Published:Updated:

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

Published:Updated:
##~##

ழகுக்குக் காட்டும் அக்கறையைக்கூட நாம் ஆரோக்கியத்துக்குக் காட்டுவது இல்லை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்ற விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒகாவா நிறுவனம் 'ஹேல் சக்ரா 2012’(Hale Chakra) என்ற போட்டியைச் சென்னையில் நடத்தியது. 

அறிவுத் திறன், உடல் திறன், பல், தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் போன்ற சுற்றுகளின் மூலம் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் 1,200 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், விருது பெற்ற வெற்றியாளர்கள், தாங்கள் கடைப்பிடித்து வரும் ஆரோக்கிய ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஆரோக்கிய ஆண்’ சரத்குமார்:

''பள்ளி - கல்லூரியில் படிக்கும்போது, நான் கிரிக்கெட் பிளேயர். ஜிம்முக்கும் ரெகுலராப் போவேன். இடையில் ஒரு விபத்தால உடல் பாதிச்சு, தொடர்ந்து ஜிம்முக்குப் போக முடியலை; கிரிக்கெட்டும் ஒழுங்கா ஆட முடியலை.

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

விரும்புறதை எல்லாம் சாப்பிடுவேன். ஆனால், நடந்தே கலோரிகளைக் குறைச்சிடுவேன். லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல் படிகள் ஏறித்தான் ஆபீஸ் போவேன். பக்கத்துக் கடைகளுக்குப் போகும்போது டூவீலர் பயன்படுத்தாமல், நடந்துபோவதையே வழக்கமாக வைத்திருக்கிறேன்.'

'ஆரோக்கியப் பெண்’ ஜெயந்தி முரஹரி:

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

'மலை ஏறும் பயிற்சி பெற்றிருக்கேன். கராத்தே, யோகா தெரியும். பாராசூட்ல குதிக்கிறது மாதிரியான த்ரில் விளையாட்டுகள்தான் என்னுடைய பொழுதுபோக்கு. ஃபிட்னெஸ் மேனேஜ்மென்ட்ல ஒரு வருடப் படிப்பை முடிச்சிருக்கேன். அதனால், உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப அக்கறை எடுத்துப்பேன். வாரத்தில் ஐந்து நாட்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் மாதிரியான பயிற்சிகள் செய்வேன். தனியாக யோகா செய்யாமல், பயிற்சிகளோடு சேர்ந்தே செய்துவிடுவேன். நமது தென்னிந்திய உணவு வகைகள்தான் சமச்சீரான உணவு. உணவில் எண்ணெயைக் குறைத்துக் கீரை, காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வேன்.'

'சிறந்த உடற்கட்டு’ அங்கயற்கண்ணன்:

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

'ஐந்து வயதில் இருந்தே அதிகாலையில் எழுந்து ஓட்டப் பயிற்சி செய்கிறேன். அத்துடன் தினமும் ஒன்றரை மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க ஜிம்மில் உடற்பயிற்சி. கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டாலும் அதிக அளவில் உடலில் சேர்ந்த கலோரியைக் குறைப்பதற்காகக் கூடுதலாக உடற்பயிற்சி செய்வேன். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கொழுப்புச் சத்தை அறவே தவிர்க்கின்றனர். இது தவறு. தினமும் குறிப்பிட்ட அளவு உங்களுக்குக் கொழுப்புச் சத்தும் தேவைப்படும். அதை நீங்கள் எடுத்துக்கொள்ளாதபோது பிரச்னைகள் ஏற்படலாம். தினமும் 20 நிமிடங்கள் நன்றாக நடைப்பயிற்சி செய்வதோடு, நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இவை இரண்டையும் முறைப்படி கடைப்பிடித்தால், நீங்களும் ஆரோக்கியமாக வாழலாம். மற்றபடி ஜிம்முக்குச் செல்வது என்பது உடற்கட்டை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான்!'

'தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியம்’ சங்கீதா ஜோனா:

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

'வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் கடலை மாவைக் கலந்து உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊறவிட்டுக் குளிப்பேன். இதுதான் என் சருமத்தைப் பளபளப்பாகவெச்சிருக்கு. முகத்துக்கு சோப் போட மாட்டேன். கடலை மாவு மட்டும்தான். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, பழங்களை நிறையச் சாப்பிடுவேன். ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களின் சாறுகளை முகத்தில் தடவுவேன்.

செம்பருத்திப் பூ, இலை, கறிவேப்பிலை, வெந்தயம், புங்கங்காய், சீயக்காய் ஆகியவற்றைக் காயவைத்து, வீட்டிலேயே அரைத்த சீயக்காயை மட்டும்தான் தலைக்குப் பயன்படுத்துவேன். இதனால் பேன், பொடுகு போன்ற தொந்தரவுகளும் குறையும்.'

'பல் ஆரோக்கியம்’ ஹரிகிஷோர்:

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...

'மேல் பற்களை மேலிருந்து கீழாகவும் கீழ்ப் பற்களைக் கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும். நான் தினமும் ஐந்து நிமிடங்கள் பல் துலக்குவேன். காலையில் தூங்கி எழுந்ததும் ஒரு முறை, இரவு படுக்கப்போகும் முன் ஒரு முறை என இரண்டு முறை பல் துலக்குவேன். துலக்கி முடித்ததும் மவுத் ஃப்ரெஷ்னர் கொண்டு வாயைக் கொப்பளிப்பேன். அப்போதுதான் வாய் துர்நாற்றம் இருக்காது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களைச் சுத்தம் செய்துகொள்வேன்.'

ஆரோக்கியமானவங்க சொன்னா கேட்டுக்கணும்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism