Published:Updated:

அனுஷ்கா, ஆர்யாவுக்குத் தெரியாத அழகு ரகசியம்!

ஸ்ரேயா பேசுறாங்க!

பிரீமியம் ஸ்டோரி

லைகால் புரியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் ஸ்ரேயா. சும்மாவா? பாலிவுட் ஹீரோயின்களுக்கே கிடைக்காத ஹாலிவுட் சான்ஸே கிடைச்சிருக்கே... அதுவும் தீபா மேத்தா டைரக்ஷனில்!

சந்தோஷத்தில் ஒரு சுற்றுப் பெருத்திருப்பார் என்று பார்த்தால், அதே சிக் இடை... அதே பூனை நடை!

ஃபிட்னெஸ் ரகசியம்!

அனுஷ்கா முதல் ஆர்யா வரைக்கும் என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி... 'எப்படி இவ்வளவு ஸ்லிம்மா இருக்கே?’ங்கிறதுதான். அந்த ரகசியத்தை டாக்டர் விகடன் மூலமா சொல்றேன். உங்க உடம்புக்குத் தேவைப்பட்டா மட்டுமே டயட் பண்ணுங்க. நல்லாச் சாப்பிடணும், அதே சமயம் சின்னச் சின்ன வொர்க்அவுட்ஸ் செஞ்சு உடம்பை ஷேப்ல வெச்சுக்கணும். நான் கஷ்டமான வொர்க்அவுட்ஸ் எதுவும் செய்ய மாட்டேன். ஜிம்மில் 15 பைசெப்ஸ் பண்ணுங்கன்னு சொல்வாங்க.  நான் அந்த அளவுக்கு செய்ய மாட்டேன். தினமும் ட்ரெட்மில்ல நடப்பேன். சில சமயம் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து வொர்க்அவுட் பண்ணுவேன். அப்பத்தான் வொர்க்அவுட்டைக்கூட சந்தோஷமா செய்ய முடியும். உடம்புக்கு மட்டுமா உடற்பயிற்சி? மனசுக்கும் சேர்த்து ரிலாக்ஸ் பண்ணிக்கத்தானே?

அனுஷ்கா, ஆர்யாவுக்குத் தெரியாத அழகு ரகசியம்!

டான்ஸ் நீச்சல்... இதுவே ஃபிட்னெஸ் மந்திரம்!

எனக்கு டான்ஸ்னா உயிர். ஒரு டான்ஸரோட உடல்வாகைக் கவனிச்சீங்கன்னா செதுக்கிவைத்த சிலை மாதிரி இருப்பாங்க. ஏன்னா டான்ஸ் பண்றப்ப உங்க உடம்பில் இருக்கிற தேவையில்லாத சதை கரைஞ்சிடும். பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருக்கலாம். நான் கதக் நடனக் கலைஞர் ஷோபனா நாராயணியிடம் முறைப்படி கதக் கத்துக்கிட்டேன். அப்பறம் நீச்சல் பயிற்சி. முழு உடம்புக்கும் இது நல்ல பயிற்சி. பயிற்சி செய்றோம்னே தெரியாது. இயல்பா இருக்கும். மெனக்கெடவே வேண்டாம்.

பிடிச்ச சாப்பாடு

சாப்பாடு என்ன மருந்தா? டபக்கு, டபக்குனு வாய்ல போட்டு முழுங்க? நமக்குப் பிடிச்சதை ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடணும். சாப்பாட்டில் எனக்குக் கட்டுப்பாடுங்கிறதே பிடிக்காது. கொஞ்சம் கவனத்தோட சாப்பிட்டா, விரும்பினதை எல்லாம் சாப்பிடலாம், ஃபிட்டாகவும் இருக்கலாம். காலையில் எப்பவும் பிரெட், பழங்கள். தென் இந்திய உணவுகளில் தோசை பிடிக்கும். இட்லி அவ்வளவாப் பிடிக்காது. மதிய உணவு ஹெவியா எப்பவும் சாப்பிட மாட்டேன். அரிசி உணவுகளைத் தவிர்த்துடுவேன். எனக்குப் பிடிச்ச உணவு சப்பாத்தி, டால், ரோட்டி, பன்னீர், முளைகட்டின பயிறு, சாலட், இளநீர், பழச்சாறு. இரவு உணவு பெரும்பாலும் கொஞ்சம் சிக்கன், ராஜ்மா, சென்னா ஏதாவது ஒண்ணு இருக்கும். வீட்டில் சமைக்கப்பட்ட உணவையே ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன்.

அனுஷ்கா, ஆர்யாவுக்குத் தெரியாத அழகு ரகசியம்!

ரிலாக்ஸ் பண்ணிக்க...

கவலைப்படறதை விட்ருங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு நம்மால் சொல்ல முடியாது. எப்பவும் சிரிச்சிட்டு லைட்டா இருக்கணும். என்னோட ட்விட்டர் ஐடி கூட ஷ்ரியாஸ்மைலி  (சிரிப்பு). மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். யோகா மற்றும் தியானத்தில் எனக்கு ரொம்ப ஈடுபாடு. விபாசனா யோகா தொடர்ந்து செய்றேன்.

அழகுங்கிறது...

அழகுங்கிறது முகத்தில் மட்டும் இல்லை. நம்ம குணத்தில் - செயல்களில் இருக்கணும். என்னோட வேலைக்கு ஃபேஸ் வேல்யூ ரொம்ப முக்கியம். ஸ்பா போவேன். முகத்துக்கும் உடம்புக்கும் மசாஜ் செஞ்சுக்கப் பிடிக்கும். பெடிக்யூர் ரெகுலரா பண்ணிப்பேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எல்லா விதமான மசாஜ்களும் செஞ்சுப்பேன். இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... முக்கியமா உங்க மனசுக்கு எது பிடிக்குதோ, அதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க. ஏன்னா, மனசுக்குத் திருப்தி முக்கியம். ''

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு