பிரீமியம் ஸ்டோரி
##~##

''மீனாட்சிக்கு சில நாட்களாகத் தொடர்ந்து முதுகு வலி. அதன் பின் கழுத்து வலி. அது அப்படியே பரவி உடல் வலியாகிவிட்டது. வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மருத்துவர் எழுதிக்கொடுத்த எந்த மாத்திரை மருந்துக்கும் வலி அடங்குவதாக இல்லை. தினமும் கை கால் குடைச்சல், தாங்க முடியாத உடல் வலி என்ற நிலையில் மீனாட்சி என்னைச் சந்தித்தார். அவரைப் பரிசோதனை செய்து பார்த்தபோது மீனாட்சிக்கு வந்திருப்பது 'பைப்ரோ மையால்ஜியா’ என்ற முடிவுக்கு வந்தோம். இப்போது சிகிச்சை முடிந்த பின் முழுவதுமாகக் குணம் அடைந்து 'பைப்ரோ மையால்ஜியா’வைப் பற்றி கட்டுரை எழுதும் அளவுக்கு தெளிவாக இருக்கிறார்.'' - சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் தெய்வீகன் குஞ்சிதபாதம் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சம்பவம் இது.

''டாக்டர், 'பைப்ரோ மையால்ஜியா’ என்ற பெயரே பயம் தருவதாக இருக்கிறதே?''

''பைஃப்ரோ மையால்ஜியா என்றால் பரவலான உடல்வலி, அசதி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம். நோயாளியின் அன்றாட வாழ்க்கையின் சுகத்தை குறைக்கும். இது பெரும்பாலும் இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களை பாதிக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இது 3.5 சதவிகிதம் பெண்களையும் 0.5 சதவிகிதம் ஆண்களையும் பாதிக்கின்றது.

உடல் வலியா!

''இந்த நோயின் அறிகுறிகள் என்ன?''

உடல் வலியா!

''தொடர்ந்து கை கால் குடைச்சல், உடல் முழுவதும் வலி ஏற்படும். சம்பந்தமே இல்லாமல் எல்லா இடங்களிலேயும் பரவலான உடல் வலி இருக்கும். முக்கியமாக இடுப்பு வலி, முதுகு வலி. தவிர உடலின் பல பாகங்களில் தொடர்ந்து வலி இருக்கும். தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறுகள், மனச் சோர்வு, உடல் சோர்வு, ஞாபக மறதி போன்றவையும் இருக்கும். இந்த நோய் உள்ளவர்கள் முதுகு வலி என்று நினைத்து அதற்குரிய சிகிச்சை எடுத்தால் வலி சரியாகாது.

நரம்பு மண்டலத்தில் வலியை அறியக் கூடிய சில ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன. இதில் ஏற்படும் குறைகளினால் பைஃப்ரோ மையால்ஜியா வருகின்றது. 'பைப்ரோ மையால்ஜியா’ என்று உறுதி செய்வதற்கு முன்பு மூட்டு தசை நோய் அல்ல என்று ரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகள் மற்றும் கவுன்சிலிங் மூலமாக மட்டுமே சரிசெய்ய முடியும்.''

உடல் வலியா!

''ஏன் வருகிறது 'பைப்ரோ மையால்ஜியா’?''

''பைஃப்ரோ மையால்ஜியா வர முக்கியக் காரணம் ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை பாதிக்கப்படுவது. நம் உடலில் இயற்கையான வலி நிவாரணி உள்ளது. நம் உடலில் வலி ஏற்படும்போது 'செரட்டோனின்’ என்ற ஹார்மோன் உடனே சுரக்கும். வலியால் நாம் பாதிக்காத அளவுக்கு அந்த வலியை 'செரட்டோனின்’ கட்டுப்படுத்தும். 'பைஃப்ரோ மையால்ஜியா’ வந்தவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்திருக்கும் அல்லது முற்றிலும் சுரக்காமல் போயிருக்கும். அதனால் தான் உடலில் வலி நிரந்தமாக இருக்கிறது. சாதாரண வலியைக் கூட Substance P  அதிகமாக உணரச் செய்யும். இந்த ரசாயனப் பொருள் அதிகமாக இருந்தாலும் பைப்ரோ மையால்ஜியா வரும்.''

''இந்த நோயை மருத்துவரீதியாகக் கண்டுபிடிப்பது எப்படி?''

''இதற்குத் தனியாக எந்தப் பரிசோதனையும் கிடையாது. நோயின் தன்மையைப் பொறுத்து, அதற்குரிய நிபுணர்களால் மட்டுமே இந்த நோய் கண்டு அறியப்படுகிறது.

இதற்கான சிகிச்சையை ஒரே ஒரு மருத்துவர் மட்டும் பரிந்துரைப்பது இல்லை. நரம்பியல் நிபுணரைத் தவிர தூக்கமின்மை மற்றும் மன நல மருத்துவர்களையும் கலந்தாலோசிக்கச் சொல்வார்கள். செரட்டோனின் ஹார்மோனுக்குரிய மாத்திரைகள், நோயின் பாதிப்புக்கு ஏற்றபடி தரப்படும். மாத்திரைகளால் வலி ஓரளவுக்கு கட்டுப்பட்டப் பிறகு இயற்கையான முறையில் செரட்டோனின் சுரக்கச் செய்ய உதவக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய சொல்வோம்!''

உடல் வலியா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு