Published:Updated:

''ரஜினியோடு சண்டை போட்டேன்!''

'தில்' தீபிகா

##~##

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து மற்ற ஹீரோயின்களின் காதுகளில் புகையை வரவைத்தவர் தீபிகா படுகோன். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் பியூட்டி.  பேட்மின்டன் ஆட்டக்காரர், பிரபல நிறுவனங்களின் மாடல் எனச் சுற்றிச் சுழன்றுவரும் தீபிகாவின் பியூட்டி பக்கம்... 

தீபிகாவின் ஸ்பெஷலே அவரது திக்திக் உயரமும், சிக்சிக் உடல்வாகும்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இவ்ளோ ஸ்லிம்மா இருக்கீங்களே... எப்படி?''

''டயட்டீஷியன் என்ன சொல்றாங்களோ, அதுதான் என் பிளேட்ல இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கொஞ்சமா... ஹெல்த்தியா சாப்பிடுவேன். அது எனக்கு சக்தியும் தெம்பும் தருது. நிறையத் தண்ணீர் குடிப்பேன். பச்சைத் தண்ணீர்தான்... பளபளப்பான சருமத்துக்கு தண்ணீர் ரொம்பவே நல்லது. சமச்சீரான உணவும், நல்ல தூக்கமும் அழகுக்கு அடிப்படையான விஷயங்கள்.''

''ரஜினியோடு சண்டை போட்டேன்!''

''உங்களோட அழகுக் கூந்தலை எப்படிப் பராமரிக்கிறீங்க?''

''ஷூட்டிங் லைட்ல முதல்ல பாதிக்கப்படுவது தலைமுடிதான். ஒவ்வொரு படத்திலும் ஹேர் ஸ்டைல் விதவிதமாச் செய்ய வேண்டியிருக்கும். அதனால், அயனிங், பெர்மிங்னு முடிக்கு நிறைய ஸ்ட்ரெஸ். தலை சூடாகிட்டா, முகத்தோட அழகும் பாதிக்கும்; ஆரோக்கியமும் கெட்டுவிடும். அதனால், மூணு விஷயங்களை மறக்காமல் கடைப்பிடிப்பேன். ஷூட்டிங் முடிச்சு வந்ததும் லூஸ்ஹேர் விட்டு, கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணுவேன். தலைக்கு எண்ணெய் நல்லாத் தடவி மசாஜ் பண்ணுவேன். மைல்டு ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிப்பேன். ஃப்ரெஷ்ஷாகி, தலையில் இருந்த பாரம் எல்லாமே இறங்கினதுபோல இருக்கும்.  தினமும் தேங்காய் எண்ணெய் பேஸ் இருக்கிற ஆயிலால், முடியை நல்லா ஊறவைச்சு மசாஜ் எடுத்துப்பேன். எவ்வளவுக்கு எவ்வளவு முடிக்கு ஊட்டச் சத்துத் தருகிறோமோ, அந்த அளவுக்கு அது பளபளப்பாகவும் அடர்த்தியாவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த ஆலோசனை நடிகைகளுக்கு மட்டும் இல்லை.... இல்லத்தரசிகளுக்கும் பொருந்தும்''.

''எப்பவுமே பளிச்னு இருக்கீங்களே, எப்படி?''

''முதல்ல மாய்ச்சரைசர் கொண்ட எஸ்பிஎஃப் இருக்கும் கிரீமை சருமத்தில் தடவுவேன். அப்புறம் ஷூட்டிங்குக்குத் தேவையான மேக் அப், இரவு தூங்குறதுக்கு முன்னாடி சின்ன மேக் அப் இருந்தாக்கூட அதை சுத்தம் பண்ணி, மறுபடியும் மென்மையான ஒரு மாய்ஸ்ரைஸர் கிரீமைத் தடவிட்டுத்தான் தூங்குவேன்.

''ரஜினியோடு சண்டை போட்டேன்!''

சந்தோஷமா இருப்பது மிக முக்கியம். சுத்தி இருக்கிறவங்களை சந்தோஷப்படுத்த முடியாட்டியும் காயப்படுத்தாமல் இருப்பது அதைவிட முக்கியம்.''

''சமீபத்திய எதிர்பார்ப்பு என்ன?''

''ரஜினி சாரோட நடிச்ச 'கோச்சடையான்’ படத்தை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கேன். இதில் நான் ரஜினி சாரோட சண்டை போட்டிருக்கேன் தெரியுமா? படம் எப்படியும் ஜூன் மாசம் வெளிவரும்னு நினைக்கிறேன். ரொம்ப த்ரில்லிங்கா ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்கேன். அப்புறம் ஷாருக்கோட நடிக்கிற சென்னை எக்ஸ்பிரஸ். ஒரு ரகசியம் சொல்றேன் காதைக் கொடுங்க... இதில் நான் தமிழ்நாட்டுப் பொண்ணா நடிக்கிறேன்!''

- உமா ஷக்தி