திருமணத் தேதி தெரிந்த மணமகளின் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மகிழ்ச்சி, பதற்றம், படபடப்பு எனச் சாப்பிடவும் தூங்கவும் தோன்றாமல் தன்னை மறந்த மனநிலையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கூடவே திருமண நாளில் ஜொலிப்பதற்காக அதிகம் மெனக்கெட ஆரம்பிப்பார்கள். விழாவின் தேவதையாக மணமேடையில் அமரப் போகிறவள் தன் சருமம், தோற்றம், ஆரோக்கியம் என அனைத்திலும் கவனம் செலுத்தியாக வேண்டும். பார்த்துப் பார்த்துத் தோற்றத்தை மெருகேற்றும் மணப்பெண் திருமணத்துக்குப்பின் அப்படியே மாறிவிடுவார். புகுந்த வீட்டு உணவு, உறவினர்கள் அளிக்கும் விருந்து, மகிழ்ச்சி, பூரிப்பு என ஒரு சுற்று எடை கூடி விடுவார். புது மணமகளாக இருக்கும் பெண்களுக்காகத் திருமணத்துக்கு முன் - பின் எனக் கடைப்பிடிக்க வேண்டிய டயட் குறித்து விளக்குகிறார், சேலம் ‘ஈட் ரைட்’ டயட் கிளினிக் உணவு ஆலோசகர் அபிராமி வடிவேல்குமார்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த உணவு முறையைப் பின்பற்றினால் முகத்திலும் சருமத்திலும் பொலிவைக் கூட்டலாம்.

* தினமும் பச்சைக் காய்கறிகள், பழ வகைகள் இரண்டு முதல் மூன்று கப் வரை கண்டிப்பாகச் சாப்பிடவும். அதிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் உங்கள் சருமத்துக்குத் தேவையான சத்துகளை வழங்கி இளமையைக் காக்கும்.

* பால், தயிர், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளிலிருந்து வைட்டமின் ஏ, வைட்டமின் டி, கால்சியம் சத்துகள் கிடைக்கின்றன. இவை உடல் ஆரோக்கியத்தைக் கூட்டுவதோடுச் சருமத்தைப் பொலிவாக்குகிறது.

* தினமும் இரண்டு கப் அளவில் பருப்பு மற்றும் சுண்டல் சேர்க்கவும். பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு போன்றவற்றையும் சுண்டலாகச் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் அதிக அளவில் கிடைக்கும்.

* அதிகப்படியான அரிசி சாதம், எண்ணெய்ப் பலகாரம், இனிப்பு வகைகள், பிரெட், பிஸ்கட் ஆகிய பேக்கரி உணவுகள், சர்க்கரை நிறைந்த ஜூஸ் வகைகள்... இவை அனைத்தும் சரும நலனுக்கு எதிரிகள். இவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டாம்.

* ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அல்லது அதற்கு மேலும் பருகுவது சருமத்தை ஈரப்பதத்துடனும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

* உணவில் கவனம் செலுத்துவதோடு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி அவசியம். இது உடல் எடையைக் கட்டுக்கோப்பாக இருக்க உதவும்.

திருமணத்துக்குப் பின் கவனிக்க வேண்டியவை:

* திருமணத்துக்குப் பின் தொடர் விருந்து போன்ற நிகழ்வுகளால் அதிக இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படும். அதிலும் அசைவம் விருந்துகளால் எடை சரசரவென அதிகரிக்க வாய்ப்புள்ளது. சாப்பிடும் அளவில் கவனமாக இருக்கவும். சுவையாக இருக்கிறது, வற்புறுத்தினார்கள் என்பதற்காகக் கூடுதலாகச் சாப்பிடுவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிடவும்.

* நீங்கள் விருந்துக்குச் செல்லும் இடங்களில் உறவினர்களிடம் நட்பாகப் பேசி அவர்களுக்கும் உங்கள் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை உணர வையுங்கள். ஏனெனில் எடையைக் குறைப்பதைக்காட்டிலும், எடைகூடாமல் இருக்கச் செய்யும் முயற்சிகள் எளிதானதுதான்.

* கணவன் மனைவி இருவருமாகத் தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி அல்லது ஏதாவது ஓர் உடற்பயிற்சியைப் பழக்கப்படுத்துங்கள். உடல் கட்டுக்கோப்பாக இருப்பதுடன் உங்கள் இருவருக்குமான புரிதலுக்கும் இது உதவும்.

* விருந்து சாப்பிடப்போகும் அன்று காலை வேளையில் பருப்புடன் கலந்த காய்கறி சூப் அருந்துங்கள். மிதமாகச் சாப்பிடுங்கள். அதேபோல் விருந்தன்று இரவிலும் பழங்கள் மட்டும் போதும். பயறு சுண்டல் எடுத்துக் கொள்ளலாம். இதை எப்போதும் கடைப்பிடித்தால் எடைகூட வாய்ப்பில்லை.

* உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.

* இரவில் அதிக நேரம் கழித்து அதிக அளவு உணவு உண்பதையும் உடனே படுத்து உறங்குவதையும் தவிர்க்கவும். சரியான வேளைக்குச் சாப்பிடுவதோடு, தேவையற்ற நேரத்தில் நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் அவ்வளவு அவசியம்.

- திருமகள்

சரும ஆரோக்கியத்துக்கான குறிப்புகள்:

உடல் ஆரோக்கியத்துக்கு உண்ணும் உணவின் மூலம் சருமப் பிரச்னைகளுக்கான தீர்வைச் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் உமா மைதிலி.

* கேரட்டை அரைத்துப் பாலில் கலந்து உடலில் தடவி, பத்து நிமிடங்கள் ஊற விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதை வாரம் மூன்று முறை செய்து வர சருமத்தின் பளபளப்பு கூடும்.

* ஆரஞ்சு, கேரட், எலுமிச்சை இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துச் சாறு எடுக்கவும். இத்துடன் தயிர் சேர்த்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி உலர விடுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால், பொலிவிழந்த சருமம் ஜொலிஜொலிக்கும்.

* இரவில் தூங்கச்செல்லும்முன், எலுமிச்சைச் சாற்றில் பஞ்சை நனைத்து முகப்பருக்களின் மீது தடவவும். சில நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிய பின் தூங்கச் செல்லுங்கள். நாளடைவில் முகப்பருக்கள் குறைந்து முகம் பளிச்சிடும்.

* ஒரு டேபிள்ஸ்பூன் புதினா விழுதுடன் கால் டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். இதை தினசரி செய்துவந்தால் சருமத்தின் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.