Election bannerElection banner
Published:Updated:

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது
புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

“வயசாயிடுச்சு... முன்ன மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியல” என்று மறந்தும் சொல்லிவிட முடியாத வேலை  காவல்துறையினருடையது. எந்த நேரத்திலும் அலர்ட்டாக இருக்க மனநிலையும் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையில் வெகுநாள்கள் பணிபுரிந்து, புதிதாகக் காவல்துறையில் சேருபவர்களுக்கு ரோல்மாடல் சிங்கங்களாக வலம் வரும் சில காவல்துறை அதிகாரிகள் குறித்த மினி ரிப்போர்ட்: 

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

அரியலூர் எஸ்.பி சீனிவாசன்

குற்றப் பின்னணி வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர். ரவுடிகளைக் களையெடுத்தவர். பல வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்தவர். இவருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். தற்போது அரியலூர் மாவட்ட எஸ்.பி-யாக இருக்கிறார். 45 வயதுக்காரரான இவரது கண்டிப்பு அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தம்.

தவறு செய்யும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, திறம்பட செயல்படும் காவலர்களை அழைத்து வெகுமதி கொடுத்து ஆச்சர்யப்பட வைப்பார். மாவட்டத்தில் கொடிகட்டிப்பறந்த போலி மது, கஞ்சா விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதோடு, கஞ்சா வியாபாரிகளைக் குண்டாஸில் சிறையில் தள்ளியவர். தர்மபுரிக்குப் பிறகு, அதிக அளவில் சாதி கலவரங்கள் நடக்கும் மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. சாதி கலவரங்கள் நடந்தால் குறைந்தது 15 நாள்களாவது அங்குள்ள கிராமங்களில் அசாதாரண சூழல் நிலவும். ஆனால், பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி மோதலை மூன்று நாள்களுக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தார். இவரது அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய முடியாமல் திணறிப் போயின.

அதிக விபத்துகள் நடக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. திடீரென வாகன சோதனையில் ஈடுபடும் இவர், லாரி ஓட்டிக்கொண்டே போனில் பேசிவந்த 7 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்தார். அவருக்குக் கீழ் பணியாற்றும் போலீஸாருக்கு ஒரு செய்தியை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். "காவல் துறையினர் லஞ்சம் வாங்காமல், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் சூழலையை உருவாக்க வேண்டும். இந்த நிலை வந்தால் நாம் சரியாக வேலை பார்க்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் வேலை பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்பதுதான் அந்தச் செய்தி. 

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

கடலூர் எஸ்.பி சரவணன்

45 வயதில் முறுக்கு மீசையும் ஃபிட்டான உடல்வாகுமாய் கடலூரைக் கலக்குகிறார் சரவணன். 'அமைதியாகச் சட்டம், ஒழுங்கைப் பராமரித்து வருகிறார். கொலை, சாதிப் பிரச்னை என எதுவென்றாலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறார்' என்பது இவர் குறித்த ரிப்போர்ட். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர். காவல்துறையில் ஒருவர் லஞ்சம் வாங்கினாலே உடனே சஸ்பெண்டுதான். பெண்ணாடம் காவல் நிலையத்தில் வசூலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்த சரவணன், 10 நாள்கள் மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படிக்க உத்தரவிட்டார். காவலர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால் ஓப்பன் மைக்கில் வாழ்த்தி ஆச்சர்யமளிப்பதோடு பர்சனலாக செல்போனிலும் அழைத்து வாழ்த்துவார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டுவது இவர் பழக்கம். 

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

திருவண்ணாமலை எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி

இன்னும் சில மாதங்களில் 40 வயதைத் எட்டப்போகும் இவர் ஆறே மாதங்களில் 48 பேரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார். ரவுடிகள், மணல் கடத்தல் கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் சிபிச்சக்கரவர்த்தி.  கடலூரைச் சேர்ந்தவர், எம்.இ பட்டம் பெற்ற இவர், 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியைத் தொடங்கினார். நாகப்பட்டினம், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியவர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார். பதவியேற்ற 11 மாதங்களில் மாவட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரவுடிகள், மணல் கடத்தியவர்கள், சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தியவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்கிறது.

கடந்த மாதம் சூதாட்ட கும்பலால் கடத்தப்பட்ட சரவணன் என்பவரைக் கண்டுபிடிக்க மஃப்டியில் ஆபரேஷன் நடத்தி, 60 மணி நேரத்தில் மீட்டார். திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வரும் 15 லட்சம் பேர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தினார். தீபத்தின்போது கூட்டத்தில் தொலைந்துபோன 68 குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். தீப நாள் அன்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முதல் முறையாக ஆன்லைன் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தினார். அதனால் பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் 800 கார்களை நகரத்துக்குள் பார்க்கிங் செய்ய முடிந்தது. 300 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி திருவண்ணாமலை கிரிவலப் பாதையைக் கண்காணித்து வருகிறார். அனைவரிடமும் எளிமையாகப் பழகுவதாலேயே மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். 'ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடை வியாபாரிகள், டீக்கடைக்காரர்கள், சாலையோர பெட்டிக்கடை வியாபாரிகள் போன்றவர்களோடு கலகலப்பாகப் பழகுவார்' என்கிறார்கள் திருவண்ணாமலை மக்கள்

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்

அரை செஞ்சுரியைத் தாண்டிய வயது என்று இவரைப் பார்த்தால் சொல்ல முடியாது. `மரணம் இல்லா மதுரை' என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் பிரச்னைகளின் ரகசியம் காத்து உடனடியாகக் குழு அமைத்து இரண்டே நாள்களில் தீர்வு காண்பார். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர். எம்.ஏ சோசியாலஜி முடித்துவிட்டு, 1995-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார். பரமக்குடியில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கினார்.  ஐ.நா சபை பாதுகாப்பு ஆலோசகராகக் கொசாவோ நாட்டில் பணி செய்தார். கடலூர், கரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி-யாகப் பணியாற்றினார். 2018-ல் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராகப் பணியில் சேர்ந்தார். 300-க்கும் மேற்பட்ட  சிசிடிவி கேமராக்கள் மூலம் நகரைக் கண்காணித்து வருகிறார். விபத்து தொடர்பாகக் குறும்படம், ஓவியங்கள், விநாடி வினா ஆகியவற்றை நடத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 100 வார்டுகளுக்கு 100 எஸ்.ஐ என்று ஒரு குழுவை உருவாக்கி மக்களின் பிரச்னையை நேரடியாகத் தீர்த்து வருகிறார். போதைப் பொருள் விற்கும் வியாபாரிகளைப் பிடிக்க தனித்தனி குழுவை அமைத்துள்ளார். மக்களுக்காகவே `சேவ் அவர் சோல்' (Save our soul) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். 

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

கூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரை  

'என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட்' வெள்ளத்துரையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும் இவரது அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். 2003-ம் ஆண்டு ரவுடி வீரமணி, 2004-ம் ஆண்டு வீரப்பன் ஆகியோரின் என்கவுன்டர் ஆபரேஷன்களின் முக்கிய பங்கு வகித்தவர். என்கவுன்டர் மட்டுமே இவரது அடையாளம் அல்ல. மானாமதுரையில் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுக்கொடுத்தார். நிலத்தைப் போலியாகப் பத்திரம் செய்த மானாமதுரை பத்திர எழுத்தர் வேல்முருகனைக் கைது செய்தவர். ராமநாதபுரத்தில் மதுபான கடத்தல் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். சாராய வியாபாரிகளின் மறுவாழ்வுக்காக 300 பேருக்குத் தமிழக அரசிடமிருந்து ரூ.30,000 வாங்கிக் கொடுத்திருக்கிறார். திருடுபோன நகைகளை உடனடியாக மீட்டுச் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளார். "மானாமதுரையில் நான் இருந்தவரை எந்த மணல் கடத்தல் சம்பவமும் நடந்ததில்லை. டி.எஸ்.பி-யாக இருந்தபோது கந்துவட்டி தொழிலை ஒழித்தேன்" என்று பெருமைப்படச் சொல்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் ஆடு, மாடுகளை வாங்கிக்கொடுத்துள்ளார். பல நாள்கள் தீராமல் இருந்த வழக்குகளை உடனடியாக முடித்துக் கொடுத்துள்ளார். 2013 முதல் 2019 செப்டம்பர் வரை ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இவரது வயது 54. 

புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

சைலேந்திர பாபு 

இந்தப் பட்டியலில் அறிமுகமே தேவைப்படாத அதிகாரி. தமிழக காவல்துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய ஆர்வமாகக் காத்திருக்கும் முயற்சி செய்யும் பல பேருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு. 1989-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1992-ல் காவல்துறை கண்காணிப்பாளர், 2001-ல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2006-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர் தற்போது ரயில்வேயில் போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். 57 வயதானாலும் கட்டுக்கோப்பான உடலுக்குக் காரணம் இவரது உடற்பயிற்சிதான். எந்த ஒரு பிரச்னையானாலும் அதை நேர்த்தியாகக் கையாளுபவர், மிகவும் பொறுமைசாலி, பொதுமக்களிடம் எளிமையாகப் பழகும் குணமுடையவர். கடலூரில் வகுப்புவாதக் கலவரங்கள் தடுப்பு, நக்ஸலைட் என்கவுன்டர், யானைத் தந்தம் வெட்டியவர்கள் கைது, 1997-ம் ஆண்டு சிவகங்கையில் ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியது போன்ற இவரது சாதனைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

முதலமைச்சர் பதக்கம், வீரப்பதக்கம், பிரதமர் பதக்கம், ஜனாதிபதி விருது, ஜனாதிபதி போலீஸ் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். விளையாட்டு மட்டுமல்லாமல் நீச்சல், தடகளம், துப்பாக்கிச் சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் ஆர்.டி.சிங் கோப்பையைப் பெற்றுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நீச்சலடித்து பலரைக் காப்பாற்றினார். தனுஷ்கோடி இடையிலான பாக்ஜலசந்தி கடற்பகுதியில் 28.5 கி.மீ தூரத்தை 12.14 மணி நேரத்தில் சைலேந்திரபாபு தலைமையிலான 10 போலீஸார் நீந்திக் கடந்தனர்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு