கண்கள்... நாம் உலகைப் பார்க்க உதவும் ஒளித்திரை. அதுமட்டுமல்ல; நம் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இத்தகைய அழகான கண்களால் டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பார்க்க மணிக்கணக்கில் பயன்படுத்துவதாலும் தூக்கமின்மையாலும் விழித்திரைகள் பாதிக்கப்படுகின்றன. இப்படிப் பாதிப்புக்குள்ளாகும் கண்களைக் காத்துக்கொள்ள சில பயிற்சிகள் உள்ளன. அவை குறித்து விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் விருந்தா.

தியானம்

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். கைகளைக் கோத்து வயிற்றுக்குக் கீழே மடியில் வைத்துக்கொள்ளவும். மெதுவாகக் கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் வரை இருக்கலாம்.

ஜூம் இன், ஜூம் அவுட் (Zoom in, Zoom out):

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். கண்களுக்கு நேர்க்கோட்டில் இருக்கும்படி, கைகளை நேராக நீட்டி இரண்டு கை விரல்களையும் மடக்கி, `தம்ஸ் அப்’ போன்று வைக்க வேண்டும். கண்கள், கைகளின் கட்டைவிரல்களைப் பார்த்தபடி இருக்கட்டும். அதன்பிறகு மெதுவாகக் கைகளை உள்புறமாக மடக்கி அதாவது மூக்கின் நுனிவரை கொண்டு வர வேண்டும். சில நொடிகள் கழித்து மீண்டும் கைகளை நேராக நீட்ட வேண்டும். பயிற்சி முடியும்வரை பார்வை கட்டைவிரலைவிட்டு அகலக் கூடாது.

சின் முத்திரை

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். ஆள்காட்டி விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டிருக்கும் படியான சின் முத்திரையில் அமர்ந்து கைகளைக் கால் முட்டியின் மீது வைக்க வேண்டும். மெதுவாகக் கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் வரை இருக்கலாம்.

தம்ஸ் அப், தம்ஸ் டவுன் (Thumbs up, Thumbs down)

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். கண்களுக்கு நேர்க்கோட்டில் இருக்கும்படி, கைகளை நேராக நீட்டவும். இரண்டு கைவிரல்களையும் மடக்கி `தம்ஸ் அப்’ பாணியில் வைக்க வேண்டும். இப்போது கண்கள், கைகளின் கட்டைவிரலைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாக வலது கையை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். அதே நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இப்போது சில நொடிகள் இடைவெளிவிட்டு வலது கையைக் கீழ் நோக்கி இறக்க வேண்டும். அதே நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். வலது கையை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கும்போது ஏற்கெனவே சொன்னதுபோல பார்வை வலது கை கட்டை விரலையே பார்த்தபடி இருக்க வேண்டும். இதேபோல் இடது கைக்கும் செய்ய வேண்டும். இதைச் செய்து முடிக்கும்வரை இடது கை கட்டை விரலையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம். பயிற்சி முடியும்வரை பார்வை கட்டைவிரலை விட்டு மாறக் கூடாது.

ஸ்ட்ரெய்ட் லெஃப்ட் அண்ட் ரைட் (Straight Left and Right)

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். கண்களுக்கு நேர்க்கோட்டில் இருக்கும்படி, கைகளை நேராக நீட்டவும். இரண்டு கை விரல்களையும் மடக்கி `தம்ஸ் அப்’ போன்று வைக்க வேண்டும். இப்போது கண்கள், கைகளின் கட்டை விரலைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாக இடதுகையை இடப்பக்கமாகப் பக்கவாட்டில் கொண்டுசெல்ல வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்து, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் வலது கைக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம். பயிற்சி முடியும்வரை பார்வை கட்டைவிரலை விட்டு மாறக் கூடாது.

டாப் லெஃப்ட் அண்ட் ரைட் (Top Left and Right)

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். கண்களுக்கு நேர்க்கோட்டில் இருக்கும்படிக் கைகளை நேராக நீட்டவும். இரண்டு கைவிரல்களையும் மடக்கி `தம்ஸ் அப்’ போன்று வைக்க வேண்டும். இப்போது கண்கள் கைகளின் கட்டைவிரலைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாக இடது கையை இடப்பக்கமாகப் பக்கவாட்டில் மேல்நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருக்க வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் வலது கைக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம். பயிற்சி முடியும்வரை பார்வை கட்டைவிரலை விட்டு செல்லக்கூடாது.

டவுன் லெஃப்ட் அண்ட் ரைட் (Down Left and Right)

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். கண்களுக்கு நேர்க்கோட்டில் இருக்கும்படி, கைகளை நேராக நீட்டவும். இரண்டு கை விரல்களையும் மடக்கி, தம்ஸ் அப் போன்று வைக்க வேண்டும். இப்போது கண்கள், கைகளின் கட்டைவிரலைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாக வலது கையை வலப்பக்கமாகப் பக்கவாட்டில் கீழ்நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருக்க வேண்டும். பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் இடது கைக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம். பயிற்சி முடியும்வரை பார்வை கட்டைவிரலை விட்டு மாறக் கூடாது.

ஐ ரொட்டேட் (Eye Rotate)

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். ஆள்காட்டி விரலின் நுனியைக் கட்டை விரலின் நுனியைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி சின் முத்திரையில் கைகளைக் கால் முட்டியின் மீது வைக்க வேண்டும். இப்போது கண்களை மேல்நோக்கிப் பார்க்கும்படிச் சில நொடிகள் இருக்க வேண்டும். பின்னர், மேல்நோக்கியவாறு இடது மற்றும் வலது பக்கவாட்டிலும், கீழ்நோக்கியவாறு இடது மற்றும் வலது பக்கவாட்டிலும் பார்க்க வேண்டும். இப்படியாக, வட்ட வடிவத்தில் கண்களை உருட்டிப் பார்க்க வேண்டும்.

ஐ சர்க்கிள் (Eye Circle)

விரிப்பில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசன நிலையில் அமர வேண்டும். கண்களுக்கு நேர்க்கோட்டில் இருக்கும்படி, கைகளை நேராக நீட்டவும். இரண்டு கைவிரல்களையும் மடக்கி, `தம்ஸ் அப்’ போன்று வைக்க வேண்டும். இப்போது கண்கள், கைகளின் கட்டைவிரலைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாகக் கைகளை வட்டவடிவில், நீள் வட்டவடிவில் கொண்டுசெல்ல வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம். பயிற்சி முடியும்வரை பார்வை கட்டைவிரலைவிட்டு மாறக் கூடாது.

பயிற்சிகளின் பலன்கள்

*பார்வைத் திறனை மேம்படுத்தும்.

*மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

*மங்கலான பார்வையைச் சரிசெய்யும்.

*கண்களில் உள்ள தசைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

*கண்களைச் சுற்றி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

*கண்களில் ஏற்படும் அழுத்தம், எரிச்சல், வலி போன்றவற்றைச் சரிசெய்யும்.

*கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கண் வறட்சியைச் சரிசெய்யும்.

*பார்வைக் கோளாறால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவும்.

- ச.மோகனப்பிரியா

படங்கள்: வீ.நாகமணி, மாடல்: ஜெயா