Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்: அந்த 40 நாள்களும் அதன் பிறகு மாறிய வாழ்க்கையும்!

ஸ்டார் ஃபிட்னெஸ்: அந்த 40 நாள்களும் அதன் பிறகு மாறிய வாழ்க்கையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ்: அந்த 40 நாள்களும் அதன் பிறகு மாறிய வாழ்க்கையும்!

மந்திரா பேடியின் ஃபிட்னெஸ் மேஜிக்ஃபிட்னெஸ்

மந்திரா பேடிக்கு 44 வயதாம். நம்ப முடியவில்லை!

சைஸ் ஸீரோ உடம்பில் மந்திரா பேடி, செம யூத் லேடி!


‘மன்மதன்’ படத்துக்குப் பிறகு,13 வருடங்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.   

ஸ்டார் ஃபிட்னெஸ்: அந்த 40 நாள்களும் அதன் பிறகு மாறிய வாழ்க்கையும்!

சினிமா, டி.வி., தியேட்டர், பிசினஸ், குடும்பம் என சூப்பர் உமனாகச் சுழன்று கொண்டிருக்கிற மந்திரா, தன் ஃபிட்னெஸ் ரகசியங்கள் பகிர்கிறார்.

``சுமார் ஒன்பது வருஷங்களுக்கு முன்னாடி ‘கட்ரான் கே கிலாடி'னு ஒரு டி.வி ஷோ பண்ண கமிட் ஆயிருந்தேன். அந்த ஷோவுல நான் ஷார்ட்ஸ் உள்பட நிறைய டிரஸ்ல வர வேண்டியிருந்தது. அப்படி நான் உடுத்துற உடைகளுக்கு ஏற்றபடி என் உடம்பு ஃபிட்டா இருக்காங்கிற கேள்வி எனக்குள்ள வந்தது. அப்பதான் ஃபிட்னெஸ் விஷயத்துல தீவிரமானேன். வெறித்தனமா வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்படியிருந்த என் வாழ்க்கையில பிரெக்னன்சி மூலமா திடீர் மாற்றம் வந்தது.

எனக்கு ரொம்ப லேட்டா அதாவது 38 வயசுலதான் குழந்தை பிறந்தது. அப்போ நான் 22 கிலோ வெயிட் போட்டேன். அது ரொம்ப அதிகம்னு என் டாக்டர் திட்டினாங்க. அந்த நேரத்துல எனக்குத் தாய்மைங்கிற பொறுப்புதான் முக்கியமா பட்டது. அப்படியோர் அனுபவத்துக்காக நான் காத்திட்டிருந்தேன். அதனால வெயிட்டைக் குறைக்கணும், மறுபடி பழைய உடல்வாகுக்குத் திரும்பணும்ங்கிறதெல்லாம் என் மனசுல இல்லை.  என் கர்ப்பக்காலத்தை ரொம்ப சந்தோஷமா அனுபவிச்சுக் கடந்தேன். ஆனா, குழந்தை பிறந்ததும் அந்த மனநிலை அப்படியே தலைகீழா மாறிடுச்சு.

குழந்தை பிறந்ததும் எனக்கு என் குழந்தை மேல அன்போ, பாசமோ வரலை. பிரசவத்துக்குப் பிறகு அரிதா  சில பெண்களைப் பாதிக்கிற `போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன்' எனக்கும் வந்தது. அதிலேர்ந்து வெளியில வரணும்னா, குடும்பத்தாரோட சப்போர்ட் ரொம்பவே முக்கியம். பச்சை உடம்புக்காரிங்கிற பெயர்ல 40 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியில போகக் கூடாது, எக்சர்சைஸ் பண்ணக் கூடாதுனு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் எனக்கும் இருந்தது. என்னோட மன அழுத்தத்துக்கு அதுவும் ஒரு காரணம். அதிகப்படியான வெயிட் அப்போதான் எனக்குக் கவலையைக் கொடுத்தது. தாய்ப்பால் கொடுத்தும் என் வெயிட் குறையலை. 41-வது நாள்  ஒருவழியா மனஉறுதியை வரவழைச்சுக்கிட்டு வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சதும்  என் மன அழுத்தமும் காணாமப் போயிடுச்சு.  அதிலேர்ந்து சரியா ஆறாவது மாசம் என்  பழைய உடல்வாகுக்குத் திரும்பினேன். இப்போதும் வாரத்தின் ஆறு நாள்களும் வொர்க் அவுட் பண்ணுவேன்''- பர்சனல் பேசுபவர், மற்றவர்க்கும் ஃபிட்னெஸ் அட்வைஸ் சொல்கிறார்.

‘‘உடற்பயிற்சிகள் செய்றதை உங்களுடைய தினசரி வாடிக்கையா பழக்கப்படுத்திக்கோங்க. ஜிம்மில் வொர்க் அவுட் பண்ற பழக்கமுள்ளவங்க, வெளியூர் போகும்போது சரியான ஜிம் செட்டப் இல்லையேனு வொர்க் அவுட் பண்றதைத் தவிர்க்க நினைப்பாங்க. ஜிம்மில் வொர்க் அவுட் பண்ண முடியாத நாள்கள்ல குறைஞ்சது வாக்கிங்காவது செய்ய வேண்டியது முக்கியம். அதனால வெளியூர் போகும்போது வாக்கிங் பண்ணத் தேவையான ஷூஸையும் உடைகளையும் எடுத்துக்கிட்டுப் போகலாம். நீங்க கேள்விப்படற, யூடியூபிலோ, டி.வி-யிலோ பார்க்கிற வொர்க் அவுட்டுகளை அப்படியே கண்மூடித்தனமா பின்பற்ற நினைக்காதீங்க. உங்களுக்கான சரியான வொர்க் அவுட் என்னங்கிறதை ஃபிட்னெஸ் ஆலோசகர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுச் செய்றதுதான் உங்க உடம்புக்குப் பாதுகாப்பானது.

எல்லாப் பெண்களுக்கும் பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிக்கிறது சகஜம். அதைக் குறைச்சுப் பழைய உடல்வாகுக்குத் திரும்பறதை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடாதீங்க. எவ்வளவு சீக்கிரம் அதைக் குறைக்கிறதுக்கான முயற்சிகளை ஆரம்பிக்கிறீங்களோ, பலன்களும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்.  பிறகு பார்த்துக்கலாம்னு நினைச்சா, எக்ஸ்ட்ரா வெயிட்டைக் குறைக்கிறது ரொம்பக் கஷ்டம்.’’

- ஆர்.வைதேகி  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz