ஹெல்த்
Published:Updated:

VIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்

VIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
VIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்

ஃபிட்னெஸ்

``நீங்க வொர்க்அவுட் பண்ணுவீங்களா?’’ முதல் கேள்வியிலேயே எதிராளியை ஆஃப் செய்கிறார் மிலிந்த் சோமன். செல்ஃபிக்காகக் காத்திருக்கிற ரசிகர்களிடம், ‘`அஞ்சு செகண்ட்ஸ் இல்லை, அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன். ஆனா...’’ என கண்டிஷன்ஸ் போடுகிறார். யெஸ், மிலிந்த் சோமனுடன் செல்ஃபி எடுக்க வேண்டுமென்றால் அவர் முன் குறைந்தது 10 புஷ்அப்ஸ் செய்ய வேண்டும்! 

VIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்

``ஃபிட்னெஸ் எனக்கு வாழ்க்கையில நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்தது. 9 வயசுலேருந்து ஸ்விம்மிங் பண்றேன். நேஷனல் லெவல் ஸ்விம்மரா இருந்திருக்கேன். அந்த வயசுலயே தினமும் 12 கிலோமீட்டர் ஸ்விம் பண்ணியிருக்கேன். தினமும் ஜிம்முக்குப் போகறதுதான் ஃபிட்னெஸ்னு அர்த்தமில்லை. நேற்றைவிட இன்னிக்கு ஆரோக்கியமா இருக்கோமாங்கிறதுதான் ஃபிட்னெஸ். இந்த விஷயத்துல பெற்றோர்கள்தான் பிள்ளைங்களுக்கு ரோல் மாடலா இருக்கணும். ஃபிட்னெஸ்ல எனக்கிருந்த ஆர்வத்தை என்கரேஜ் பண்ணின பெற்றோர் அமைஞ்சது என் அதிர்ஷ்டம்.'' - பெருமைக்காகச் சொல்லவில்லை மிலிந்த். 80 பிளஸ்ஸில் இருக்கும் இவரின் அம்மா உஷா சோமன், இன்றும் மகனுடன் மராத்தான்களில் ஓடுகிறார்.

VIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்``ஃபிட்னெஸ் விஷயத்துல அம்மாவுக்கு என்னைவிட ஆர்வம் அதிகம். ஒருமுறை `மதர்ஸ் டே' நிகழ்ச்சிக்கு அம்மாவை கெஸ்ட்டா கூப்பிட்டிருந்தாங்க. ஃபிட்னெஸ் பத்தி எங்கம்மா பேசி முடிச்சதும், அவங்க பண்ணின ப்ளாங்க் வீடியோ செம வைரலாகிடுச்சு. 80 வயசுல அம்மாவால முடியும்போது மற்ற பெண்களாலும் முடியும்தானே?’’ பெண்களுக்கு ஃபிட்னெஸ் ரொம்பவே முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார் மிலிந்த்.

VIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்

``என்னைப் பொறுத்தவரை ஃபிட்னெஸ் என்பது பாசிட்டிவாக இருப்பது. ஒவ்வொருவருடைய உடலும் அற்புதமான விஷயங்களைச் செய்யற அளவுக்கு டிசைன் செய்யப்பட்டது. ஆனா, அதுக்கு முன்னாடி உங்க மனசு செம ஸ்ட்ராங்கா இருக்கணும். மனசு ஸ்ட்ராங்கா இருந்தாதான் உடம்பு நீங்க  சொல்றதைக் கேட்கும். என் மனசை ஸ்ட்ராங்காவெச்சிருக்கிற விஷயம் ரன்னிங். 10 கிலோமீட்டர் ஓடினாக்கூட எதையோ சாதிச்சிட்ட மாதிரி ஃபீல் பண்றேன். எனக்கு ஓடறது பிடிச்சிருக்கு. அதனால நீங்களும் ஓடணும்னு அவசியமில்லை. உங்களுக்குப் பிடிச்ச ஏதோ ஒரு வொர்க்அவுட்டைப் பண்ணலாம்.’’ பேசிக்கொண்டிருக்கும்போதே டீ வருகிறது மிலிந்த் சோமனுக்கு. அதில் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்துப் பருகுகிறார்.

``வெள்ளைச் சர்க்கரை எடுத்துக்கிறதில்லை. காபி, டீ எல்லாத்துக்கும் தேன்தான். பிஸ்கட் மாதிரியான பதப்படுத்தப்பட்ட எந்த உணவையும் தொட மாட்டேன். வாரத்துல நாலு நாள்கள் ஓடுவேன். 19 வயசுலேருந்து என் வெயிட் ஒரு கிலோகூட கூடவோ குறையவோ இல்லை.'' அக்கறையாகச் சொல்பவர், ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தவர்.

 ‘‘ஷூட்டிங் ஸ்பாட்டுல இருக்கும்போது என்னைத் தவிர எல்லாரும் ஸ்மோக் பண்றதைப் பார்த்தேன். `அப்படி இதுல என்னதான் இருக்கு? ஏன் இப்படி ஸ்மோக் பண்றீங்க'னு எல்லாரையும் திட்டியிருக்கேன். ஒருநாள் வெறுத்துப்போய், என்னதான் இருக்குனு பார்ப்போம்னு நானும் ஒரு சிகரெட்டை வாங்கிப் பத்தவெச்சேன். ரெண்டு, மூணு நாள்களில் நானும் செயின் ஸ்மோக்கராயிட்டேன். ஆல்கஹாலைப்போல மோசமான டேஸ்ட் வேற இல்லை. முதல்முறை குடிக்கிறவங்களுக்குக் குமட்டும். ஆனாலும் மக்கள் அதுக்கு அடிமையாகிடறாங்க. அப்படித்தான் சிகரெட்டும். திடீர்னு ஒருநாள் புத்தி தெளிஞ்சு, சிகரெட்டை விட்டே ஆகணும்னு முடிவு பண்ணினேன். எட்டு வருஷங்களுக்குப் பிறகு அதுலேருந்து வெளியில வந்தேன். உங்க உடம்புக்கு ஆகாதுனு தெரிஞ்சே நீங்க செய்யற விஷயங்கள் எத்தனைனு யோசிச்சுப் பாருங்க. ஸ்மோக்கிங், போதை மருந்து, கன்னாபின்னா சாப்பாடு, ஆல்கஹால், எக்சர்சைஸ் பண்ணாம இருக்கிறது, சுறுசுறுப்பா இல்லாததுனு நிறைய விஷயங்களைச் சொல்லலாம். இதுலேருந்து வெளியில வாங்க. மனசையும் உடம்பையும் பத்திரமா பார்த்துக்கோங்க.''

ரசிகரின் புஷ்அப்ஸை எண்ணியபடியே செல்ஃபிக்குத் தயாராகிறார் மிலிந்த்.

- ஆர்.வைதேகி