ஹெல்த்
Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட்டில் எப்போதும் தனி ஒருவன்!

ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட்டில் எப்போதும் தனி ஒருவன்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட்டில் எப்போதும் தனி ஒருவன்!

ஜெயம் ரவியின் ஜிம் சீக்ரெட்ஸ்

‘‘என் முதல் படத்துல நான் நடிக்கும்போது ஃபிட்னெஸ் மேலே பெருசா எந்தக் கவனமும் காட்டினதில்லை. ரெண்டாவது படத்துல இருந்து இப்போ வரைக்கும் ஃபிட்னெஸுக்கு அதிகநேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செஞ்சுக்கிட்டு வர்றேன். ரிலீஸுக்கு ரெடியா இருக்கிற ‘டிக் டிக் டிக்’ படத்துக்காக என் பிட்னெஸுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன்’’ - ஆர்ம்ஸ் காட்டிப் பேச ஆரம்பிக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

‘‘டிக் டிக் டிக்’ படத்துல நடிக்க, ‘என் வெயிட்டைக் குறைக்கணும்’னு டைரக்டர் சொல்லிட்டார். ‘வனமகன்’ படத்துக்காக ஏற்கெனவே கொஞ்சம் வெயிட் குறைச்சிருந்தேன். அதனால, இந்தப் படத்துக்கு அதையே மெயின்டெயின் பண்ணினேன். ஆனா, மெயின்டெயின் பண்றதுதான் பெரிய விஷயமாயிருந்துச்சு. புரோட்டீன் அதிகமா இருக்கிற உணவுகளை அதிகமா சாப்பிட்டேன். கீரை வகைகள் எப்போதும் உடம்புக்கு நல்லது. அதனால, என் சாப்பாட்டில் எப்போதும் கீரையை வைக்க என் மனைவி ஆர்த்தி மறக்கவே மாட்டாங்க. தினமும் கீரை  சாப்பிடப் பழகினால் முகமும் பொலிவாத் தெரியும். காய்கறிகளில் அதிகமா கேரட், தக்காளி சாப்பிடுவேன். அடிக்கடி பப்பாளி ஜூஸ் குடிப்பேன். என் ஃபிட்னெஸ் ட்ரெயினர் என்னை, ‘அதிகமா தண்ணீர் குடிங்க பாஸ்’னு சொல்வார். என் எனர்ஜி ரகசியங்களில் இதுவும் ஒண்ணு!

ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட்டில் எப்போதும் தனி ஒருவன்!

சாப்பாடு நம்ம உடம்புக்கு எவ்வளவு முக்கியமோ, அதேமாதிரி தூக்கமும் ரொம்ப முக்கியம். சரியான நேரத்துக்குத் தூங்கிருவேன். எப்போதாவது நைட் ஷூட்டிங் இருந்தா, தூங்குற நேரம் கொஞ்சம் தள்ளிப்போகும். வெறும் டயட் மட்டுமே ஒருத்தரை ஃபிட்டா வைக்க உதவாது. வொர்க் அவுட்டும் ரொம்ப முக்கியம். ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு ‘மஸ்குலர் பாடி’ இருக்கணும்னு அவசியமில்லைனு சொல்லிட்டாங்க. அதனால நிறைய வாக்கிங் அண்ட் ரன்னிங் போனேன். நாற்பது நிமிஷம் இது ரெண்டையும் பண்றது உடம்புக்கு ரொம்ப நல்லது. இவை தவிர தினமும் காலை அல்லது மாலையில கார்டியோ பயிற்சிகளைத் தவறாமப் பண்ணிருவேன்.

ஜிம் வொர்க் அவுட் பண்ணப் பார்ட்னர் சேர்த்துக்கிறது சிலரின் வழக்கம். நம்மகூட இன்னொருத்தரும் சேர்ந்து வொர்க் அவுட் பண்ணும்போது மோட்டிவேஷன் அதிகமா இருக்கும்ங்கிறது உண்மைதான். ஆனா, என் விஷயத்துல அது சரியா வராது. நான் வொர்க் அவுட்டுல யாரையும் பார்ட்னராகச் சேர்த்துக்க மாட்டேன். நான் திடீர்னு பத்து நாள் நல்லா சாப்பிடுவேன். அப்புறம் திடீர்னு பத்து நாள் வேற எதையும் சாப்பிடாம வெறும் பழங்கள் மட்டும் சாப்பிடுவேன். திடீர்னு நினைச்சுக்கிட்டு நைட் மூணு மணிக்குக்கூட வொர்க் அவுட் பண்ணப் போயிருவேன். அதனால, யாரும் என்கூட ஃபிட்னெஸ் பார்ட்னராக இருக்க மாட்டாங்க. லைஃப்ல சாப்பாடு, தூக்கம் மாதிரி வொர்க் அவுட்டையும் அன்றாடத் தேவைனு உணருங்க. உற்சாகமா வாழலாம்!’’ - சொல்கிறார் தனி ஒருவன்.

- சனா