‘தர்மதுரை’ படத்தில் கிராமத்து அன்புச்செல்வியாக கலக்குவார். அதே நேரத்தில் ‘காக்காமுட்டை’ பசங்களுக்கு தாயாகவும் நடிப்பார். இடையிடையே ‘குற்றமே தண்டனை’ படத்தில் வருவதுபோல மாடர்ன் குயினாகவும் நடிப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாபாத்திரத் துக்காக உடல்மொழியையும், ஒப்பனையையும் படத்துக்கு ஏற்றாற் போல மாற்றி நடிப்பவர். எந்தப் படமென்றாலும் இவரின் அழகில் தனித்துவம் இருக்கும். இதற்காக இவர் கடைப்பிடிக்கும் ஃபிட்னெஸ் ரகசியம் கொஞ்சம் வித்தியாசமானது.

‘‘ரஞ்ஜித் சாரின் ‘அட்டகத்தி’ படத்தில் நடித்தபோது கொஞ்சம் குண்டாக இருந்தேன். அப்போதுதான் எனக்கே ஒல்லியாக வேண்டும் என்று தோன்றியது. அன்றிலிருந்து இன்று வரை ஒரே உடல் எடையைப் பராமரித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் தமிழ் ஆடியன்ஸுக்கு ரொம்ப ஒல்லியாக இருந்தாலும் பிடிக்காது; ரொம்ப குண்டாகவும் இருக்கக்கூடாது. தமிழ்ப்பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் என்னையும் ஃபிட்டாக வைத்துக்கொள்கிறேன்.

உடற்பயிற்சி என்பது ஏதாவது ஒரு ஆக்டிவிட்டிதான். தினமும் ஜிம்முக்குத்தான் போகவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. வாரத்துக்கு மூன்று நாட்கள்தான் ஜிம்முக்குப் போவேன். மீதி நாட்களில் டான்ஸ், நீச்சல், யோகா என ஏதாவது ஒன்று கண்டிப்பாகச் செய்வேன். நமக்குப் பிடித்த விஷயத்திலேயே, உடற்பயிற்சியும் கலந்துதான் இருக்கிறது. ஜிம்முக்குப் போனால்தான் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்றில்லை. அந்தக் காலத்து ஹீரோயின்கள் யாருமே ஜிம்முக்குப் போய் உடலை ஃபிட்டாக்கவில்லை. இதையெல்லாம்விட பெஸ்ட் விஷயம் வீட்டு வேலைகள் செய்வதுதான். எங்கள் வீட்டுக்கு வேலையாட்கள் வராவிட்டால், நானே எல்லா வேலைகளையும் செய்வேன். அதனால் உடலும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். தேனியின் குக்கிராமத்தில் சில நேரங்களில் ஷூட்டிங் நடக்கும். அந்த நேரத்தில் அறையிலேயே தரைப் பயிற்சிகள் செய்வேன். வெளியூர்களில் ஷூட்டிங்கில் இருக்கும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பேன். அந்த நேரங்களில் அதிகமாக டயட்டை பின்பற்றுவேன்.

எனக்கு ரொம்பப் பிடித்த உணவு மீன்தான். வீட்டில் என்ன காய்கறி செய்தாலும், அதோடு பருப்பு சேர்த்துச் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். எப்போதுமே இரவு சீக்கிரமாகச் சாப்பிடுவேன். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தண்ணீரும், அதிகளவு பழங்களும் சாப்பிட்டாலே போதும். குளிர்பானங்களும், ஸ்வீட்ஸும் சாப்பிடமாட்டேன். அவை இரண்டுமே நமக்கு உடல் அளவில் பிரச்னையை உண்டாகும். இவற்றைத் தவிர பிரியாணி வரைக்கும் எல்லாமே சாப்பிடுவேன். ஆனால், எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவேன்.

திரையில் நடிக்கும்போதுகூட, நமக்கு என்ன கதாபாத்திரம் சரியாக இருக்கும் என யோசித்துதான் தேர்ந்தெடுப்பேன். என்ன உடை நமக்குப் பொருந்தும் என யோசிப்பேன். அழகுக்கான மேக்கப்பை அதிகமாக நம்பி இருக்க மாட்டேன். முடிந்த அளவுக்கு மேக்கப் இல்லாமல் இருப்பேன். ‘தர்மதுரை’ பட ஷூட்டிங்கில் இருந்தபோது, எனக்கான மேக்கப் மஞ்சள் மட்டும்தான். தினமும் காலையில் மஞ்சள் போட்டுக் குளித்துவிட்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான். படத்தில் மேக்கப் மேனுக்கு வேலையே இல்லை. 15 நாட்கள் மஞ்சள் மட்டுமே பயன்படுத்தியதில், முகம் பளபளப்பாகிவிட்டது.

நான் மாநிறம் என்பதால் நிறைய பேர் சிவப்பாக மாற என்னை சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், நான் எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொண்டது கிடையாது. என் கலர்தான் எனக்கு ப்ளஸ். தேங்காயெண் ணெய், சிகைக்காய், கடலைப்பருப்பு என இயற்கையான அழகுப் பொருட்களே போதுமானவை.

சினிமாவுக்கு வருவதற்கு முன் டயட் என்றால் என்ன என்றுகூடத் தெரியாது. இப்போது சில படங்களுக்கு உடல் எடையை ஏற்றியும், குறைத்தும் நடிக்கிறேன். திரையில் பார்க்கிறவர்களுக்கு, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும் உணவுமுறையுமே போதுமானவை.

மனதளவில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். மனம்விட்டு நன்றாக சிரித்தாலே முகமும் அகமும் அழகாகும்.’’

- முத்து பகவத்