Published:Updated:

STAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
STAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்!
STAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்!

நடிகர் விஷாலின் ஃபிட்னெஸ் மெசேஜ்ஃபிட்னெஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

பிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களில் முக்கியமானவர் விஷால். ‘இரும்புத்திரை’ ரிலீஸை அடுத்து ‘சண்டக்கோழி 2’, ‘மதகஜராஜா’ வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் ஜிம்முக்குப் போக நேரம் ஒதுக்கத் தவறாதவர்.

STAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்!

“உடலைக் கட்டுக்கோப்பா வெச்சுக்கணுங்கிற எண்ணம் இயல்பாவே என் ஜீன்ல இருக்கு. ஏன்னா, என் வீட்டுல எல்லோரும் ஒல்லியாதான் இருப்பாங்க. டயட் எவ்வளவு முக்கியமோ அதைவிட, ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட் பண்றதும் முக்கியம். இதுக்குனு தனியா நேரம் ஒதுக்க முடியலைனாலும், வீட்டுல ஃப்ரீயா இருக்கிற நேரத்துல ‘கிராஸ் ஃபிட்’ பயிற்சிகளைப் பண்ணலாம். கிராஸ் ஃபிட் பயிற்சிகள் மூலம் தசைகளை வலுப்படுத்துவது, கொழுப்பைக் குறைப்பது மாதிரியான சில விஷயங்கள் சாத்தியமாகும். தம்புல்ஸ், புஷ் அப்ஸ், டிரெட்மில் ரன்னிங், வெயிட் லிஃப்டிங்னு ஜிம்ல வொர்க் அவுட் பண்ற எல்லாப் பயிற்சிகளையும் வீட்டுல இருந்தே செய்யலாம்.  காலையில அரை மணிநேரம் இவற்றையெல்லாம் செய்யறது மூலமா, ரொம்ப ஈஸியா உடலைப் பராமரிக்கலாம்.

STAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்!


நாம காற்று மாசுபாடு இருக்கிற நகரத்துல வாழ்ந்துகிட்டிருக்கோம். அதனால, நுரையீரலை ஆரோக்கியமா வெச்சுக்க வேண்டியது ரொம்பவே முக்கியம். நுரையீரலை பலப்படுத்தறதுல பிராணயாமப் பயிற்சிகள் பெரிய அளவுல உதவும். அதிகாலையிலே எழுந்து வேகமா ஓடும்போது, நம்ம நுரையீரலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஓடும்போது அதிகமா மூச்சு வாங்கும். அதனால, எப்போதும்போல இல்லாம, நுரையீரலோட செயல்திறன் இரண்டு மடங்கு அதிகரிக்கும். தவிர, அதோட சுருங்கி விரியும் தன்மையும் அதிகரிக்கும்.

முடிந்த அளவு உணவுல நீராகாரங்களை அதிகமா எடுத்துக்கணும். அடிக்கடி டிராவல் பண்றது, டிரெக்கிங் போறது மாதிரியான பழக்கங்களும் உங்க வாழ்க்கை முறையை  ஆரோக்கியமாக மாற்றும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் ஜிம்முக்குப் போவேன்.  ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது வொர்க்

STAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்!

அவுட் பண்ணினாலே, அன்றைய நாளைக்கு நமக்குத் தேவையான எனர்ஜி கிடைச்சிடும். கூடவே டயட்டிலும் கவனம் தேவை. அரிசி உணவுகளைவிட, கோதுமை உணவுகளை அதிகமா எடுத்துக்கிறது உடம்புக்கு நல்லது.  என்னுடைய ஃபிட்னெஸ் சீக்ரெட் சைக்கிளிங். என் நண்பன் ஆர்யாதான் எனக்கு சைக்கிளிங் பழக்கத்தை உண்டாக்கினார். அப்போ என் வீடு மீனம்பாக்கத்துல இருந்தது. அண்ணாநகர்ல ஷூட்டிங் நடந்தாலும், ‘அவ்ளோ தூரம் சைக்கிள்ல போகணுமா?’னு யோசிக்க மாட்டேன். எவ்வளவு தூரமா இருந்தாலும், சைக்கிள்தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். இப்பவும் நேரமும் வாய்ப்பும் கிடைக்கிறபோதெல்லாம் செம ஜாலியா சைக்கிளிங் பண்ணுவேன். சூப்பரான வொர்க் அவுட் அது. ஃபிட்னெஸ் நம்மளோட வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விஷயம். வொர்க் அவுட் பண்ணாம நம்ம உடம்பை அப்படியே விட்டுட்டா, அது துருப்பிடிச்ச மெஷின் மாதிரி ஆயிடும்!”  ஃபிட்னெஸ் தத்துவம் சொல்லி முடிக்கிறார் விஷால்.

- சுஜிதா சென், படம்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு