Published:Updated:

நட்பு மட்டுமல்ல... உங்க ஹெல்த்தும் ஸ்ட்ராங்காகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நட்பு மட்டுமல்ல... உங்க ஹெல்த்தும் ஸ்ட்ராங்காகும்!
நட்பு மட்டுமல்ல... உங்க ஹெல்த்தும் ஸ்ட்ராங்காகும்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ஃபிட்னெஸ் சிரத்தை

பிரீமியம் ஸ்டோரி

ன்னடத்தில் ‘யு டர்ன்’ படத்தின் மூலம் நடிப்புலகில் என்ட்ரி கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ என டாப் கியரில் முன்னணி இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ஷார்ப் ஃபீச்சர்ஸ் உடன்  ஸ்மார்ட்டாக இருக்கும் ஷ்ரத்தா, ஃபிட்னெஸ் விஷயத்திலும் செம ஷார்ப்பாம்.

``நடிக்க வர்றதுக்கு முன்னாடி நான் பயங்கர குண்டா இருந்தேன்னா நம்புவீங்களா? ஆனா அதுதான் உண்மை! நடிகையாகறதுனு முடிவெடுத்ததும் எனக்கு முன்னாடி நின்ன முதல் சவால், வெயிட்டைக் குறைக்கிறது.  எனக்கு அருமையான பயிற்சியாளர் கிடைச்சார். அவர் கொடுத்த ஊக்கம்தான் என்னை வெயிட்டைக் குறைக்கறதுக்கான முயற்சிகளைச் செய்ய வெச்சது. தினம் மூணு வேளை வொர்க் அவுட் பண்ணணும்னு என்னை விரட்டுவார். அப்படியொரு மோட்டிவேஷன் எல்லாருக்கும் அவசியம்.

வொர்க் அவுட் பண்றதுங்கிறது சிலருக்குத் தவம் மாதிரி. என்னதான் பயங்கர பிஸி ஷெட்யூலா இருந்தாலும் ஹெவியான சீன்ஸ்ல நடிச்சு முடிச்சிட்டு வந்தாலும் அதுக்கப்புறம் வொர்க் அவுட் பண்ணிட்டுத்தான் அடுத்த வேலைகளைப் பார்க்கிற எத்தனையோ ஹீரோ, ஹீரோயின்களைப் பார்த்திருக்கேன். ஆனா எனக்கு அது சரியா வராது.

நட்பு மட்டுமல்ல... உங்க ஹெல்த்தும் ஸ்ட்ராங்காகும்!

ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வொர்க் அவுட் பண்ணிடுவேன். ஷூட்டிங் இருந்தாலோ, டிராவல் பண்ணிட்டிருந்தாலோ வொர்க் அவுட் பண்ண முடியாது. அப்பல்லாம் டயட்ல இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துப்பேன்.

‘தினமும் வொர்க் அவுட் பண்றது போரடிக்கலையா’னு நீங்க கேட்கலாம். வொர்க் அவுட் பண்றதோட சுகத்தை அதுல இறங்கி அனுபவிச்சவங்களாலதான் உணர முடியும். பண்ணிப் பழகிட்டீங்கன்னா அதைப் பயங்கர ஃபன்னா ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுவீங்க. நான் காலையில 5 மணிக்கு ஷூட்டிங் போயிட்டு ராத்திரி 9.45க்கு வீட்டுக்குத் திரும்புவேன். செம டயர்டா இருக்கும். ஆனாலும் யாராவது ஒருத்தர் என்னை மோட்டிவேட் பண்ணிட்டாங்கன்னா அந்தக் களைப்புலயும் வொர்க் அவுட் பண்ணிட்டுத்தான் தூங்கப்போவேன்.

எனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும். ஆனாலும் எதைச் சாப்பிடணும்... எதைச் சாப்பிடக்கூடாதுனு தெரிஞ்சு சாப்பிடுவேன். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சாதம், சப்பாத்தி, மைதா அயிட்டங்களைச் சாப்பிடமாட்டேன். அதிகப் புரோட்டீனும் அதிக நார்ச்சத்தும் உள்ள உணவுகளைச் சாப்பிடுவேன். அதுக்காக கார்பேஹைட்ரேட்டே கூடாதுனு அர்த்தமில்லை. அளவைக் குறைச்சு சாப்பிடணும்.

ஒரு காலத்துல நான் பார்ட்டி பிரியையா இருந்திருக்கேன். இப்பக் குறைச்சிட்டேன். நல்ல ஆட்கள்... நல்ல சூழல்னு உத்தரவாதமாத் தெரிஞ்சா மட்டும்தான் பார்ட்டிகளுக்குப் போவேன். இப்பல்லாம் என் டயட்டைக் கெடுக்காத சாப்பாடு இருக்குமாங்கிறதையும் பார்த்துத்தான் பார்ட்டிக்குப் போறேன். அப்படிப் போற பார்ட்டிகளும் ரொம்ப நெருக்கமானவங்க நடத்தற ஹோம் பார்ட்டிகளா இருக்கும்.

நடிகைகள்னா ஸ்லிம்மாத்தான் இருக்கணுமா? குண்டா இருந்தா என்னனு நிறைய பேர் கேட்கலாம். ஸ்லிம்மா இருக்கறதை அழகோடு மட்டும் பொருத்திப் பார்க்காம ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் பார்க்கிறது முக்கியம். ஒல்லியாகறேன்ற பேர்ல சைஸ் ஸீரோவுக்குப் போகறதுல எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. கிளாமர் கேரக்டர் பண்ண நினைக்கிறவங்களுக்கு வேணும்னா அது தேவைப்படலாம்.

எனக்கு ரன்னிங் ரொம்பப் பிடிக்கும். பெங்களூருல இருந்த நாள்கள்ல கப்பன் பார்க்ல ரன்னிங் பண்றது என்னோட ஃபேவரைட் வொர்க் அவுட்டா இருந்திருக்கு. ஞாயிற்றுக்கிழமைகள்ல கப்பன் பார்க்ல நிறைய பேர் ஜாக்கிங் பண்ணிட்டிருப்பாங்க. அதுவே பயங்கர மோட்டிவேஷனா இருக்கும். இப்பகூட பெங்களூர்ல இருக்கிற என் ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க... பாதிநாள் சென்னையில ஷூட்டிங்ல பிஸியா இருக்கேன். ஃப்ரெண்ட்ஸையும் அவங்ககூட பண்ற ரன்னிங்கையும் பயங்கரமா மிஸ் பண்றேன். அடுத்த மாசம் ஃப்ரீ டைம் கிடைக்கும்போது கண்டிப்பா வரேன்’னு சொல்லியிருக்கேன். நண்பர்களுடன் ரன் பண்ற அந்த எக்ஸ்பீரியன்ஸே தனி. வொர்க்அவுட் பண்ண அலுத்துக்கிறவங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்லட்டா? ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து வொர்க் அவுட் பண்ணுங்க. நட்பு மட்டுமில்லை, உங்க ஹெல்த்தும் ஸ்ட்ராங்காகும்.’’

சீக்ரெட் சொல்லி சைன் ஆஃப் செய்கிறார் ஷ்ரத்தா.

- ஆர்.வைதேகி

படம்: கல்யாண் யாசவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு