Published:Updated:

தீபிகாவின் 4 ரகசியங்கள்!

தீபிகாவின் 4 ரகசியங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
தீபிகாவின் 4 ரகசியங்கள்!
##~##

இதுவரை நீங்கள் எத்தனை முறை சினிமா வாய்ப்புகளை மறுத்திருப்பீர்கள்? என்றால், ''என்னால் வாழ்க்கையில் பதில் சொல்லவே முடியாத கேள்வி இது'' என்று சொல்லிச் சிரிக்கிறார் தீபிகா ரெபேகா பல்லிக்கல். இந்தியாவின் ஸ்குவாஷ் தேவதை! தீபிகாவின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இங்கே...

உணவு

''விளையாட்டுத் துறையில் இருக்கிறவங்க சாப்பாட்டைப் பார்த்துப் பார்த்துச் சாப்பிட வேண்டிய கட்டாயம் கிடையாது. ஏன்னா, நாங்க உடம்புக்கு அவ்வளவு பயிற்சி கொடுக்கிறோம். அதனால, நீங்க சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள கலோரிகளை எரிக்க முடியும்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா, தாராளமா நல்லாச் சாப்பிடலாம். ஆனா, சாப்பாட்டுல கவனம் இருக்கணும். என்னோட உணவைப் பொறுத்த அளவில் சர்க்கரை கம்மியாகவும் மாவுச் சத்து அதிகமாகவும் இருக்கும். அதுதான் ஸ்டாமினாவைத் தக்கவைக்க உதவும். எனக்கு எப்பவும் பிடிச்ச உணவு வகைன்னா... அது பாஸ்தா. மாவுச் சத்து அதிகம் உள்ள இத்தாலிய உணவு இது. நிறைய கார்போஹைட்ரேட் இருக்கும். இதைச் சாப்பிட்டால், வயிறு கும்முனு நிறையறதோட, உடலில் ஊட்டச் சத்துக்களும் அதிகரிக்கும். நினைக்கிறப்ப எல்லாம் ஆப்பிள் ஜூஸ் குடிப்பேன். தவிர, சீசன்ல மாம்பழம் அடிக்கடி சாப்பிடுவேன். 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ, 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி இருக்கு. இது ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நல்லது.

தீபிகாவின் 4 ரகசியங்கள்!

பயிற்சி

தீபிகாவின் 4 ரகசியங்கள்!

''மனசு சொல்றதை உடம்பு கேட்கணும். அதுதான் ஆரோக்கியத்துக்கு அடையாளம். அதுக்குப் பயிற்சி அவசியம். தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் உடற்பயிற்சி செய்வேன். அப்புறம் 5 மணி நேர ஸ்குவாஷ் பயிற்சி. என்னை நான் விரும்புற மாதிரி வெச்சிருக்கிறது இந்தப் பயிற்சிதான். காலை 6 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வேன். அதுக்கப்புறம் ஜிம். அங்கே ரெண்டு மணி நேரம் வொர்க் அவுட். மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம் ஒரு குட்டித் தூக்கம். சாயங்காலம் அஞ்சு மணியில் இருந்து ஏழு அல்லது ஏழரை மணி வரைக்கும் ஸ்குவாஷ் டிரெயினிங்.  ஒவ்வொரு நாளும் இது தவறாம நடக்கும். ஞாயிற்றுக் கிழமை எப்பவும் குடும்பத்துக்கும் தோழிகளுக்குமானது.''

உழைப்பு

''இந்த உலகத்தில் ஸ்குவாஷ் தவிர, வேறு எதையும் நான் பெரிசா நினைக்கலை. நம்ம நாட்டுக்காக விளையாடறோம்கிற நினைவு இருந்துட்டே இருக்கிறதால், ஜெயிக்கணும்கிற எண்ணம் உறுதியாகிட்டே வரும். என்னோட விளையாட்டை என்ஜாய் பண்ணி விளையாடுறேன். ஸ்குவாஷ் விளையாடுறப்ப எல்லா ஷாட்டையும் அடிப்பதற்கு முயற்சி செய்வேன். நான் ஒரு ஷாட் மேக்கர்னே சொல்லிப்பேன். ஸ்குவாஷ் தவிர... டென்னிஸ், ஷாப்பிங், சினிமா பிடிக்கும். ஆனா, கொஞ்ச நேரம் கிடைச்சாலும் உடனே நான் செய்றது என்ன தெரியுமா? தூங்குறது. தூக்கம் மாதிரி அற்புதமான விஷயம் வேறு எதுவும் கிடையாது.''

இலக்கு

''உலகத் தர வரிசையில் அஞ்சாவது இடத்துக்குள் வரணும்னு ஆசைப்படறேன். அதுக்காகக் கடுமையா உழைக்கிறேன். தவிர, 2014-ல் நடக்கஇருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் ஜெயிக்கணும். என் கோச், அஞ்சு தடவை சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியனான சாரா ஃபிட்ஸ் ஜெரால்டு. என்னோட கனவு அவங்களால்தான் நனவாகும்னு நம்புகிறேன்.''

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு