Published:Updated:

ஸ்லிம்மாக்குது ஜும்பா டான்ஸ்!

பேட்மின்ட்டன் இளவரசியின் ஃபிட்னெஸ் ரகசியம்

##~##

இளமை துள்ளும் பேட்மின்ட்டன் இளவரசி சாய்னா நேவால். இந்திய  விளையாட்டு உலகின் லேடி சூப்பர்ஸ்டார். தன் உடலை மூங்கில் புல்லாங்குழலாக எப்போதும் வைத்திருக்கும் இந்தத் தங்க மங்கையின் ஆரோக்கிய ரகசியங்களை அவரே விவரிக்கிறார்... 

''உங்கள் ஃபிட்னெஸ் பழக்கங்கள் என்ன என்ன?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஆறு நாள் ஷெட்யூலில், 50 சதவீதம் என் உடல் ஃபிட்னெஸுக்காக ஒதுக்கிடுவேன். காலையில் 6 மணிக்கு ஷார்ப்பா எழுவேன். காலை உணவை முடிச்சிட்டு 7 மணிக்கு கோபிசந்த் அகாடமிக்குப் போய் பேட்மின்டன் விளையாடுவேன். 11 மணி வரை கடுமையான பயிற்சி. அப்புறம் வீட்டுக்கு வந்து மதியச் சாப்பாடு. கொஞ்சம் நேரம் ரெஸ்ட். மறுபடியும் 3.30 மணிக்குத் திரும்பவும் பேட்மிட்டன் விளையாடப் போவேன். வழியில் ஒரு கப் டீ.  மூன்று மணி நேரம் அங்கே பயிற்சி. தினம் ஜிம்முக்கு போய் வொர்க்அவுட் செய்வேன், அங்கே செல்ல நேரம் இல்லேன்னா, வீட்ல இருந்தபடியே பயிற்சி செய்வேன். ஸ்கிப்பிங், வெயிட் சிட் அப்ஸ்னு எல்லா பயிற்சிகளையும் தொடர்ந்து செய்வேன்.  

ஸ்லிம்மாக்குது ஜும்பா டான்ஸ்!

பயிற்சி முடிஞ்சதுக்கு அப்புறம், ஒரு கிளாஸ் ஜூஸ் குடிப்பேன். வீட்டுக்கு வந்ததும் இரவு உணவு. மனசை ரிலாக்ஸ் பண்ணிக்க, மியூசிக் கேட்பேன். நேரம் கிடைக்கிறப்ப, டிவி பார்ப்பேன். அதுக்கப்பறம் யோக நித்ரா செய்வேன். அப்புறம் வேறென்ன? குட்நைட்தான்... நோ ட்ரீம்ஸ்தான்!

இதைத் தவிர, ஜும்பான்னு ஒரு டான்ஸ் கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட இது வொர்க் அவுட் மாதிரிதான். இந்த டான்ஸ் மூவ்மென்ட்ஸ் பண்றப்ப, 500 முதல் 1000 கலோரி வரைக்கும் எரிக்கலாம். இது உடலை ட்ரிம்மாக்கும். தேவையில்லாத கொழுப்புகளைக் கரைச்சிடும். உடல் லேசாகி, அப்படியே மிதக்கிற மாதிரி இருக்கும்.

வொர்க் அவுட்ஸ் தவிர வேறு என்ன செய்து உடலை இந்த அளவு ஃபிட்டாக வைத்திருக்கிறீர்கள்?

எக்ஸர்சைஸ் தவிர, மன அமைதிக்காக யோகா. தூங்குறதுக்கு முன்னால் யோக நித்ரா செய்வேன். தேவையில்லாத பதட்டம், கவலை எல்லாத்தையும் போக்கும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு. களத்தில் ஓடி ஆடி நின்னு ஜெயிக்க யோகா எனக்கு எப்பவும் பக்கபலம்.

என்ன உணவு தினமும் எடுத்துக்கொள்கிறீர்கள்?

விளையாட்டு நிபுணர்கள் சொல்லும் டயட் தான். பெரும்பாலும் சைவ உணவுகள். நிறையக் காய்கறிகள், கொஞ்சமா நான்-வெஜ் சேர்த்துப்பேன். அந்தந்த சீசனில் கிடைக்கிற பழங்களைத் தவறாமல் சாப்பிடுவேன். நிறைய சாலட், பச்சைக் காய்கறிகளைத் தினமும் உணவில் சேர்த்துக்குவேன். கொழுப்பு இல்லாத பால், தயிர் சேர்ப்பேன். ஜங்க் ஃபுட்ஸ் பக்கம் போகவே மாட்டேன். ரொம்பக் குளிர்ச்சியான உணவு, டிரிங்க்ஸ் தவிர்த்திடுவேன். வெளியே சாப்பிடாமல் வீட்டில் அம்மா கையால் செஞ்ச சாப்பாட்டை விரும்பிச் சாப்பிடுவேன்.

- உமா ஷக்தி