Published:Updated:

``காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள ஆண்கள் எல்லோம் ஃபிட்டாக இருக்காங்களா?'' - கேள்வி எழுப்பும் லத்திகா சரண் #LifeStartsAt40 #நலம்நாற்பது

``காவல்துறையிலேயே உயர் பொறுப்பிலுள்ள ஆண்களில் எல்லோருமே ரொம்ப ஃபிட்டாகவும் உயரமாகவும் இருக்காங்களா? இல்லைனு நான் சொல்வேன். அப்போ நான் எதற்கு வருத்தப்படணும்?"

மிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பியாகப் பணியாற்றியவர் லத்திகா சரண். பணித்திறனுக்கு மட்டுமல்ல... ஃபிட்னஸுக்கும் பெயர் பெற்றவர். பணிக்கு வந்த காலம் முதல் இன்று வரை தன் உடலை நேர்த்தியாக வைத்திருக்கிறார். ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அவரிடம் பேசினோம். உடற்பயிற்சி, லத்திகாவின் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்திருப்பதை அவரது பேச்சு நன்கு உணர்த்தியது.

``காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள ஆண்கள் எல்லோம் ஃபிட்டாக இருக்காங்களா?'' - கேள்வி எழுப்பும் லத்திகா சரண்  #LifeStartsAt40 #நலம்நாற்பது

``ஃபிட்னஸ், என் வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று. அதுக்கு விதை போட்டது என் பள்ளிப் பருவம்தான். நான் படிச்ச ஊட்டி, கொடைக்கானல் கான்வென்ட் பள்ளிகள்ல ஃபிட்னஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. படிப்புக்கு இணையா, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்துவோம். அதனால பள்ளிக் காலத்துல ரொம்ப எனர்ஜியுடன் இருப்பேன். அந்த ஃபிட்னஸ் ஆர்வம் கல்லூரிக் காலத்தில் இன்னும் அதிகமாச்சு. அதே எனர்ஜியுடன்தான், சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானேன். அதில் வெற்றிபெற்று ஐ.பி.எஸ் பணி கிடைச்சது. ஒருவேளை சின்ன வயசுல எனக்கு ஃபிட்னஸ் ஆர்வம் வரலைனா, ஐ.பி.எஸ் அதிகாரியா வெற்றி பெற்றிருப்பேனான்னு தெரியலை.

``காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள ஆண்கள் எல்லோம் ஃபிட்டாக இருக்காங்களா?'' - கேள்வி எழுப்பும் லத்திகா சரண்  #LifeStartsAt40 #நலம்நாற்பது

ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சிக்காலம் மறக்க முடியாத அனுபவம். தினமும் 3 மணிநேரம் வெளிப்புறப் பயிற்சிகள் இருக்கும். அதையெல்லாம் ஆர்வமுடன் செய்வேன். அந்தச் சமயங்கள்ல நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால் சோர்வு ஏற்படுவது குறையும். ஐ.பி.எஸ். பயிற்சியை நிறைவுசெய்து, தமிழகத்தில் பல மாவட்டங்கள்ல வேலை செய்துகிட்டிருந்தபோது, வேலைப்பளு அதிகமா இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியாது. அதனால உடலும் மனதும் என் கன்ட்ரோல்ல இல்லாம போச்சு. அதை உணர்ந்து, `இனி எப்போதும் ஃபிட்னஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்'னு ஒரு கட்டத்துல முடிவெடுத்தேன். அதை இப்போவரை தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன்" என உற்சாகம் குறையாமல் பேசுகிறார் லத்திகா சரண்.
சிறுவயது முதல் தற்போது வரை ஒரே மாதிரியான உடல்வாகில் இருப்பது பற்றிக் கேட்கையில்,``சின்ன வயசிலிருந்து இப்போ வரை ஒல்லியாதான் இருக்கேன். ஐ.பி.எஸ் அதிகாரியா இருந்தப்போ பலரும் என் உடலமைப்பைக் கிண்டல் செய்வாங்க. இது நீண்டகாலம் தொடர்ந்துச்சு. தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பியாக நான் நியமிக்கப்பட்டபோதும் என் உடல் தோற்றம் குறித்து விமர்சனங்கள் எழுந்துச்சு. ஆனா, என் முகத்துக்கு முன்னால் யாரும் விமர்சனங்களை வைக்கவில்லை. அத்தகைய பேச்சுகெல்லாம் ரியாக்ட் பண்ணினால் வேலை செய்ய முடியுமா? நான் ஒல்லியா இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் ரொம்பவே ஃபிட்டாகத்தான் இருக்கேன். அது போதுமே! 

``காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள ஆண்கள் எல்லோம் ஃபிட்டாக இருக்காங்களா?'' - கேள்வி எழுப்பும் லத்திகா சரண்  #LifeStartsAt40 #நலம்நாற்பது

காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள ஆண்கள் எல்லோம் ஃபிட்டாக இருக்காங்களா? இல்லைனுதான் நான் சொல்வேன். அப்போ நான் எதற்கு வருத்தப்படணும்? காவல்துறையில் உயர்பொறுப்பிலுள்ள அதிகாரிகள் திருடர்களைத் துரத்திப் பிடிக்கிற வேலையெல்லாம் செய்யப்போறதில்லை. எங்களுக்குக் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளை வழிநடத்துவதும் ஆலோசனை கொடுப்பதும்தான் எங்க வேலை. அதுக்கு உடல் பலத்தைவிட மனம்தான் ரொம்ப ஃபிட்டா இருக்கணும். தனக்குக் கீழ் உள்ளவர்களை வழிநடத்தும் திறமை இருக்கணும். அது என்கிட்ட இருந்ததால்தான் டி.ஜி.பி பொறுப்பு கிடைச்சது" என்கிற லத்திகாவுக்கு தற்போது 67 வயது. 

``காவல்துறையில் உயர் பொறுப்பிலுள்ள ஆண்கள் எல்லோம் ஃபிட்டாக இருக்காங்களா?'' - கேள்வி எழுப்பும் லத்திகா சரண்  #LifeStartsAt40 #நலம்நாற்பது

``ஜிம் வொர்க் அவுட் செய்றது குறைவுனாலும், அதையும் அவ்வப்போது செய்வேன். ஆனா, 30 வருஷத்துக்கும் மேல் தினமும் தவறாம ஒரு மணி நேரம் யோகா செய்றேன். இதுதான் என் ஃபிட்னஸ் சீக்ரெட். தவிர, வீட்டிலிருந்தே அடிப்படை உடற்பயிற்சியும் செய்வேன். சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டையும் சாப்பிடுவேன். வாரத்துல ஒருநாள் ஏதாவதொரு அசைவ உணவு. தவிர மற்ற நாள்களில் காய்கறிகள், பருப்பு அடங்கிய உணவுகளைச் சாப்பிடுவேன். பொறுமையா திருப்தியா சாப்பிடுவேன். சர்வீஸ்ல இருந்த காலத்துலயிருந்து  இப்போவரை தினமும் 6 மணிநேரம் தூங்குவது என் வழக்கம். சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்திடுவேன். நாய் வளர்ப்பில் அதிக ஆர்வமுண்டு. இப்போ வீட்டில் எட்டு நாய்கள் வளர்க்கிறேன். அவங்களோடு நேரம் செலவிடுவதும் நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்குது. மன அழுத்தத்துக்கு இடம்கொடுக்காம, உடற்பயிற்சியில அதிக கவனம் செலுத்துறதாலதான் என் உடலும் உள்ளமும் ஃபிட்டா இருக்கு" என மனநிறைவுடன் பேசிமுடித்தார் லத்திகா சரண்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு