண்டு கைகளையும் உடலின் முன்புறம் வைத்துக்கொண்டு நேராகப் பார்க்க வேண்டும். வலது காலை கொஞ்சம் தள்ளிவைத்து, இடது காலை வலது காலுக்குப் பின்னே வைக்க வேண்டும். அப்போது இடது கை வலது தோள்பட்டையைத் தொட வேண்டும். அதே போல இடது காலை அகட்டி வைத்து, வலது காலை அதன் பின்னே வைக்க வேண்டும். அப்போது வலது கை இடது தோள்பட்டையைத் தொடும்படி இருக்க வேண்டும். ஸ்கேட்டிங் விளையாட்டில் வீரர்கள் முன்னோக்கி செல்லும்போது இப்படித்தான் செல்வார்கள்.

நம் ஊர் விளையாட்டான நொண்டி விளையாட்டையும் எடுத்துக் கொள்ளலாம். நொண்டி விளையாட்டில் ஒரு காலை மட்டும் பயன்படுத்தி விளையாடுவோம். ஆனால் இந்தப் பயிற்சியில் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.

பலன்கள்:

* இயல்பாக இருப்பதை விடவும் உடலின் சமநிலையை இன்னும் சீராக்க உதவும்.

* மூளையின் இருபக்கச் செயல் திறனும் அதிகரிக்கும்.

* ஸ்கேட்டிங் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

லஞ்சஸ் ஜம்ப்

வலது காலை முன்னே நீட்டி மடக்கியவாறு நிற்க வேண்டும். அப்போது, இடது கால் பின்னே இருக்கவேண்டும். வலது கை உடலுக்குப் பின்னும் இடது கை தோள்பட்டையைத் தொடும்படியும் மடக்கிக்கொள்ள வேண்டும். அப்படியே வலது காலைப் பின்னே இழுத்து இடது காலை மடக்கியவாறு வைக்க வேண்டும். இப்படிக் கால்களை மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும்.

பலன்கள்:

* உடலிலுள்ள தசைகள், நரம்பு, மூளை இவை மூன்றுக்கும் இடையே நல்ல தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும்.

* சோர்வுத்தன்மையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.

ஸ்டார் ஜம்ப்

கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு குனிந்தவாறு இருக்க வேண்டும். பின்னர், கால்களை அகட்டியவாறு கைகளை மேல்நோக்கி வீசி குதித்து, மீண்டும் பழைய நிலைக்கே வர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்ய வேண்டும்.

பலன்கள்:

* கால் தசைகளை உறுதியாக்க இந்தப் பயிற்சி உதவும்.

* பெண்கள் தங்களது கால்களை அழகாகப் பராமரிக்க இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

- க.பாலாஜி

படங்கள்: சக்தி

மாடல்: ஜெயா