Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்!
ஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்!

அலுக்காத உடற்பயிற்சி... சலிக்காத டயட்... அளவான தூக்கம்...

பிரீமியம் ஸ்டோரி

சொன்னபடியெல்லாம் கேட்கிற, மக்கர் பண்ணாத உடல்வாகு நடிகர் விக்ரமுக்கு.

படத்தில் கமிட் ஆன நொடி முதல் அந்தக் கேரக்டராகவே வாழத் தொடங்குவார். படம் பார்க்கிற ரசிகர்களுக்கு விக்ரம் என்கிற கேரக்டரே மறந்து போகும்.பல மாதங்கள் உழைத்து, கேரக்டருக்காக மாறியவர், ஷூட்டிங் முடிந்த சில நாள்களிலேயே 'மிஸ்டர் ஸ்மார்ட்'டாக மாறி வந்து நிற்பார். அதுதான் விக்ரம் மேஜிக்!

ஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்!

என்னதான் சார் உங்க சீக்ரெட்ஸ்?

''பெரிசா ரகசியம்னு ஒண்ணுமில்லை. பாலிவுட்ல பார்த்தீங்கன்னா சல்மான் கான் போல சிலர் ஒரே மாதிரி உடல்வாகோட நாலஞ்சு படங்கள் பண்ணுவாங்க. என் விஷயத்துல அது சரிவராது. திடீர்னு ஒல்லியாகணும், திடீர்னு சிக்ஸ் பேக் வைக்கணும், திடீர்னு கரடுமுரடான தோற்றத்துக்கு மாறணும்..  ஒரே படத்துல ரெண்டு விதமான உடல்வாகோடு வர வேண்டியிருக்கும். மும்பையில உள்ள என் காஸ்ட்யூமர்கூட, 'உனக்கு சோர் பாடி' (திருட்டு உடம்பு)னு கிண்டலடிப்பாங்க. அதாவது மத்தவங்களுக்கெல்லாம் படம் ஆரம்பிக்கிறபோது, ஒரு தடவை காஸ்ட்யூமுக்கு அளவெடுத்தா, படம் முடியற வரைக்கும் அது மாறாது. ஆனா, என் விஷயத்துல மாறிடும். அதனால குறிப்பிட்ட ஒரு டயட் பேட்டர்னை என்னால் ஃபாலோ பண்ண முடியாது. ஒரே ராத்திரில டயட் இருந்து, மேஜிக் மாதிரி தோற்றத்தை மாத்திட முடியாது...'' சீயான் சீக்ரெட்ஸ் சொல்பவர், டயட் மற்றும் எக்சர்சைஸ் ரொட்டீனைப் பின்பற்ற நினைப்பவர்களுக்கு சூப்பராக சில டிப்ஸும் தருகிறார்.

''குறிப்பிட்ட ஒரு டயட்டை ஃபாலோ பண்ணும்போது தொடர்ந்து ஒரே மாதிரியான உணவுகளைச் சாப்பிடறது போரடிக்கும். அதனாலேயே நிறைய பேர் தொடர்ந்து டயட் பண்ண முடியாம, பாதியிலேயே விட்டுடறாங்க. ஒவ்வொரு படத்துல நடிக்கிறபோதும், அந்தந்த கேரக்டருக்கு ஏற்றபடியான உடல்வாகுக்குத் தயாராகணும். அதுக்கேற்றபடியான டயட்டை என் ட்ரெயினர்ஸ் டிசைன் பண்ணிக் கொடுப்பாங்க.  நாலே நாள்ல அது சலிச்சுப் போயிட்டா அப்புறம் என்னால அந்தக் கேரக்டருக்கு உடலளவுல தயாராகவே முடியாதே...  அதனால என் டயட்டீஷியன் எனக்குப் பரிந்துரைக்கிற டயட்டை எப்படி டேஸ்ட்டியா மாத்திச் சாப்பிடலாம்னு டிஸ்கஸ் பண்ணி, அதன்படி சாப்பிடுவேன். சியா சீட்ஸ், க்வினானு சொல்ற சீமைத்தினை.. இதையெல்லாம் சேர்த்துக்கிட்டா ஆரோக்கியம், சுவைனு ரெண்டுமே அதிகமாகும். உங்க டயட்டும் போரடிக்காது.

ஒவ்வொரு படத்துக்கும் நான் உடலை வருத்தி மெனக்கெடும்போது பலரும் கேட்கற விஷயம், 'ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்? மேக்கப்லயும், கிராஃபிக்ஸ்லயும் சமாளிக்க முடியாதா'ங்கிறதுதான். என்னைப் பொறுத்தவரைக்கும் நடிகர் தன்னோட தோற்றத்தால்  மட்டுமே  அந்தக் கேரக்டருக்கு உயிரூட்டிட முடியாதுனு நம்பறேன். ஒரு கேரக்டரில் கமிட்  ஆகறேன்னா,  நான்  மனசளவுலயும்  உடலளவுலயும் அந்த கேரக்டராகவே மாறணும். அப்பதான் அந்தக் கேரக்டர் உயிர் பெறும். மேக்கப்போ, கிராஃபிக்ஸோ ஆளை மாத்துமே தவிர, உணர்வுகளை மாத்த உதவாது. 'சேது'வில் ஆரம்பிச்சு, 'ஐ' வரைக்கும் என் கேரக்டர்கள் பேசப்பட்டதுன்னா காரணம் என்னுடைய அந்த மெனக்கெடல்தான். அந்த வகையில பல நேரங்களில் எனக்கு உதவினது 'பிளையோமெட்ரிக்ஸ்' பயிற்சிகள். குறைஞ்ச நேரத்துல அதிக பலன்களைத் தரக்கூடியவை இந்தப் பயிற்சிகள்.

உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் செய்யறது மூலமா ஃபிட்டாகலாம். ஆனா, சிலவகைப் பயிற்சிகள் உடல்சூட்டை அதிகரிக்கக்கூடும்.  அதுக்காக, அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. அதுக்கேத்தபடியான உணவுகளை எடுத்துக்கிறதும், தலைக்கும் உடம்புக்கும் ஆயில் மசாஜ் செய்துக்கிறதும் அவசியம்...'' அக்கறையாகச் சொல்பவர் தரும் கூடுதல் டிப்ஸ், ஆரோக்கிய விரும்பிகள் அனைவருக்குமானவை.

''அளவான தூக்கம், எக்சர்சைஸ், சரியான சாப்பாடு... இந்த மூணும்தான் என்னோட ஃபிட்னெஸ் மந்திரம். சீக்கிரமே தூங்கப் போய், சீக்கிரமே எழுந்திருக்கணும். கட்டாயம் எக்சர்சைஸ் பண்ணணும். அளவாகச் சாப்பிடணும். சர்க்கரையும் பாலும் இல்லாத காபி, டீ பெட்டர். ஆன்டி ஆக்சிடனட்ஸ் அதிகமா இருக்கிறதால கிரீன் டீ நிறைய குடிக்கலாம்.  எல்லாத்தையும்விட முக்கியம், சாப்பாட்டுல உப்பின் அளவை முடிஞ்சவரைக்கும் குறைச்சே ஆகணும்.''

- ஆர்.வைதேகி

படம்: ஜி. வெங்கட்ராம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு