ஹெல்த்
Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்: “சாம்பார் சாதம்.... டான்ஸ்.... ரெஸ்ட்...” - ஸ்ருதி ஹாசனின் சூப்பர் ஃபிட்னெஸ்!

ஸ்டார் ஃபிட்னெஸ்: “சாம்பார் சாதம்.... டான்ஸ்.... ரெஸ்ட்...” - ஸ்ருதி ஹாசனின் சூப்பர் ஃபிட்னெஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ்: “சாம்பார் சாதம்.... டான்ஸ்.... ரெஸ்ட்...” - ஸ்ருதி ஹாசனின் சூப்பர் ஃபிட்னெஸ்!

ஃபிட்னெஸ்

ரசியல் சர்ச்சை, பர்சனல் லைஃப் என எந்த விஷயத்தில் அப்பா கமல் பற்றிக் கருத்துக் கேட்டாலும் சொல்ல மறுக்கும் ஸ்ருதி, வொர்க் அவுட் பற்றிக் கேட்டால் அப்பா புகழ் பாடுகிறார்.

‘‘நடிப்புல மட்டுமில்லை, ஃபிட்னெஸ் விஷயத்துலயும் அப்பாதான் எனக்கு குரு. வொர்க் அவுட் விஷயத்துல அப்பா ஒருநாளும் எக்ஸ்கியூஸ் கொடுக்கவே மாட்டார். ஒரு சிலநாள் ‘ஹையோ.... இன்னிக்கு ஜிம்முக்குப் போயே ஆகணுமா.... ஒருநாள் விட்ரலாமே'னு தோணும். ஆனா, அப்பா சம்மதிக்கவே மாட்டார். என்னவா இருந்தாலும் வொர்க் அவுட் பண்ணியே ஆகணும். எங்களுக்கு அதை அட்வைஸ் பண்றதோடு இல்லாம அப்பாவும் அதைத்தான் ஃபாலோ பண்ணுவார். அப்பாவோட லைஃப்ல வொர்க் அவுட் பண்ணாத நாள்களே இருக்காது.

ஸ்டார் ஃபிட்னெஸ்: “சாம்பார் சாதம்.... டான்ஸ்.... ரெஸ்ட்...” - ஸ்ருதி ஹாசனின் சூப்பர் ஃபிட்னெஸ்!

ஃபிட்னெஸோட சீரியஸ்னஸ் தெரியற வரைக்கும் அப்பா சொன்னதோட அர்த்தம் புரியலை. ஆனா, நானும் நடிகையான பிறகு உடம்பை எவ்வளவு ஃபிட்டா வெச்சுக்கணும்ங்கிற தெளிவு வந்த பிறகு புரியுது...''

ஸ்வீட்டாகச் சொல்கிற ஸ்ருதி, தனது ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பகிர்கிறார்.

‘‘சாப்பாட்டு விஷயத்துல முடிஞ்சவரைக்கும் கவனமாவே இருப்பேன். ஆனா, ரொம்ப பசிச்சு, சாப்பிடணும்னு தோணினா, சாம்பார் சாதம், தயிர்சாதமெல்லாம் சாப்பிடுவேன்.  என் வயிற்றுக்கும் உடம்புக்கும் நானே தண்டனை கொடுத்துக்க மாட்டேன். ஒருகாலத்துல நான் பயங்கரமா டயட் பண்ணியிருக்கேன். ஆனா, ஓவரா டயட் பண்ணும்போது சந்தோஷம்ங்கிறதே இருக்காது. அது நல்லதில்லை. ஹெல்த்தியா சாப்பிடணும். என்னிக்காவது பிடிச்சதைச் சாப்பிடணும்னு தோணினா, திருப்தியா சாப்பிடறதுல தப்பே இல்லை. அதுக்காக தினமும் அப்படிச் சாப்பிடலாம்னு அர்த்தம் எடுத்துக்க வேண்டாம்.

கார்டியோ எக்சர்சைஸ் என் ஃபேவரைட். ஷூட்டிங் போகும்போது எல்லா இடங்கள்லேயும் ஜிம் இருக்கும்னு சொல்ல முடியாது. அதுக்காகவே ஜிம் இல்லாமப் பண்ணக்கூடிய வொர்க் அவுட்டையும் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இல்லைனா கார்டியோவும் ஃப்ளெக்ஸிபிலிட்டி ட்ரெயினிங்கும் பண்ணுவேன்.

ஸ்டார் ஃபிட்னெஸ்: “சாம்பார் சாதம்.... டான்ஸ்.... ரெஸ்ட்...” - ஸ்ருதி ஹாசனின் சூப்பர் ஃபிட்னெஸ்!

எனக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். அதைப் போல பெஸ்ட் எக்சர்சைஸ் வேற இல்லைன்னே சொல்லலாம். டான்ஸ்ல ஆர்வம் உள்ளவங்க உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்னு சொல்லணும். பிடிச்ச விஷயத்தைச் செய்றது ஒரு பக்கமிருக்க, அதுவே அவங்களுக்கான எக்சர்சைஸாகவும் அமைஞ்சிடும்.

ஒரு படத்துல என் கேரக்டர் இப்படித்தான் இருக்கணும்னு இருந்தா, அதுக்காக மெனக்கிடுவேன்.  அப்போ என் கவனமெல்லாம் அந்த கேரக்டரைப் பத்தினதாகத்தான் இருக்கும். சாப்பாட்டைப் பற்றி யோசிக்க மாட்டேன். ‘பெஹன் ஹோகி தெறி' படத்துல எனக்கு லக்னோ பஞ்சாபி பொண்ணு கேரக்டர். அதுக்குப் பொருத்தமா கொஞ்சம் வெயிட்டை ஏத்தணும்னு டைரக்டர் கேட்டுக்கிட்டார். அதனால கஷ்டப்பட்டு வெயிட் போட்டேன். அடுத்த படத்துக்கு அந்த வெயிட்டை எல்லாம் குறைச்சுட்டு பழையபடி கரெக்ட் வெயிட்டுக்குத் திரும்பணும். இத்தனை வருஷ சினிமா கரியர்ல எனக்கு டயட்டும் எக்சர்சைஸும்தான் ஹெல்ப் பண்ணியிருக்கு. இந்த விஷயத்துலேயும் அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

செலிபிரிட்டியா இருந்தாலும் நானும் பெண்தானே?  பீரியட்ஸ் டைம்ல எங்களுக்கும் உடம்புல அசௌகரியங்கள் இருக்கும். நடிகை என்ற காரணத்தினாலேயே அந்த நாள்கள்லேயும் உடம்பை வருத்தி வொர்க் அவுட் பண்ண மாட்டேன். முதல்ல நம்ம உடம்புமேல நமக்குப் பரிவும் அக்கறையும் இருக்கணும்.

நல்ல எக்சர்சைஸ் ரொட்டீன் என்ன தெரியுமா? தொடர்ந்து வொர்க் அவுட்டுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை ரெஸ்ட்டுக்கும் கொடுக்கணும்.  என் பாலிசியும் அதுதான்!''

- ஆர்.வைதேகி