Published:Updated:

தேவதை தேகம்!

தேவதை தேகம்!

தேவதை தேகம்!

தேவதை தேகம்!

Published:Updated:
தேவதை தேகம்!

உயிர் பெற்ற ஓவியம் போல இருக்கிறார் சனாகான்.  நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணக்கம் சொல்வதே வசீகரமாக ஈர்க்கிறது.

 ''சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடிக்கும்போது என்னுடைய கச்சிதமான 28 இஞ்ச் இடை, எனக்கு மிகப் பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது. விளையாட்டாக இடுப்பைச் சுழற்றிச் சுழற்றி டான்ஸ் ஆடியதால் கிடைத்த பலன் இது'' என ஆரம்பத்திலேயே இடை ரகசியம் பகிர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காலையில் எழுந்ததும் 'ஹாட் யோகா’ பண்றேன். யோகாவில் விறுவிறுவென வேகம் கூட்டும்போது, வியர்வை மழை கொட்டி, உடம்பு செம ஃப்ரெஷ் ஆகிடும்.  சினிமாவுக்கு வந்ததில் இருந்து, கடந்த மூணு வருஷமாத்தான் ஜிம்முக்குப் போறேன். இப்போ என்னோட எடை... ஜஸ்ட் 54 கிலோ'' - கண்களை உருட்டிக் குழந்தையாகச் சிரிக்கிறார்.

தேவதை தேகம்!

''என்ன சாப்பிட்டாலும் அவசரப்படாம, பொறுமையா மென்று ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடுவேன். சாப்பாட்டை ஜீரணிக்க உதவுவதில் பற்களுக்கும் எச்சிலுக்கும் முக்கியமான பங்கு உண்டு. என்னைக்காவது நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால்... அதை ஈடுகட்ட கூடுதலாக உடற்பயிற்சி பண்ணிடுவேன். அந்த விஷயத்தில் மட்டும் சோம்பேறித்தனம் என்கிட்ட இருந்து எட்டு அடி விலகியே நிக்கும்.

##~##

வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கேரட்... என்று காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக, அப்படியே பச்சையாகச் சாப்பிட எனக்குப் பிடிக்கும். பழங்களில் ஸ்ட்ராபெர்ரி என் ஃபேவரைட். அது, பற்கள் கறைபடியாம பளிச்சுன்னு இருக்க உதவும். பற்களில் உள்ள எனாமலைப் பாதுகாக்கும் சக்தியும் அதற்கு உண்டு.

கூந்தல் விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ். வாரத்துக்கு இரண்டு முறை ஆயில் அப்ளை பண்ணிடுவேன். ஷாம்பு போட்டாலும், கண்டிப்பா கண்டிஷனர் பயன்படுத்துவேன்.  சன் ஸ்கிரீன் அப்ளை பண்ணாம வெளியில் போக மாட்டேன். கீரை (Spinach Juice) ஜூஸ்தான் என் ஃபேவரைட் ட்ரிங். தூக்கமின்மைக்கு இது ஒரு நல்ல மருந்து' என்று ஹெல்த் டிப்ஸ்களை அள்ளி வீசுபவருக்கு, புத்தகங்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம்.

'மனம் எல்லா சமயங்களிலுமே உற்சாகமா இருக்கும்னு சொல்ல முடியாது. அப்படி நான் சோர்வடையும் சமயத்தில் என்னைக் குதூகலமா மாத்துறது சேத்தன் பகத் நாவல்கள்தான். அவருடைய நாவல்களைப் படிச்சாலே மூணு, நாலு நாட்களுக்குத் தேவையான எனர்ஜியை ரீ-சார்ஜ் பண்ணிட்ட மாதிரி இருக்கும்'' என்றபடியே 'ரெவல்யூஷன் 20:20' (Revolution 20:20) நாவலைப் புரட்ட ஆரம்பித்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism