Published:Updated:

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

Published:Updated:
##~##

டலினை உறுதி செய்யத்தான்  எல்லோருக்கும் ஆசை. அதற்கு விதவிதமான கடுமையான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடும். எளிய உடற்பயிற்சிகளோ காலத்துக்கும் நீடிக்கும். ஏரோபிக்ஸ் இரண்டாவது ரகம். எப்போது விடியும், துள்ளல் இசையைக் கேட்டுக்கொண்டே ஏரோபிக்ஸ் செய்யலாம் என்றே உள்ளம் துடிக்கும். காரணம், இசையும் நடனமும் பிணைந்ததுதான் ஏரோபிக்ஸ்.

 ''உடல் ஆரோக்கியத்துக்கான பரிபூரணமான பிரிஸ்கிரிப்ஷன் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சி இது. ரத்த அழுத்தம், சோர்வு, சர்க்கரை நோய்... ஏன் மனரீதியான பிரச்னைகள் இருப்பவர்கள்கூட இதன் மூலம் பலன் அடைய முடியும்'' என்கிறார் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் கலா.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஏரோபிக்ஸ் செய்வதால் கிடைக்கக்கூடிய முதல் நன்மை - உடலில் எண்டார்ஃபின் எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரந்து ஒருவிதமான உற்சாகத்தைக் கொடுக்கும்; குதூகலம் தொற்றிக்கொள்ளும். ஸ்டெப் ஏரோபிக்ஸ், ஃப்ளோர் ஏரோபிக்ஸ் என இரண்டு முறையில் டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

ஸ்டெப் ஏரோபிக்ஸில் மேடான ஒரு மரப் பலகையில் ஏறி இறங்கி ஏறி இறங்கி பயிற்சி செய்வதால் இடுப்பு, தொடை, முழங்கால் எலும்புகள் ஆகியவை வலுப்பெறும். இதனால், வயதான காலத்தில் எலும்புத் தேய்மான நோய் வராமல் தடுக்க முடியும்.  

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

டான்ஸ் ஏரோபிக்ஸில் ஒவ்வோர் அசைவுக்கும் ஒரு ரிதம் இருக்கிறது. இதில் ஸ்டெப் கவுன்டிங் மிகவும் முக்கியம். இந்த இசை - நடனக் கலவை அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்டது. ஒவ்வோர் பகுதியும் 32 எண்ணிக்கையில் வர வேண்டும். அதுதான் சரியான நடனம். முதலில் மிகவும் மெதுவாக ஆரம்பித்து, உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதைச் செய்யும்«பாது ஏ.சி. அறையில்கூட வியர்க்க ஆரம்பிக்கும். உடலை எந்தெந்தத் திசைகளில் அசைக்கிறோமோ, அந்தந்தப் பகுதியில் இருக்கும் கொழுப்புகள் நன்கு கரையும்.

வீட்டிலேயே ஒரு ஏ.சி. அறையில் ஏரோபிக் மியூசிக் சி.டி-யை ஓடவிட்டு இந்தப் பயிற்சியைச் செய்யலாம். சில பெண்களுக்கு உடம்பு திடகாத்திரமாக இருக்கும்; ஆனால், கைகள் மட்டும் மெலிந்து காணப்படும். ஒரு கையால் மிக எளிதில் தூக்கக்கூடிய 'ரூபிடாய்’ என்கிற குறைந்த எடைக் கருவியைக் கீழே இருந்து மார்பு வரை தூக்கியும் கீழ் இறக்கியும் சுமார் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து செய்துவந்தால் கைகளில் தசைப்பற்று அதிகரிக்கும்.

இடுப்புச் சதையைக் குறைத்து அழகாய் இருக்க ஏரோபிக்ஸில் 'கிவ்னாட்’ என்கிற பயிற்சி நல்லது.

குத்துச் சண்டை போடுவதுபோல், தம்பிள்ஸ் வைத்துப் பயிற்சி எடுப்பதன் மூலம், கை, தோள்பட்டை ஆகியவற்றில் உள்ள கொழுப்பு குறையும். அடுத்தடுத்து செய்துகொண்டே இருக்க வேண்டியதாக இந்தப் பயிற்சி முறைகள் இருந்தாலும், இசையுடன் சேர்ந்து செய்வதால் விளையாட்டாகவும் உற்சாகமாகவும் செய்ய முடியும்'' என்கிறார் கலா.

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

''மனதுக்கும் உடலுக்கும் ஒருங்கே உற்சாகம் ஊட்டுகிற டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சிக்குத்தான் இப்போது வரவேற்பு அதிகம்'' என்று பெருமைப்படும் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் கமலேஷ் சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வகுப்புகள் எடுக்கிறார். இந்தத் துறையில் இவருக்கு 30 ஆண்டுகள் அனுபவம் உண்டு.

''கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை, ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்தால் என்னென்ன பலன்கள் ஏற்படுமோ, அவை எல்லாம் ஏரோபிக்ஸிலும் கிடைக்கும்.

ஏரோபிக்ஸ் செய்யும்போது ரத்த நாளங்கள் விரிவடைந்து அதிக ஆக்சிஜனை உடலுக்குள் கொண்டுசெல்லும். இதயம் வேகமாகத் துடிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் சக்தி அதிகரிப்பதால் சோர்வு இல்லாமல் இருக்க முடியும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால், காய்ச்சல், சளி போன்ற தொல்லைகளும் அண்டாது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள்கூட எளிமையான ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். எதிர்காலத்தில் இதயப் பிரச்னை மற்றும் மூட்டுத் தேய்மானப் பிரச்னைகளில் இருந்து இந்தப் பயிற்சி அவர்களைக் காப்பாற்றும்.

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை ஏரோபிக்ஸ் குறைக்கிறது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம், மனச் சோர்வு மற்றும் களைப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். தசைகள் உறுதியாகவும் வலுவாகவும் இருப்பதால், நீண்ட காலம் இளமையான தோற்றத்தோடு இருக்கலாம். டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் மனிதனின் ஆயுட்காலத்தையும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்தப் பயிற்சிகள் செய்வதற்கு வயது ஒரு தடை அல்ல. 15 வயதில் இருந்து 60 வயதைக் கடந்தவர்கள்கூட பயிற்சியில் வந்து சேருகிறார்கள். ஆனால், டி.வி-யைப் பார்த்தோ அல்லது தனக்குத்தானே வீட்டில் இருந்தபடியே இந்தப் பயிற்சியை செய்வதோ நல்லது அல்ல!'' -  அறிவுறுத்தலுடன் முடிக்கிறார் கமலேஷ்.

எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!

 டாக்டர் கீதா சுப்ரமணியன், இதய சிகிச்சை நிபுணர்.

''உற்சாகமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சிதான் நல்லது. உயர் ரத்த அழுத்தம் குறையும். உடல் பருமன், மாரடைப்பு மற்றும் இதய நோய்களை நெருங்கவிடாமல் செய்யும். இப்படி நிறைய நன்மைகள் இருந்தாலும், உங்கள் உடல் அதற்குத் தகுதியானதா, எந்தெந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதுபற்றி  மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பயிற்சியை மேற்கொள்வது நல்லது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism