ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையைக் குறைக்க, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க, தேவையற்ற கொழுப்பு உடலில் தேங்கிவிடாமல் செய்ய உடற்பயிற்சி அவசியமாகிறது. உடற்பயிற்சிப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, மூடநம்பிக்கைகள். எது சரியான நம்பிக்கை..? எது மூடநம்பிக்கை...?

நம்பிக்கை: உடல் பருமனாகக் காரணம், உடம்பில் அதிக அளவில் கொழுப்பு இருப்பதுதான்.

உண்மை: உடல் எடை அதிகமாக இருப்பதற்குக் காரணம் கொழுப்பு மட்டுமல்ல. உள்ளுறுப்புகளின் அளவுக்கேற்றார்போல கொழுப்பின் அளவும் மாறும். கொழுப்பின் அளவோடு, எலும்புகள், தசைகள் உடலின் நீர் அளவும் சேர்ந்தே உடல் பருமனுக்குக் காரணமாகிறது.

நம்பிக்கை: நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்.

உண்மை: ஒவ்வோர் உடற்பயிற்சிக்கும் நன்மைகளும் உண்டு, பக்கவிளைவுகளும் உண்டு. உதாரணமாக, ஏரோபிக் பயிற்சிகளால் கொழுப்பு மட்டும் குறையும். நாம் உண்ணும் உணவின் மூலம் 1200 கலோரி கிடைக்கிறது. உடற்பயிற்சியால் 1400 கலோரி எரிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது உணவிலிருந்து கிடைக்கும் கலோரியின் அளவை விட எரிக்கப்படும் கலோரியின் அளவு அதிகமாக இருக்கும்போது, மீதி 200 கலோரி உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். இதனால் உடலுக்குத் தேவையான கலோரிப் பற்றாக்குறை ஏற்படும். எனர்ஜி லெவல் குறையும். அதனால் நீண்ட நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்யக் கூடாது.

நம்பிக்கை: உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கணக்கிட `வேயிங் மெஷின்’ உதவுகிறது.

உண்மை: முழு உடல் எடையையும் ‘வேயிங் மெஷின்’ கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளும். கொழுப்பை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளாது. ‘வேயிங் மெஷின்’ உடற்பயிற்சியால் உடலில் உள்ள கொழுப்பு எவ்வளவு கரைந்தது என்பதைக் கணக்கிட்டுக் காட்டாது. உடற்பயிற்சியால் உடல் எடை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று தோராயமாகக் கணக்கிட மட்டுமே பயன்படும்.

நம்பிக்கை: கடுமையான டயட்டால் உடல் எடையையும் கொழுப்பையும் குறைக்க முடியும்.

உண்மை: டயட்டால் உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க முடியும். ஆனால், இதுபோன்ற கட்டுப்பாட்டு உணவு முறைகளால் உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. உடல் உள்ளுறுப்புகள் சீராக இயங்கத் தேவையான கலோரி, நீர்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துகளும் கிடைக்காமல் போகலாம். சாப்பிடாமல் இருப்பதாலோ கடுமையான டயட்டினாலோ உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால், அது தற்காலிகமானதே. எப்போதும் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆரோக்கியமான உடல் எடையைப் பெற, சரிவிகித உணவு முறையே சிறந்தது. அதிலும் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையைப் பொறுத்து சரிவிகித உணவுமுறை மாறும்.

நம்பிக்கை: கொழுப்பு உணவுகளைக் குறைந்த அளவு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

உண்மை: இந்தக் கருத்து தவறானது. இது ஒவ்வொருவரின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வளர்சிதை மாற்றப் பிரச்னை உள்ளவர்கள் ஆகியோருக்குக் குறைந்த அளவு கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் உடல் எடை குறையாது.

நம்பிக்கை: உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

உண்மை: உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, நமக்கான செயல்களை நாமே செய்து பழகுவது, கூடுமானவரை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது போன்று நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அலுவலகத்தில் லிஃப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருள்கள் வாங்கலாம்.

நம்பிக்கை: உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க (Spot reduction) முடியும்.

உண்மை: அப்படிக் குறைக்க முடியாது. ஆனால், பிரத்யேகப் பயிற்சிகளின் மூலம் உடல் பாகங்களில் உள்ள கொழுப்பைப் படிப்படியாக குறைத்துக்கொண்டே வர முடியும். உதாரணமாக, கொழுப்பு கரைவதை முதலில் பிரதிபலிப்பது நமது கன்னங்கள். அதன் பின், கைகள், கால்கள் எனப் படிப்படியாக உடலில் உள்ள கொழுப்பு குறையும். தவிர, குறிப்பிட்ட ஓர் இடத்தில் உள்ள கொழுப்பை மட்டும் தனியாகக் குறைக்க முடியாது.

நம்பிக்கை: மருந்து, மாத்திரைகள் மூலம் கொழுப்பைக் கரைக்கலாம்.

உண்மை: உடற்பயிற்சி, உணவுகள் மூலம் கொழுப்பைக் கரைக்க முடியும். ஆனால், தற்போது மருந்துச் சந்தைகளில் உடல் பருமனைக் குறைக்க, கொழுப்பைக் கரைக்க என மருந்துகளும் மாத்திரைகளும் அதிக அளவில் விற்கப்படுகின்றன. அவை, உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில்லை. மாறாக, கொழுப்பு சேர்வதைக் குறைக்கும். பசியின்மையை உண்டாக்கும். அதே நேரம், இவை. பல்வேறுவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த மாதிரியான மருந்துகளால் உடலின் உள்ளுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.

நம்பிக்கை: உடற்பயிற்சி செய்யும்போது அதிகப் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

உண்மை: உடற்பயிற்சியின்போது புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதால், தசைகள் வளர்ச்சியடையும். ஆனால், புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நம்பிக்கை: கார்டியோ இயந்திரம் நீங்கள் எரிக்கும் கலோரிகளைக் கணக்கிடுகிறது.

உண்மை: ஒருவரின் வயது, உடல்நிலை, பிஎம்ஐ மற்றும் பாலினத்தின் அடிப்படையில் எரிக்கப்படும் கலோரியின் அளவு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொருவரின் வயது, உடல்நிலைக்குத் தகுந்தவாறு உடற்பயிற்சியால் எரிக்கப்படும் கலோரியின் அளவும் மாறுபடும். சில இயந்திரங்கள் உடலின் எடை அல்லது பாலினத்தை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளாது.

நம்பிக்கை: உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளிப்பட்டால் கடினமாக உடற்பயிற்சி செய்துவிட்டீர்கள் என்று பொருள்.

உண்மை: நமது உடலின் உஷ்ணமே வியர்வையாக வெளியேறும். எப்போதெல்லாம் நம்முடைய உடல் உஷ்ணம் அடைகிறதோ அப்போதெல்லாம் நம்முடைய உடல் குளிர்ச்சியடைய சருமத்தின் வழியாக வியர்வை வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் உடலின் நீர்த் தன்மை குறைந்து தாகம் உண்டாகும்.இதற்கும் உடற்பயிற்சிக்கும் தொடர்பு இல்லை. அதிக அளவு வியர்வை வெளியேறக் காரணம் உடலில் உள்ள உஷ்ணம். இது ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும்.

நம்பிக்கை: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

உண்மை: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால், உடலில் ஆற்றல் இழப்பு ஏற்படும். அதனால் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்குத் தேவையான எனர்ஜியின் அளவு குறைவாக இருக்கும் என்பதே காரணம்.

நம்பிக்கை: உடற்பயிற்சி, உணவு மூலமாக உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க முடியும்.

உண்மை: இது ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாகச் சிலர் குறைந்த கொழுப்பு, அதிகப் புரதம் நிறைந்த டயட் முறையைப் பின்பற்றுவார்கள். ஆனால், உடலில் உள்ள கொழுப்பு கரையவில்லை, உடல் எடைக் குறையவில்லை என்பார்கள். அதற்கு தைராய்டு மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.

நம்பிக்கை: உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் சாப்பிடக் கூடாது.

உண்மை: உடற்பயிற்சி செய்யும் முன்பும் செய்து முடித்த பின்பும் உணவு சாப்பிடக் கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு முன் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தேங்கிவிடும். மேலும், உடலின் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். உணவு சாப்பிட்டு இரண்டுமணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது உடற்பயிற்சி செய்து முடித்தபின்னர் ஒருமணி நேரம் கழித்து உணவு உண்ணலாம்.

- ச.மோகனப்பிரியா