Published:Updated:

காவல் துறை அதிகாரி டு காட்டுவாசி!

ஆதி ஃபிட்னஸ் ரகசியம்

காவல் துறை அதிகாரி டு காட்டுவாசி!

ஆதி ஃபிட்னஸ் ரகசியம்

Published:Updated:
##~##

'அரவான்’ படத்துக்காக ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டிய ஆதி, இப்போது கொஞ்சம் உடல் இளைத்து, சிக்கென இருக்கிறார். கட்டுமஸ்தான கிராமத்தான், கம்பீரமான காவல் துறை அதிகாரி, கர்ஜிக்கும் காட்டுவாசி என 'மிருகம்’ முதல் 'அரவான்’ வரை இவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள்  அனைத்தும் இவருடைய  உடற்கட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தவை.  இப்போது 'கோச்சடையான்’ படத்துக்காகத் தயாராகிறார். 6.2 அடி உயரம்தான் ஆதியின் தனி அடையாளம்! 

''இந்த உடல்கட்டு இயற்கையாகவே அமைந்ததா? அல்லது உடற்பயிற்சியால் வாய்த்ததா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சின்ன வயசுல என்னை எல்லாரும் குள்ளா, குள்ளானுதான் கூப்பிடுவாங்க. இப்படி மடமடன்னு 6.2 உயரத்துக்கு வளர்வேன்னு யாரும் எதிர்பார்க்கலை. கிட்டத்தட்ட 7 அடி உயரம் உள்ள எட்மண்ட் ஹில்லாரி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்டு சாதனை நிகழ்த்தினார். தன்னுடன் சிகரம் ஏறுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த குழுவில், நேபாள நாட்டின் 5 அடி உயர டென்சிங் நார்கேவும் இடம்பெற்றிருந்தார். அவரும் எவரெஸ்ட்டின் உச்சி வரை சென்று சாதனை படைத்தார். எந்த ஒரு சாதனையும் 'என்னால் முடியும்’ என்கிற தன்னம்பிக்கையில்தான் நிகழ்கிறது!

காவல் துறை அதிகாரி டு காட்டுவாசி!

கல்லூரி நாட்களிலேயே குங்ஃபூ கத்துக்கிட்டேன். இப்போ சீனாவின் போர்க் கலையான தாய்ச்சி கத்துக்கத் தயார் ஆகிட்டிருக்கேன். என் அப்பா - தாத்தா எல்லோருக்குமே நல்ல உடற்கட்டு. அவங்களுக்கு புஜங்கள் இன்னும் பெரிசா இருக்கும். உடற்பயிற்சி செய்தால் புஜங்கள் இன்னும் பெரிசா மாறிடுமோன்னு கண்ணாடியைப் பார்த்துப் பார்த்து பயத்தோடவே தம்புள்ஸ் செய்வேன். சின்ன வயசில் இருந்தே ஜிம், ஒர்க் அவுட்-னு இறங்கிட்டதால சரியான முறையில் உடலைப் பராமரிக்க முடியுது. இதைத் தவிர எனக்கு விரிந்த தோள்பட்டை என்பதால், தவறாமல் தண்டால் எடுப்பேன். முதுகுக்கு நல்ல பலம் வேணும் என்பதால், டெட் லிஃப்ட் பயிற்சி செய்வேன். அடிக்கடி டிரெட்மில். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜாக்கிங். கொழுப்பைக் கரைக்க ஏற்ற உடற்பயிற்சிகள் - குறுகின இடுப்பு, விரிந்த முதுகுனு உடம்பை ஷேப்பா வெச்சுக்கிற ரகசியம் இதுதான்!''

''அதெப்படி நினைச்சா கூட்டுறது, குறைக்கிறதுன்னு சொன்னபடியெல்லாம் உடம்பு கேட்குது..?''

''இப்படிப் பண்றதால் 100 சதவிகிதம் உடல் நலம் பாதிக்க வாய்ப்பு இருக்கு. உடம்பை நினைச்சபோதெல்லாம் ஏத்தி இறக்கும்போது சிறுநீரகம் வரையிலும் பாதிக்கக் கூடிய அபாயம் இருக்கு. குறிப்பிட்ட நாட்களுக்குள் உடம்பைக் குறைக்கணுமேனு மன அழுத்தமும் சேர்ந்துக்கும். ஒரு மாதத்துக்கு மூன்று கிலோ வரைக்கும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை. ஆனால், சினிமால வெவ்வேறு கதாபாத்திரங்கள்ல நடிக்க வேண்டி இருப்பதால், அதெல்லாம் சாத்தியம் இல்லை. இதெல்லாம் தெரிந்திருப்பதால் உடம்பை ஏத்தி இறக்கும் விஷயத்தில் ஜாக்கிரதையாகவே இருப்பேன். உடற்பயிற்சி செய்றது, சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்கிறதுனு ஒழுங்கா இருக்கிறதால், இதுவரைக்கும் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படலை.''

காவல் துறை அதிகாரி டு காட்டுவாசி!

''ஆதியின் டயட் ரகசியம்?''

''பிடித்த டிஷ் சாப்பாட்டு தட்டில் இருந்தாலும், அதில் அவ்வளவாக பிடிக்காத ஐட்டங்களைத்தான் முதல்ல சாப்பிடுவேன். வயிறு பாதி நிரம்பிடும். அப்புறம்தான் பிடிச்ச ஐட்டங்கள் மீது கை வைப்பேன்.  இதுதான் என்னுடைய டயட் சீக்ரெட். பசிக்கும்போதெல்லாம் நொறுக்குத் தீனி பக்கம் போகாம பழங்கள் சாப்பிடுவேன்.

காவல் துறை அதிகாரி டு காட்டுவாசி!
காவல் துறை அதிகாரி டு காட்டுவாசி!

காலையில எழுந்ததும் இளநீர் குடிப்பேன்; இது அம்மா வைத்தியம். ஒரு கப் பப்பாளிப் பழத் துண்டுகளோடு கைப்பிடி அளவு சோளம், ரெண்டு முட்டை, கொழுப்பு இல்லாத பால் ஒரு டம்ளர்... இதுதான் காலை உணவு. சாதத்தோடு கோழிக் கறி அல்லது மீன், நீராவியில் வேக வெச்சக் காய்கறிகள்தான் மதிய சாப்பாடு. சில நேரங்களில் சாதத்துக்குப் பதிலா சப்பாத்தி. சாயங்காலம் கட்டாயம் கிரீன் டீ... இது எனக்குப் பிடிச்ச டிரிங்க். அடிக்கடி குடிப்பேன். ஷூட்டிங் நடுவில் அடிக்கடி தர்பூசணிப் பழ ஜூஸ் குடிப்பேன். இதில் அதிக அளவு சுக்ரோஸ் இருப்பதால், தேவையான எனர்ஜி கிடைச்சுடும். குறைஞ்ச அளவே கலோரி இருப்பதால், எடைக் கூடிடும்கிற பயம் இருக்காது. இரவு உணவுக்கு சப்பாத்தியும் ரெண்டு சிக்கன் துண்டும் ஒரு கொய்யாப்பழமும் போதும்.

சாதாரணமா நாம் சாப்பிடுற உணவுகளில் இருந்து நம்மோட உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனா கொய்யாப்பழத்தில் இருக்கும் புரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் சி நம்ம உடம்புக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாக் கிடைக்க உதவி செய்யும்.''

மீண்டும் பயிற்சிகளில் தீவிரமாகிறது பந்தயக் குதிரை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism