இதய நோய் சிகிச்சை என்றால், நம் அனைவரின் கண் முன் வருபவர் டாக்டர் கே.எம்.செரியன். 71 வயது. இன்றும்கூட மிக மிக சிக்கலான அறுவைசிகிச்சைகளை அநாயசமாகச் செய்பவர் டாக்டர் செரியன். 35 ஆயிரத்திற்கும் அதிகமான அறுவைசிகிச்சைகள் செய்தவர். மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போக்ரேட்ஸ் பிறந்த கிரீஸ் நாட்டின் ஒரு கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரே இந்தியரான கே.எம். செரியனின் ஆரோக்கிய ரகசியங்கள்...

காலை 6 மணிக்கு எழுந்துவிடுவார். இரவுப் பணியாற்றிய டியூட்டி டாக்டர் போன் செய்து, முந்தைய நாள் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளின் மருத்துவ நிலைபற்றி விளக்க வேண்டும்.

அதன் பிறகு ட்ரெட்மில் நடைப் பயிற்சி. வெளிநாடு சென்றாலும் காலையில் அரை மணி நேரம் கட்டாயம் நடைப்பயிற்சி இருக்கும்.

8 மணிக்கு உப்பு, சர்க்கரை சேர்க்காத ஓட்ஸ்தான் காலை உணவு. இதனுடன் எப்போதாவது

பப்பாளிப் பழம் சிறுசிறு துண்டுகளாக வெட்டிச் சாப்பிடுவது வழக்கம்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது பிடிக்கும். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மருத்துவமனையைச் சுற்றி ரவுண்ட்ஸ் கிளம்பிவிடுவது வாடிக்கை. மாலையில் 5 மணிக்கு நோயாளிகளைச் சந்திக்க ரவுண்ட்ஸ் செல்வார்.

மதியம் 1 மணிக்கு லஞ்ச். ஒரு சூப், காய்கறி சாலட் தான் மதிய உணவு.

இரவு 8.30 மணிக்கு டின்னர். சப்பாத்தி அல்லது அரிசி சாதம். இதனுடன் மீன் குழம்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். 9.30 முதல் 10 மணிக்குள் படுக்கைக்குச் சென்றுவிடுவது வழக்கம்.

வீட்டில் சமைக்கப்பட்ட உணவுதான் எப்போதுமே. 'வீட்டில் சமைக்கும்போதுதான் எவ்வளவு எண்ணெய், உப்பு என்று பார்த்துப் பார்த்துச் செய்ய முடியும். ஹோட்டலில் ருசிக்காக என்னென்னவோ சேர்ப்பார்கள். பீட்சா, பர்கர், கலர் சோடாவுக்குப் பதில் ப்ரெஷ் ப்ரூட்ஸ்- வெஜிடபிள் சாலட், ஜூஸ் செய்து சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்’ என்று தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அட்வைஸ் செய்வார்.

விளையாட்டில் ஆர்வம் இல்லை. முதலும் கடைசியுமாகப் பார்த்தது கிரிக்கெட் போட்டிதான். எல்லோரும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தபோது, பேப்பர் படித்துக்கொண்டு இருந்தாராம் டாக்டர் செரியன்.

- பா.பிரவீன்குமார்

படங்கள்: சு.குமரேசன்